May 20, 2009

எப்படி இருக்கு?

கொஞ்ச நாட்களா ஒரு சூப்பரான டெம்ப்ளேட் செட் பண்ணனும்னு ஒரு எண்ணம் என் மனசுல ஓடிகிட்டே இருந்துச்சு....

ஆனால் பாருங்க என்கிட்ட ஒரு ரொம்ப நல்ல்ல்ல பழக்கம் ஒன்னு இருக்கு:)))) நான் என்ன செய்யனும்னு நினைச்சாலும் பக்கத்தில யாராவது இருக்கனும்.... எதுக்குனு கேட்கறீங்களா????? ஹி ஹி வேற எதுக்குங்க இது ஓக்கேவா.. இது நல்லா இல்லைலனு போட்டு பெணாத்தி எடுக்கத்தான்... ஆனால் அவங்க ஓக்கேன்னு சொன்னா நல்லாயில்லன்னு சொல்லுவேன். நல்லாயில்லன்னு சொன்னா சூப்பர்னு சொல்லுவேன். இருந்தாலும் யாராவது இருக்கனும் நமக்கு.

நமக்குன்னு இருக்கவே இருக்காங்க ஒருத்தங்க... அவங்க மாட்டனும் இல்ல அப்போ தான இந்த மாதிரி ஏதாவது ஒரு வேலை செய்யமுடியும்.... எப்போ நம்ம கைல மாட்டுவாங்கனு காத்துகிட்டு இருந்தேன்....

அந்த பொன்னான நாள் இன்னிக்கிதான்றத நான் சொல்ல வேண்டியதில்லை என் டெம்ப்ளேட் மாறியிருப்பதை வச்சே கண்டுபிடிச்சு இருப்பீங்க:))

சரிங்க என் புராணத்த படிச்சிட்டு ஓட்டு போடாம போயிடாதீங்க...




டிஸ்கி 1: யாரும் நல்லாயில்லைனு சொல்லிடாதீங்க....
டிஸ்கி 2: அப்படி சொல்லமுடியாதே... அதான் அந்த மாதிரி ஒரு ஆப்சனே வக்கலை:))

May 18, 2009

வோடபோனுடன் பரிக்‌ஷித்



இப்போ ஒவ்வொரு நாளும் பரிக்‌ஷித்தின் குறும்பு அதிகமாயிட்டே போகுதுங்க. தூங்கும் போது மட்டும் தான் கையும் காலும் ரெஸ்ட் எடுக்குதுன்னு பார்த்தா அதுவும் இல்லை தூங்கி கிட்டே வித்தை காட்றார்:)


என்னதான் நான் பார்த்துகிட்டாலும் அவங்க அப்பாவைப் பார்த்தால் செல்லமாய் ஒரு சிணுங்கல் சிணுங்கி அவரை எடுக்க சொல்லி, அவர் எடுத்திட்டால் போதும் அப்படி ஒரு சிரிப்பும் கொண்டாட்டமும் வந்து குஷி ஆயிடறார்:) ஆனால் பாருங்க அந்த இடத்தில எனக்கு நோ வேல்யூ:((






வோடபோன் விளம்பரம் வந்துவிட்டால் அப்படியே அமைதியாக, சிரிச்சுகிட்டே அதையே கவனிக்கிறார். அது மட்டும் இல்லங்க நாங்களும் அதை பார்க்கிறோமானு எல்லோரையும் திரும்பி பார்க்கிறார்:) ஆதித்யா சேனலில் “ஆதித்யா பாரு”னு சொல்லி ஒரு குழந்தை சிரிக்கும் அந்த இடத்தில் இவரும் சிரிப்பார். இந்த விளம்பரம் மியூசிக் வந்திட்டால் அழுதுகொண்டு இருந்தால் கூட ஸ்டாப் பண்ணிட்டு பார்க்க ஆரம்பிச்சிடுவார்!


டெட்டிபியர்ன்னா ரொம்ப பிடிக்குது எனக்கில்லைங்க ...( எனக்கும் பிடிக்கும்ங்கறது வேற விசியம்) பரிக்‌ஷித்க்கு :)


அப்றம் ஒரு முக்கியமான விசியம்ங்க பின்னாடி பரிக்‌ஷித் ஒரு பெரிய்ய்ய்ய படிப்பாளியா வருவார்னு நினைக்கறேன் புக்ஸ்ன்னா ரொம்ப பிடிக்குது கண்ல பட்டிருச்சுன்னா அவ்ளோதான் அதை புரட்டி எடுத்து ஒரு வழி பண்ணிடுவார் டர்...டிர்..சர் என்ற சத்தங்களுடன்:))

May 15, 2009

நண்பர்களே! கொஞ்சம் சீக்கிரம்...

மக்கா நாங்களும் PITக்கு போட்டோ புடிச்சிருக்கோம்... கொஞ்சம் சீக்கிரம் செலக்ட்டி கொடுத்தீங்கன்னா சந்தோசப்படுவேன்:)


1)

2)

3)

4)

5)

6)

7)

8)

9)

10)

11)

May 9, 2009

50-50



ஹாய் பிரண்ட்ஸ்:)




காலைல நேரமா எழுந்து குளிச்சு போட்டோக்கு போஸும் கொடுத்திட்டு இருக்கேன்.......ஆனா பாருங்க போட்டோ எடுக்கிறவங்க தான்ன்ன்ன்....




படம் எடுக்கலாம்னு இருக்கிறவங்க என்னை இப்போவே புக் செய்துக்கோங்க.. அப்றம் நான் ரொம்ப பிசியா இருப்பேன்...




நான் அம்மா போலவே சமத்து!




தயிர் சாதம் யாருக்கு எல்லாம் வேணும்??




அப்பா, அம்மாவ ஒழுங்கா சாப்பாடு ஊட்டி விட சொல்லுங்க... சாப்பிடும் போதுகூட போட்டோ எடுக்கறேன்னு இம்சை பண்றாங்க:((


டிஸ்கி: 50 வது பதிவு ஸ்பெசலா இருக்கனும்னு ரொம்ப நாளா யோசிச்சு எழுதிகூட வச்சிட்டேன்.. ஆனால் அது இதை விட ஸ்பெசலா இருக்கும்னு தோனலை அதான் சஞ்சய் அண்ணா கேட்ட மாதிரி பரிக்‌ஷித்தின் படங்களையே போட்டுட்டேன்!