May 18, 2009

வோடபோனுடன் பரிக்‌ஷித்



இப்போ ஒவ்வொரு நாளும் பரிக்‌ஷித்தின் குறும்பு அதிகமாயிட்டே போகுதுங்க. தூங்கும் போது மட்டும் தான் கையும் காலும் ரெஸ்ட் எடுக்குதுன்னு பார்த்தா அதுவும் இல்லை தூங்கி கிட்டே வித்தை காட்றார்:)


என்னதான் நான் பார்த்துகிட்டாலும் அவங்க அப்பாவைப் பார்த்தால் செல்லமாய் ஒரு சிணுங்கல் சிணுங்கி அவரை எடுக்க சொல்லி, அவர் எடுத்திட்டால் போதும் அப்படி ஒரு சிரிப்பும் கொண்டாட்டமும் வந்து குஷி ஆயிடறார்:) ஆனால் பாருங்க அந்த இடத்தில எனக்கு நோ வேல்யூ:((






வோடபோன் விளம்பரம் வந்துவிட்டால் அப்படியே அமைதியாக, சிரிச்சுகிட்டே அதையே கவனிக்கிறார். அது மட்டும் இல்லங்க நாங்களும் அதை பார்க்கிறோமானு எல்லோரையும் திரும்பி பார்க்கிறார்:) ஆதித்யா சேனலில் “ஆதித்யா பாரு”னு சொல்லி ஒரு குழந்தை சிரிக்கும் அந்த இடத்தில் இவரும் சிரிப்பார். இந்த விளம்பரம் மியூசிக் வந்திட்டால் அழுதுகொண்டு இருந்தால் கூட ஸ்டாப் பண்ணிட்டு பார்க்க ஆரம்பிச்சிடுவார்!


டெட்டிபியர்ன்னா ரொம்ப பிடிக்குது எனக்கில்லைங்க ...( எனக்கும் பிடிக்கும்ங்கறது வேற விசியம்) பரிக்‌ஷித்க்கு :)


அப்றம் ஒரு முக்கியமான விசியம்ங்க பின்னாடி பரிக்‌ஷித் ஒரு பெரிய்ய்ய்ய படிப்பாளியா வருவார்னு நினைக்கறேன் புக்ஸ்ன்னா ரொம்ப பிடிக்குது கண்ல பட்டிருச்சுன்னா அவ்ளோதான் அதை புரட்டி எடுத்து ஒரு வழி பண்ணிடுவார் டர்...டிர்..சர் என்ற சத்தங்களுடன்:))

20 கருத்துக்கள்:

சென்ஷி said...

மீ த ஃபஷ்டு :)

அபி அப்பா said...

நான் செகண்டு!

அபி அப்பா said...

மாப்பி போட்டோ போட்டிருக்கலாம்!

பழமைபேசி said...

இஃகிஃகி!!!

இராகவன் நைஜிரியா said...

விஷமம் பண்ணால்தான் குழந்தைகள்.

நல்லா விஷமம் பண்ணுகின்றார் என்பது கேள்விபட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கு.

இராகவன் நைஜிரியா said...

//இப்போ ஒவ்வொரு நாளும் பரிக்‌ஷித்தின் குறும்பு அதிகமாயிட்டே போகுதுங்க. //

சமத்து... ரொம்ப சமத்தா குறும்பு பண்ணுகின்றாரா... வெரி குட்... வெரி குட்.

நட்புடன் ஜமால் said...

சமத்து பிள்ளைன்னா இப்படித்தான் இருக்கோனும் ...

புதியவன் said...

குழந்தையின் குறும்புகள் இனிமையான கரும்புகள்...

ராமலக்ஷ்மி said...

அருமையா இருக்கு பரிக்‌ஷித் அப்டேட்ஸ். கொப்பளிக்கும் குறும்புகளை நாங்களும் ரசிக்கத் தாருங்கள் அடிக்கடி:)!

rose said...

குறும்புகள்தான் குழந்தையின் அழகே......

கோபிநாத் said...

கலக்கல் குட்டி தல ;)

கார்க்கிபவா said...

/ஒரு பெரிய்ய்ய்ய படிப்பாளியா வருவார்னு நினைக்கறேன்//

அப்ப அவன் அப்பா மாதிரின்னு சொல்லு

வால்பையன் said...

எல்லாரும் படிச்சு கிழிப்பாங்க!

இவரு கிழிச்சி படிப்பாரு போல!

gayathri said...

kozantaiku azake korumbu thane pannatum pannatum

அமிர்தவர்ஷினி அம்மா said...

பரிக்‌ஷித் தி க்ரேட்

G3 said...

:))))))))))))))

அப்துல்மாலிக் said...

குழந்தைகளின் குறும்பு ரசிக்கத்தக்கது

நல்லா என் ஜாய் பண்ணுறீங்க

தேவன் மாயம் said...

குழந்தையின் குறும்புகளை தொடர்ந்து எழுதவும்!!

Karthik said...

he is rocking ah? great!! :))

SUFFIX said...

//புக்ஸ்ன்னா ரொம்ப பிடிக்குது கண்ல பட்டிருச்சுன்னா அவ்ளோதான் அதை புரட்டி எடுத்து ஒரு வழி பண்ணிடுவார் டர்...டிர்..சர் என்ற சத்தங்களுடன்:))//

அந்த புக்ஸ் எல்லாம் அவருக்கு பிடிக்கலை போலும், நல்ல புக்ஸா வாங்கி கொடுங்க...(கொஞ்சம் காஸ்ட்லியா இருக்கட்டும்..ஹீ..ஹீ)