Nov 28, 2008

கையும் களவும்..
நெஞ்சத்தில்
தஞ்சமெனப் புகுந்து
களவாடுகயில்,
கையோடு பிடித்தும்
பயன் என்ன
கைதானது நானல்லவா!!

Nov 25, 2008

உண்மைத்துவம்

அனைவருடனும்
நன்றாய்ப் பழகு..
தீயவர்கள் எனத் தெரிந்தால்
தூர விலகு!

Nov 20, 2008

உயிரோடு மாய்கிறேன்..யாரோ உலுக்குவதை உணர்ந்து,
நிமிர்கையில் தான் தெரிந்தது
என்னைச் சுற்றி
என் வீட்டினர் நிற்பது..

"என்னவாயிற்று உனக்கு?"
தந்தையின் கேள்வி,
"ஒரு வேளை செவிடாயிட்டியோ?"
தங்கையின் நக்கல்,
"உடம்பு ஏதும் சரியில்லையா?"
பயந்த முகத்துடன்
அன்னையின் பாசம்..

பாவம்!
என்னைச் சுற்றி நிற்கும்
இவர்களுக்கு எப்படி தெரியும்
அவள் என்னை நிராகரித்து,
நான் உயிரோடு மாய்க்கப்பட்டிருக்கிறேன் என்பது!!

Nov 13, 2008

காத்திருந்தேன்.....இதற்க்காகவா?இதுவரை புரியவில்லை
இதுதான் காதல் என்று..
உணர்ந்து கொண்டேன்
உன்னைப் பார்க்காத தினமான இன்று!


காத்திருக்கிறேன் வெட்கத்தை வென்று,
பெண்ணாய் காலில் கோலமிட்டு,
என் நேசத்தை சொல்லப்போகும்
நாளைக்காக....
வரப்போகும் இடிசெய்தி அறியாமல்..


Nov 12, 2008

புதிர் போட்டி(1)- விடை

புதிர் போட்டி -1 க்கான விடையை இன்னும் 2 நாட்களில் நானே சொல்லலாம்னு இருந்தேன் அதர்க்குள் அதிரை ஜமால் கண்டுபிடிச்சிட்டார்... வாழ்த்துக்கள் ஜமால்.
அதிரை ஜமால் said...
1) 2 புலி
1.1) 1 புலி Return
2) 2 புலி
2.1) 1 புலி Return
3) 2 மான்
3.1) 1 புலி + 1 மான் Return
4) 2 மான்
4.1) 1 புலி Return
5) 2 புலி
5.1) 1 புலி Return
6) 2 புலி
அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லலாம் இங்கே. பரிசு கூட தரலாம்.

With in 2 Days

இன்னும் இரண்டு நாட்களில் புதிர்க்கான விடையை போடலாம்னு இருக்கேன்..அதர்க்குள் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்க..

Nov 5, 2008

புதிர் போட்டி -1

3-மான்கள்,3- புலிகள் ஒரு ஆற்றங்கரையில் நின்று கொண்டிருக்கின்றன. ஒரு படகு வழியா அவைகள் மறுகரைக்கு செல்லவேண்டும்.

நிபந்தனைகள்
1. படகில் 2 மட்டுமே செல்ல அனுமதி.

2. எந்தக் கரையில் இருந்தாலும் சரி புலிகளை விட மான்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் அல்லது சமமாக இருக்கலாம்.

3. புலிகளை விட மான்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் புலிகள் மான்களைத் தின்றுவிடும், அதனால் அப்படி இருக்கக்கூடாது .

சரி உங்க பதிலை பின்னூட்டத்திலே பார்க்கலாம்.

நாய்கள் ஜாக்கிரதை

எதையாவது பற்றி ஆராய்ச்சி பண்ணனும்ங்கரது என்னுடைய ரொம்ப நாள் கனவுங்க. இப்போதாங்க ஒரு சரியான டாபிக் கிடைச்சு இருக்குது. எங்கேயாவது நீங்க "நாய்கள் ஜாக்கிரதை"னு போர்டு பார்த்து இருக்கீங்களா? அது எதற்கு இப்போனு கேட்கறீங்களா? நம்ம டாபிக்கே அத பத்தி தாங்க. அதை எதற்கு வைத்து இருக்காங்கனு கரெக்ட்டான அர்த்தம் தெரியுமா உங்க யாராவதிர்க்கு? என் ஆராய்ச்சியோட சரியான ரிபோர்ட் ஒரு வழியா வந்தாசுங்க.


உங்களோட ரிபோர்ட்டையும் பின்னுட்டத்திலே போடுங்க. சரியான ரிபோர்ட் தருபவங்களுக்கு கேப்டன் கிட்ட சொல்லி ஒரு சீட்டு வாங்கி தரப்படும். கேப்டன் யாருன்னு தெரியுமில்ல.............. அதாங்க அவர்ர்ரு.....

ஆனா நீங்க ரிபோர்ட் எதுவும் ஸப்மிட் பண்ணலைனா பனிஷ்மென்ட் உண்டு. பனிஷ்மென்ட் என்னனு தெரியுமில்லையோன்னோ. அதாங்க நம்ம கேப்டன் இல்லை கேப்டன் அவர்கூட நீங்க மட்டும் ஒரு இருட்டறைக்குள்ள ஒரு நாள் முழுவதும் இருக்கணும். புரிந்ததா?

Nov 4, 2008

கிலுகிலுப்பை


ஒரு தினம் மதிய வேலை, முன் அறையில் அமர்ந்திருந்தேன் என் வீட்டினருடன். வெளியில் ஒட்டடை ஒட்டடை என்ற சப்தம் கேட்டுப் பார்தேன். ஒட்டடை குட்சிகள் விற்றுக்கொண்டு ஒரு அம்மா வந்து கொண்டிருந்தாள். உடன் கழுத்துடன் சேர்த்துக் கட்டிய ஒரு துணியில் அவள் குழந்தை. சின்னஞ் சிறு குழந்தை அழுது கொண்டே இருந்தது. பார்த்ததும் மனத்திற்குள் ஏதோ ஒரு புரியாத அழுத்தம். என்னைப் பார்த்ததும் , என் வீட்டின் முன் நின்று கொண்டாள். நான் வீட்டினுள் நுழைந்து 'அம்மா ஒட்டடை குட்சி வேணுமா?' என்றேன். எதற்கு? எல்லாம் இருக்கு வேண்டாம் என்றார். நானும் வெளியில் சென்று இருக்கு வேண்டாம் என்று சொன்னாலும் மனது கேட்கவில்லை. அம்மா பாவம்மா குழந்தை வேற இருக்கு வாங்கிக்கலாம்னு சொன்னேன்.

அம்மாவும் வந்து எவ்வளவுனு கேட்டாங்க. 35ரூபாய் வாங்கிக்கோங்க என்றாள். என் அம்மா 15ரூபாய்னா கொடு இல்லனா வேண்டாம்னு சொல்லிவிட்டு மாடி போர்ஸன்ல இருக்கிறவங்களை அழைத்தாங்க. அவர்கள் எல்லோரும் ஒட்டடை குட்சி வாங்குவதிலேயே குறியாக இருந்தார்கள். ஆனால் என் மனசு முழுவதும் அந்த அழுகிற குழந்தை தான் இருந்துச்சு. கைதட்டி அதனோட அழுகையை நிறுத்த முயற்சித்து வெற்றியும் அடைந்தேன். என்னைப் பார்த்து சிரித்தது. நானும் சிரித்தேன். அக்குழந்தைக்கு எதாவது தரணும்னு நினைத்தேன், ஆனா என்ன தருவதுணு தெரியலை. ஆறு மதக் குழந்தையாம். அழகாக அழுக்காக இருந்தது. வீட்டிற்க்குள் வந்து ஒவ்வொரு அறையாகத் தேடினேன் என்னவென்று தெரியாமல் ஏதேனும் தர எண்ணி. இரண்டு கிலுகிலுப்பை இருந்தது. அதில் ஒன்றை எடுத்துச் சென்றேன்.
எதற்கு இது? இதெல்லாம் அவங்ககிட்டயே இருக்கும், நம்ம வீட்டு குழந்தைக்கு வேணும்னு சொல்லிட்டாங்க அம்மா. கொடுத்திடலாம்மா நம்மகிட்டதான் இரண்டு இருக்கு இல்லனு சொன்னேன். போ உனக்கு ஒன்றும் தெரியாதுனு சொல்லிவிட்டு போயிட்டாங்க. கடைசியாக எல்லோரும் சேர்ந்து மொத்தமாக மூன்று ஒட்டடை குட்சி வாங்கி விட்டு 45 ரூபாய் கொடுத்தாங்க. 5ருபாய் மட்டும் சேர்த்துக் கொடுங்கனு கேட்டாள். யாரும் தரலை. 5ரூபாய் தான, குழந்தைக்கு ஏதாவது வாங்கித் தரட்டும் கொடுத்திடலாம்னு சொன்னேன். என் பேச்சு அவர்கள் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. எத்தனையோ செலவு பண்ணறோம் கொடுத்திடலாம்னு சொன்னேன். உனக்கு ஒன்றும் தெரியாது போனு சொல்லிட்டாங்க. அப்போ எனக்கு என்னதான் தெரியும்னு நினைக்கறீங்க என்று கேட்கிறேன் பதில் கூற எவரும் இல்லை அங்கே.