Jan 26, 2009

வெறுமை...


உன்
வாழ்க்கையெனும்
நாட்குறிப்பேட்டின்
ஒவ்வொரு
பக்கங்களிலும்
நிரம்பி வழியும்
வார்த்தைகளாகவே
இருக்க விரும்பினேன்!
ஆனால்
நீயோ
என்னை-அதில்
வெறும் பக்கமாக
வெற்றுப் பக்கமாக
மாற்றிவிட்டாய்!!

Jan 14, 2009

பொங்கல் 10


1) பொங்கலுக்கு கலைஞர் பொங்கல் செய்யும் பொருட்களை தருகிறார் அப்போ தீபாவளிக்கு தீபாவளி செய்யும் பொருட்களைத் தருவாரா?

2) பொங்கலுக்கு முந்தைய நாள் பழையதை எரிக்கனும் அப்படீனா பொங்கலுக்கு அடுத்த நாள் புதியதை எரிக்கனுமா?

3) தீபாவளி முடிந்து நிலாவுக்கு ராக்கெட் அனுப்பினாங்க அப்படீனா பொங்கல் முடிந்த பின் நிலாவில் பொங்கல் வைப்பார்களா?

4) தை ஒன்று பொங்கல் அன்று தமிழ் புத்தாண்டுனு கலைஞர் சொல்லிட்டார் அப்போ ஆங்கிலப் புத்தாண்ட எப்போ ஆகஸ்ட்டுக்கு மாத்துவார்?

5) தீபாவளி அன்று பொங்கல் செய்யலாம், பொங்கல் அன்று தீபாவளி செய்ய முடியுமா? ( இதை யாரவது பழசுன்னு சொன்னீங்க அவ்ளோ தான் சொல்லிபுட்டேன்)

6) "தீபாவளி" படம் வந்தாச்சு "பொங்கல்" படம் எப்போ வரும்?

7) பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப் பொங்கல் அப்போ தீபாவளிக்கு அடுத்தநாள் மாட்டு தீபாவளியா?

8) பொங்கலப்போ பொங்கல் வைக்கையில் பொங்கலோ பொங்கலுன்னு சொல்றோம் ஏன் யாரும் தீபாவளி அப்போ பட்டாசு வெடிக்கையில் தீபாவளியோ தீபாவளினு சொல்லுவதில்லை?

9) போகிப் பொங்கலுக்கு பழையதை எல்லாம் எரிக்கையில் ஏன் எல்லாப் பழையதையும் (வீட்டில் இருக்கும் தட்டுமுட்டு பொருட்கள், அப்புறம் நாம கூட பழசு தான) எரிப்பதில்லை?

10) இதையை எல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களோ? ( அட என்னைத் தாங்க சொல்லறேன்:) )

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Jan 12, 2009

வந்துட்டேன்...


ஊர் எல்லாம் நல்ல படியாக சுற்றியாகிவிட்டது விடுமுறையும் முடிந்து ப்ளாக் பக்கமும் வந்தாச்சு. அதற்குள் ஒரு வருடமே ஓடிவிட்டது பாருங்கள். பரவாயில்லையே எல்லோரும் ரொம்ப பாசக்கார மக்களா தான் இருக்கீங்க! சந்தோசமா இருக்கு. நான் இல்லாத நாட்களில் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தவர்கள் அனைவரையும் வன்மையாக கண்டிக்கிறேன். பிரவுசிங் போகலாம்னு நினச்சேன் ஆனா டைம் கிடைக்கவில்லை. ரொம்ப நாள் ஆச்சு இந்த பக்கம் வந்து. அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள். யாரும் தாரை தம்பட்டைகளுடன் வரவேற்றால் இன்னும் பெருமகிழ்ச்சி அடைவேன்:))