Dec 29, 2008

மாப்ள இத வாங்கின கடையில தான் ...

இதனால் சகல பதிவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்

ஜனவரி பத்தாம் தேதி வரை என்னுடைய தொந்தரவுகள் இல்லாமல் நீங்கள் நிம்மதியா
இருக்கலாம்.


'சாரல்' காற்று இல்லாமல் எல்லோரும் சவுக்கியமா இருக்கலாம்.தீக்காயம் எப்படிங்க ஆச்சி

ஆட்டம் பாமை பத்த வெச்சப்போ, மழைச் 'சாரலில்' நனையாம இருக்க பக்கத்துல நின்னு
குடை பிடிச்சேன்.

இப்படியெல்லாம் பன்னிடாதிங்கோ ...

அப்புறம் 'சமையல்' பற்றி ஒரு பதிவு ஓடிக்கிட்டிருக்கு

எங்க சமையலை கிண்டல் ...

ரங்கமணி, தங்கமணியின் வீட்டிற்கு சாப்பிட சென்றிருந்தார்

மிகவும் ருசியாக சமையல் இருந்தது

நன்றாக சாப்பிட்டார் ரங்கமணி, எல்லாம் முடிந்துவிட்டது மீண்டும் வேண்டும்
என கேட்க நினைத்தார்

ஆனால் கூச்சம் காரணமாக

'அத்த இந்த தட்டு எங்க வாங்கியது' என்று தட்டை தட்டி கேட்டார்

உள்ளிருந்து அவர் அத்தை 'மாப்ள இத வாங்கின கடையில தான் அதையும்
வாங்கினோம்' என்று வெற்று பானையை கரண்டியால் தட்டி காட்டினார் ...

நல்லாருங்கோ ...

Dec 25, 2008

Christmas Wishes ..


Merry christmas to all...

Dec 23, 2008

பட பட பட்டாம்பூச்சிபட்டாம்பூச்சி விருது கிடைச்சிருக்குங்க. அட சத்தியமாத்தாங்க சொல்றேன் நம்புங்க. எனக்கு விருது கொடுத்த மாமனிதர், சிரிக்க வைக்கும் சித்தர் விஜய் அவருக்கு எனது நன்றிகள்.

இந்த விருதை பத்திரமா வச்சு பரிக்க்ஷீத்திற்கு காட்டலாம்னு இருந்தேன். ஆனா நீ மட்டும் வச்சு கிட்டா எப்பிடி பங்கு போட்டு கூலான பிளாக்கிற்கு கொடுத்திரனும்னு சொல்லிட்டாங்க.

வெட்டி வம்பு மாதிரியே புதிய பிளாகர்களை ஊக்குவிக்கும் படி 3 பேரை தேர்வு செய்திருக்கேன்..

புதியவன் - அழகழகான கவிதைகளையும் அதற்க்கு பொருத்தமான படங்களையும் போட்டு தாக்குபவர்.

சாளரம் கார்க்கி - இவர் இன்னது தான்னு இல்லாம என்ன வேணாலும் போட்டு கலக்கும் கலக்கல் மன்னர்.

ரம்யா - வைகைப் புயலை ஒரு வழி பண்ணாம விடமாட்டார் போல.

இவங்க 3 பேரும் செய்ய வேண்டியது

*இந்த பட்டாம்பூச்சி படத்த ப்ளாக்ல போட்டுடனும்.
*உங்களுக்கு பங்கு பிரிச்சுக் கொடுத்த இந்த நல்லவரை மறந்திடக்கூடாது.
*நீங்களும் என்னை மாதிரியே நல்ல மனதோட யாருக்காவது பங்கை சரியா கொடுத்திரனும்.
*லிங்க் எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கோங்க ( அட என் பிளாக்ல இல்லை உங்க பிளாக்ல).

டிஸ்கி 1: விஜய் நீங்க சொல்லாமலே உங்கள் ப்ளாக்கை எப்பிடி விளம்பரம்(2 முறை ) பண்ணி இருக்கேன்னு பார்த்திங்களா!!

டிஸ்கி 2:இந்த விளம்பரத்திற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது.

Dec 22, 2008

காதலுடன்...சேகரித்திருந்த
கிழிந்த கிழமைகளில்
குவிஆடியாய்
உன்னைப்பற்றிய நினைவுகள்
பூதாகரப்படுத்தி பறக்கின்றன!
உனது பயண
முடிச்சுகளில்
நீ கொடுத்த ஆனந்தமும்
எனது சிரிப்புகளும்
பத்திரமாய் இருக்கிறது
உன்னருகில்...
நான் மறைத்து
வைத்துள்ள
நினைவுகளின்
சிறகுகளில்
உனது முகம் மட்டுமே!எனது
விடியல்
உனது முகத்திலும்,
எனது உறக்கம்
உனது மார்பிலும்
சேர்ந்திருந்தது.
இப்போது உறக்கமும் விடியலும்
என்னிடமிருந்து
தனித்து,
தள்ளி நிற்கின்றன.வேதனைகள்
எழுத்துகள் அறியாது,
விம்மல்கள்
வார்த்தைகள் வடிக்காது,
நெஞ்சம் கனப்பதை
கண்கள் உரைக்காது,
கண்கள் பனிப்பதை
கணவா நீ உணரு!!நமக்கான நாட்களை
சேகரிக்கிறேன்
நீ வரும் நாளில்
உன் முகம் தெரியும்வரை!!!இன்று நம்மை
இணைத்த நாளின்
மறுபிறவி..........
...................
..........ஆயினும்
சந்தோஷத்
தாண்டவமாடும்
மனதுடன்
ஆயிரமாயிரம்
முத்தங்களை
தேக்கி........
நம் காதல்
பரிசை
கையில் வைத்தபடி
பார்த்து நிற்கிறேன்
உன்னைக் காணப் போகும்
நாளைத் தேடியபடி!!!

Dec 17, 2008

ரசி ருசிரசிச்சு ருசிச்சிட்டு கையோட வோட்டையும் போட்டுட்டு போங்க. உண்ட மயக்கத்தில் இருப்பவர்கள் தெளிந்ததும் போடுங்க ..

Dec 15, 2008

மௌன ராகம்
ஒரு பத்து பதினைந்து நாட்களுக்குள் 3முறை பார்த்திட்டேன் இப்படத்தை. இரண்டாவது முறை பார்க்கும் பொழுது இதைப் பற்றி நாம பதிவுல பேசினா என்னனு யோசிச்சேன் அப்புறம் அப்படியே விட்டுட்டேன் (பிஸி) . 3வது முறை டிவில போடவும், (ஆஹா இது நம்மலுக்காகவே போட்டிருக்காங்கய்யா) சரி போட்டுடலாம்னு தீர்மானுச்சிட்டேன் ( யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெருக-- அம்புட்டு நல்லவுக நாங்க). இதிலிருந்து நீங்க ஒரு நல்ல விசியத்த புருஞ்சுக்கனும் ( நீ முதல்ல சொல்லு அது நல்லதா, கெட்டதானு நாங்க பார்த்துகரோம்னு சொல்லறது காதுல விழுது). அதாவது நாம எதையுமே யோசிச்சுட்டே இருக்காம கன்னா பின்னானு செயல்ல இறங்கிடனும்(கருத்துங்கோ!! ).சரி நாம படத்தைப் பற்றி பேசலாமா? ( வந்த வேலைல கர்க்கிட்டா இருப்போம்ல). படத்தோட டைரடக்டர் சாரிங்க டங்க்கு சிலிப் ஆயிருச்சு டைரக்டர் யாருன்னு ஊருக்கே, இல்லை இல்லை உலகத்துக்கே தெரியும். ஆனாலும் சொல்லிடலாம் அது நம்ம மணி ரத்னம் தான்னு ( செய்யற வேலைய ஒழுங்கா செய்யனுமுன்னு எங்க... எங்க.. யாரும் சொல்லலை நான் தான் சொல்றேன்).


நடித்திருப்பதில் முக்கியமானவர்கள் கார்த்திக்- மனோ ( நம்ம கமலுக்கு அடுத்த காதல் மன்னருங்கோகோகோ---- (எக்கோ) ), ரேவதி-திவ்யா , மோகன்-சந்திர குமார் ( மைக் மன்னர்)

எதார்த்தமான மிடில் க்ளாஸ் குடும்பத்துக்குள் நடக்கும் கலாட்டாவோட ஆரம்பிச்சு, பொண்ணுக்கு பிடிக்காத, வீட்டிற்க்குப் பிடித்த திருமணம். இந்த இடத்தில் ஒரு முக்கியமான விசியத்த நான் சொல்லியே ஆகணும். ரேவேதி, மோகன் திருமணம் முடிந்த இரவு ரேவதி அவங்க அம்மாவிடம் கேட்கும் கேள்விகள் அப்பாவிதனமாகவும், ஏற்றுக் கொள்ளவேண்டிய உண்மையாகவும் இருக்கும் ( இதைப் பற்றி தனியா ஒரு பதிவு போட்டு பேசலாம்).மோகன் ஒரு நல்ல கணவரா (அநியாயத்துக்கு) வந்திருக்கார். உரையாடல்கள் அளவாகவே ("ஆற்றில் போட்டாலும் அளந்து போடு") அளவாகவே இருக்கு. எங்கேயும் தேவை இல்லாத வசனம்னு ஏதும் இருக்கிற மாதிரி எனக்கு தெரியலை. ரேவதி, " நீங்க தொட்டா கம்பளி பூச்சி ஊரர மாதிரி இருக்குனு சொல்லும் காட்சி அருமையா இருக்கும். பின்னாடி அவங்களுக்கே மோகன் ரிப்பீட்டு அடிப்பது அட்ரா சக்கைனு சொல்ல வைக்குது. ரேவதி, திவ்யாவா நல்லா நடிச்சு இருக்காங்கனு சொல்வதை விட வாழ்ந்திருக்காங்கனு சொல்வதே பொருந்தும்.


கார்த்திக், ரேவதி காட்சிகள் வெறும் 20 அல்லது 25 நிமிடங்கள் மட்டுமே என்றாலும் மனசுக்குள்ள பச்சக்குன்னு ஒட்டிகிச்சு ( கோந்தான்னு கேட்காதீங்க!!) கார்த்திக்கின் சண்டையும் சரி, காதலும் சரி அவ்ளோ அழகா வந்திருக்கு. குறிப்பா சொல்லனும்னா அந்த ரெஸ்டாரன்ட் காட்சி. டைரக்டர் அப்பவே வீட்டுக்குத் தெரியாம பதிவுத் திருமணத்தை ( திருட்டு கல்யாணம்ங்கோ!!) நடத்த முடியாம போனதால பின்னாடி அதை வைத்தே ஒரு படம் எடுத்திட்டார்.


கிளைமாக்ஸ்ல இருவரும் மௌனமாக மனதிற்குள் பேசுவது ரொம்ப நல்லா இருக்கு.


பாடல்கள் எல்லாமே கலக்கல். இளையராஜானா சும்மாவா? பனி விழும் இரவு, மன்றம் வந்த பாடல்களின் மெட்டும், வரிகளும் பிரமாதம். கார்த்திக் வரும் காட்சிகளுக்கு அமைத்திருக்கும் இசை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.


எத்தனையோ முறை இப்படத்தை பார்த்தாயிற்று ஆனாலும் பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காட்சிகளும் புதுசாவே தெரியுது.


பி.கு1. ஏதாவது தவறு இருக்குன்னு நினைத்தால் சொல்லுங்க அடுத்த முறை சரி பண்ணிடலாம்.

பி.கு2. உங்கள் ஓட்டை உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு மட்டும் போட்டுவிட்டு போகாம தமிலிஷ்லையும், தமிழ் மணத்திலையும் சேர்த்து குத்தவும்.

Dec 11, 2008

குறுஞ்செய்தி கலாட்டா-1என்னையும் மனுசியா மதிச்சு குறுஞ்செய்திகள் அனுப்புவது என் சகோதரிகள் (கசின்ங்கோ ----- நன்கு கவனிக்கவும் அசின் இல்லை கசின்) இருவர் மட்டுமே ( யப்பாடா ஒரு வழியா என்னையும் மனுசங்க லிஸ்ட்ல சேர்த்துகிட்டாங்கோ! ).. இருவரும் போட்டி போட்டுக் கொண்டு அனுப்புவார்கள். அதில் சில மொக்கைகள் உங்களுக்காக..1) யார் மனசிலே யாரு

மில்க் மனசிலே தயிரு
தயிர் மனசிலே மோரு
மோர் மனசிலே வேற யாரு
நீதான் வெண்ணை

2) SMS full form

S-சிங்கக்குட்டி அனுப்பி
M-மங்கிகுட்டி படிக்கும்
S-ஸ்மால் இன்ப்ர்மேசன்

3) காற்றில் பறந்த
அவள் துப்பட்டா
என்மீது விழுந்த பொழுது
மன்னிப்புக் கேட்டாள்
என்னிடம்,
நன்றி சொன்னேன்
நான்,
பைக் துடைக்க
துணி கிடைத்தது என்று..

4) நீங்கள் சிரிக்கும்
ஒவ்வொரு வினாடியும்
உங்களை விட்டு
உங்கள் மரணம்
விலகிச் செல்கிறது
ஆனால்
மற்றவர்களுக்கு மரணம்
நெருங்குகிறது
அதனால பிரஷ்
பண்ணிட்டு சிரிங்க...

5) நோயாளி : ஹாய் நர்ஸ் நீ என் இதயத்தை திருடிவிட்டாய்

நர்ஸ் : போடா டாக்டர் உன் கிட்னியையே திருடிவிட்டார்..


6) லவ் பண்ணறவங்களை கண்டறிய டாப் 10 டிப்ஸ்

10. போன் வந்தா தனியா போவாங்க ..
9. ஒற்றை எழுத்துல நெம்பரை ஸ்டோர் பண்ணி வச்சிருப்பாங்க
8. யாருக்கும் குறுஞ்செய்தி அனுப்பமாட்டாங்க.
7. யார் கையிலையும் கைப்பேசியை தரமாட்டாங்க.
6. அடிக்கடி ரீச்சார்ச் பண்ணுவாங்க.
5. யாருமில்லாத அறையில விளக்கை அனைச்சிட்டு உட்கார்ந்திருப்பாங்க.
4. அடிக்கடி மிஸ்டு கால் வரும்.
3. எல்லாரும் தூங்குகிற நேரத்தில விழித்துக்கிட்டு இருப்பாங்க.
2. சொல்லுப்பா, என்னடானு ஆக்டர் ஆட்டோகிராஃப் சேரன் மாதிரி பேசுவாங்க.
கடைசியா
1. போன்ல யாருனு கேட்டா 7G ரவிகிருஷ்ணா மாதிரி சிரிப்பாங்க..

தீபத் திருநாள்


அனைவருக்கும் தீபத் திருநாள் வாழ்த்துக்கள்...


மனிதகுலம் மட்டுமன்றி,
வாய்பேசா உயிரினங்களின்
வாழ்விலும்
ஒளிவீச எண்ணி
வேண்டுவோம் இறைவனை!!!

Dec 8, 2008

பரிக்க்ஷீத்தின் நூறாவது நாள்..09-12-2008 செவ்வாய் கிழமை அன்று எங்கள் அழகுக் கவிதை பரிக்க்ஷீத் 100 வது நாளை தொடுகிறார்.. பதிவுலக மக்கள் தங்கள் ஆசிகளை வழங்கி வாழ்த்துமாறு அன்புடன் கேட்பது,

அப்பா சரவணன்,
அம்மா பூர்ணிமா சரவணன்,
மற்றும் தாத்தா, பாட்டிகள்..

Dec 4, 2008

சொல்லாமலே..ஏதேதோ நினைத்து வரும் என்னிலிருந்து...

உன்னிடம் வர
எண்ணி எத்தனிக்கும்
கால்கள் இரண்டும்
பின்னோக்கி செல்வதும்,

உன் ஒரு பார்வையில்
முன்னிரவிலிருந்து
சேர்த்து வைத்த
வார்த்தைகள் யாவும்
மழைத்துளியென உருண்டோடுவதும்

உன் நிலா முகம்
பார்க்க நிற்கையில்
தூரத்தில் வந்துகொண்டிருக்கும்
உன் வாசம்
என் நாசியில் நுழைந்து
பூரணமாய் உணர்வதர்க்குள்
நீ என்னை கடந்து போவதும்

அழுவதும், சிரிப்பதும்
குழந்தைகளிடம்
தடுக்க முடியாதது போல்
வாடிக்கையாகிவிட்டது..

Nov 28, 2008

கையும் களவும்..
நெஞ்சத்தில்
தஞ்சமெனப் புகுந்து
களவாடுகயில்,
கையோடு பிடித்தும்
பயன் என்ன
கைதானது நானல்லவா!!

Nov 25, 2008

உண்மைத்துவம்

அனைவருடனும்
நன்றாய்ப் பழகு..
தீயவர்கள் எனத் தெரிந்தால்
தூர விலகு!

Nov 20, 2008

உயிரோடு மாய்கிறேன்..யாரோ உலுக்குவதை உணர்ந்து,
நிமிர்கையில் தான் தெரிந்தது
என்னைச் சுற்றி
என் வீட்டினர் நிற்பது..

"என்னவாயிற்று உனக்கு?"
தந்தையின் கேள்வி,
"ஒரு வேளை செவிடாயிட்டியோ?"
தங்கையின் நக்கல்,
"உடம்பு ஏதும் சரியில்லையா?"
பயந்த முகத்துடன்
அன்னையின் பாசம்..

பாவம்!
என்னைச் சுற்றி நிற்கும்
இவர்களுக்கு எப்படி தெரியும்
அவள் என்னை நிராகரித்து,
நான் உயிரோடு மாய்க்கப்பட்டிருக்கிறேன் என்பது!!

Nov 13, 2008

காத்திருந்தேன்.....இதற்க்காகவா?இதுவரை புரியவில்லை
இதுதான் காதல் என்று..
உணர்ந்து கொண்டேன்
உன்னைப் பார்க்காத தினமான இன்று!


காத்திருக்கிறேன் வெட்கத்தை வென்று,
பெண்ணாய் காலில் கோலமிட்டு,
என் நேசத்தை சொல்லப்போகும்
நாளைக்காக....
வரப்போகும் இடிசெய்தி அறியாமல்..


Nov 12, 2008

புதிர் போட்டி(1)- விடை

புதிர் போட்டி -1 க்கான விடையை இன்னும் 2 நாட்களில் நானே சொல்லலாம்னு இருந்தேன் அதர்க்குள் அதிரை ஜமால் கண்டுபிடிச்சிட்டார்... வாழ்த்துக்கள் ஜமால்.
அதிரை ஜமால் said...
1) 2 புலி
1.1) 1 புலி Return
2) 2 புலி
2.1) 1 புலி Return
3) 2 மான்
3.1) 1 புலி + 1 மான் Return
4) 2 மான்
4.1) 1 புலி Return
5) 2 புலி
5.1) 1 புலி Return
6) 2 புலி
அவருக்கு வாழ்த்துக்கள் சொல்லலாம் இங்கே. பரிசு கூட தரலாம்.

With in 2 Days

இன்னும் இரண்டு நாட்களில் புதிர்க்கான விடையை போடலாம்னு இருக்கேன்..அதர்க்குள் கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்க..

Nov 5, 2008

புதிர் போட்டி -1

3-மான்கள்,3- புலிகள் ஒரு ஆற்றங்கரையில் நின்று கொண்டிருக்கின்றன. ஒரு படகு வழியா அவைகள் மறுகரைக்கு செல்லவேண்டும்.

நிபந்தனைகள்
1. படகில் 2 மட்டுமே செல்ல அனுமதி.

2. எந்தக் கரையில் இருந்தாலும் சரி புலிகளை விட மான்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் அல்லது சமமாக இருக்கலாம்.

3. புலிகளை விட மான்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் புலிகள் மான்களைத் தின்றுவிடும், அதனால் அப்படி இருக்கக்கூடாது .

சரி உங்க பதிலை பின்னூட்டத்திலே பார்க்கலாம்.

நாய்கள் ஜாக்கிரதை

எதையாவது பற்றி ஆராய்ச்சி பண்ணனும்ங்கரது என்னுடைய ரொம்ப நாள் கனவுங்க. இப்போதாங்க ஒரு சரியான டாபிக் கிடைச்சு இருக்குது. எங்கேயாவது நீங்க "நாய்கள் ஜாக்கிரதை"னு போர்டு பார்த்து இருக்கீங்களா? அது எதற்கு இப்போனு கேட்கறீங்களா? நம்ம டாபிக்கே அத பத்தி தாங்க. அதை எதற்கு வைத்து இருக்காங்கனு கரெக்ட்டான அர்த்தம் தெரியுமா உங்க யாராவதிர்க்கு? என் ஆராய்ச்சியோட சரியான ரிபோர்ட் ஒரு வழியா வந்தாசுங்க.


உங்களோட ரிபோர்ட்டையும் பின்னுட்டத்திலே போடுங்க. சரியான ரிபோர்ட் தருபவங்களுக்கு கேப்டன் கிட்ட சொல்லி ஒரு சீட்டு வாங்கி தரப்படும். கேப்டன் யாருன்னு தெரியுமில்ல.............. அதாங்க அவர்ர்ரு.....

ஆனா நீங்க ரிபோர்ட் எதுவும் ஸப்மிட் பண்ணலைனா பனிஷ்மென்ட் உண்டு. பனிஷ்மென்ட் என்னனு தெரியுமில்லையோன்னோ. அதாங்க நம்ம கேப்டன் இல்லை கேப்டன் அவர்கூட நீங்க மட்டும் ஒரு இருட்டறைக்குள்ள ஒரு நாள் முழுவதும் இருக்கணும். புரிந்ததா?

Nov 4, 2008

கிலுகிலுப்பை


ஒரு தினம் மதிய வேலை, முன் அறையில் அமர்ந்திருந்தேன் என் வீட்டினருடன். வெளியில் ஒட்டடை ஒட்டடை என்ற சப்தம் கேட்டுப் பார்தேன். ஒட்டடை குட்சிகள் விற்றுக்கொண்டு ஒரு அம்மா வந்து கொண்டிருந்தாள். உடன் கழுத்துடன் சேர்த்துக் கட்டிய ஒரு துணியில் அவள் குழந்தை. சின்னஞ் சிறு குழந்தை அழுது கொண்டே இருந்தது. பார்த்ததும் மனத்திற்குள் ஏதோ ஒரு புரியாத அழுத்தம். என்னைப் பார்த்ததும் , என் வீட்டின் முன் நின்று கொண்டாள். நான் வீட்டினுள் நுழைந்து 'அம்மா ஒட்டடை குட்சி வேணுமா?' என்றேன். எதற்கு? எல்லாம் இருக்கு வேண்டாம் என்றார். நானும் வெளியில் சென்று இருக்கு வேண்டாம் என்று சொன்னாலும் மனது கேட்கவில்லை. அம்மா பாவம்மா குழந்தை வேற இருக்கு வாங்கிக்கலாம்னு சொன்னேன்.

அம்மாவும் வந்து எவ்வளவுனு கேட்டாங்க. 35ரூபாய் வாங்கிக்கோங்க என்றாள். என் அம்மா 15ரூபாய்னா கொடு இல்லனா வேண்டாம்னு சொல்லிவிட்டு மாடி போர்ஸன்ல இருக்கிறவங்களை அழைத்தாங்க. அவர்கள் எல்லோரும் ஒட்டடை குட்சி வாங்குவதிலேயே குறியாக இருந்தார்கள். ஆனால் என் மனசு முழுவதும் அந்த அழுகிற குழந்தை தான் இருந்துச்சு. கைதட்டி அதனோட அழுகையை நிறுத்த முயற்சித்து வெற்றியும் அடைந்தேன். என்னைப் பார்த்து சிரித்தது. நானும் சிரித்தேன். அக்குழந்தைக்கு எதாவது தரணும்னு நினைத்தேன், ஆனா என்ன தருவதுணு தெரியலை. ஆறு மதக் குழந்தையாம். அழகாக அழுக்காக இருந்தது. வீட்டிற்க்குள் வந்து ஒவ்வொரு அறையாகத் தேடினேன் என்னவென்று தெரியாமல் ஏதேனும் தர எண்ணி. இரண்டு கிலுகிலுப்பை இருந்தது. அதில் ஒன்றை எடுத்துச் சென்றேன்.
எதற்கு இது? இதெல்லாம் அவங்ககிட்டயே இருக்கும், நம்ம வீட்டு குழந்தைக்கு வேணும்னு சொல்லிட்டாங்க அம்மா. கொடுத்திடலாம்மா நம்மகிட்டதான் இரண்டு இருக்கு இல்லனு சொன்னேன். போ உனக்கு ஒன்றும் தெரியாதுனு சொல்லிவிட்டு போயிட்டாங்க. கடைசியாக எல்லோரும் சேர்ந்து மொத்தமாக மூன்று ஒட்டடை குட்சி வாங்கி விட்டு 45 ரூபாய் கொடுத்தாங்க. 5ருபாய் மட்டும் சேர்த்துக் கொடுங்கனு கேட்டாள். யாரும் தரலை. 5ரூபாய் தான, குழந்தைக்கு ஏதாவது வாங்கித் தரட்டும் கொடுத்திடலாம்னு சொன்னேன். என் பேச்சு அவர்கள் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. எத்தனையோ செலவு பண்ணறோம் கொடுத்திடலாம்னு சொன்னேன். உனக்கு ஒன்றும் தெரியாது போனு சொல்லிட்டாங்க. அப்போ எனக்கு என்னதான் தெரியும்னு நினைக்கறீங்க என்று கேட்கிறேன் பதில் கூற எவரும் இல்லை அங்கே.

Oct 30, 2008

முதல் கதை


அடுத்து முதல் முதலா ஒரு கதை போடலாம்னு இருக்கேன் அதை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க மக்களே??

என் நினைவான உன்

உன் இடம் அறிந்தவுடன்,
உன் நிழலை மட்டும்
பார்த்து வந்த என் கண்கள் துடித்தது
என் நினைவான உன்னைக் காண..
ஆனாலும்,
என்னால் எட்டி நின்று பார்க்க மட்டுமே முடிந்தது
பெண்ணே உன்னை!

என்றாவாதேனும் காண்பேன் உன்னை,
அன்று வாழ்க்கையை தொடங்குவேன்
உன்னோடு!
என்றிருந்த நான்
வாழ்க்கையே முடிந்து விட்டதாய்
உணர்ந்தேன் இன்று..

போகட்டும் வேதனைகள் என்னோடு மட்டுமே!
உன் கண்ணில் பட்டு
உன் கண்ணீராக வழிய விரும்பவில்லை
நான்..
போகட்டும் வேதனைகள் என்னோடு மட்டுமே!

அடி பெண்ணே!
என்ன இது!
தியாகம் செய்வதாக நினைப்போ!
தமக்கையின் பிள்ளைக்காக உன் வாழ்க்கையை
வாழ்வு முடிந்து போன அவள்
கணவனோடு இணைத்துவிட்டாயே!

எப்படியடி முடிந்தது உன்னால்
என் நினைவினை அழித்துக்கொண்டு வாழ?

என்னால் எப்படியடி முடியும் நீ இல்லாத வாழ்க்கையை வாழ?

கடந்து சென்ற நாட்களில்,
எப்படியேனும் காண்பேன் உன்னை,
வாழ்வோம் சேர்ந்தென்ற நினைப்பினில் தானே வாழ்ந்தேன்..

என் உயிரே!
என் கண்ணே!
நான் என் வாழ்க்கையை எண்ணி வருந்தவில்லை..
வரப்போகும் நாட்களை நினைத்து அழுகிறேன்..

அன்றைய உன் முதல் சந்திப்பு,
இன்றும் என் நெஞ்சில்
இன்பச் சுமைகளாய்..

சேர்ந்தே பல வருடங்கள் படித்தோம்
அதில்,
மொத்தமாக ஒற்றை வார்த்தையை
என் பெயர் சொல்லி அழைத்தத்தில்
உலகமே என்னுள் அடங்கிவிட்டதாய் எண்ணி
பார்த்த பின்பு தான் தெரிந்து கொண்டேன்
என் பெயர் கொண்ட
உன் அண்டை வீட்டுச் சிறுவனை அழைத்தாய் என்று.
ஏமாற்றம் என்றாலும்
இன்பமாகத்தான் இருந்தது!

வெறும் கண்களால் மட்டுமே
பேசித் தொடர்ந்த நம் காதல்
உனக்குள்ளும் நான் இருந்தேன் என்பது
எனக்கும் தெரிந்ததே!
வாய் திறந்து என் காதலை
உன்னிடம்
சொல்லவில்லை என்றாலும்,
உன் பார்வையிலேயே நீ என்னை
ஏற்றுக் கொண்டாய் என்பதை நானும் அறிந்தே இருந்தேன்.

காணும் ஒவ்வொரு நாட்களும்
உன்னிடம்
பேசவேண்டுமென நினைத்துக் கொண்டுதான் வருவேன்
ஆனால்
நீ பார்க்கும் அந்த பார்வையில்
நான்
கரைந்து நின்று ஊமையாகிவிடுவேன்..

உன் ரெட்டை ஜடை,
ஒற்றைச் சிரிப்பு,
ஒரப் பார்வை,
மௌன மொழி
இதற்காக மட்டுமே
உன்னோடு பள்ளியில் படித்தேன் எனலாம்..

மூன்று வருடங்கள்
பார்த்துப் பார்த்து
நெஞ்சில் புதைந்து போன உன் முகம்,
பார்த்துப் பார்த்தே
வளர்ந்த நம் காதல்
வெறும் பார்வையிலேயே
போய் விட்டது நாட்கள்.

பள்ளிக் கடைசி தினத்திலாவது,
உன்னோடு
பேசிவிடவேண்டும் என்று எண்ணி வந்த
நான் பார்த்த காட்சி என் இருக்கையில் அமர்ந்து,
தலை சாய்த்து
தொடர்ந்த உன்
இரண்டு மணி நேர அழுகை.

அப்பொழுதும் வாய் திறக்காமல்
பார்த்துக் கொண்டுதான் நின்றிருந்தேன்..

முதல் முறையாக
உன்னைப் பார்க்க முடியாமல்
தலை கவிழ்ந்து நின்றதும் அன்றுதான்.. அருகில் வந்து
உன்னிடம்,
உன் பெயரை
முதல் முறையாக அழைத்தேன்..

அப்பொழுது,
நீ
பேச முடியாமல் தவித்த தவிப்பு.. எத்தனை நேரம் அசையாமல் அப்படியே
நின்றிருந்தேன் தெரியவில்லை.. நினைவு வந்து
பார்த்த போதுதான் தெரிந்தது
நீ அழுத அழுகைக்கு
சாட்சியாக
உன் கணக்கு புத்தகத்தை விட்டுச் சென்றிருந்தாய்!

அதிகமாக அழ முடிந்த உன்னால்
அளவாகத்தான் எழுத முடிந்திருந்தது
அதில்- "உனக்காக காத்திருப்பேன்"!

சேர்வோம் என்ற நம்பிக்கையில்
பிரிந்தோம் அன்று.
ஆனால் இன்று??

அன்று பேசாத நான் இன்றும் பேசாமல் இப்பொழுதும் அதே உன் நினைவோடு செல்கிறேன்..

உன்னை என்னுள் வைத்து என்னை இன்னொருத்திக்குத் தர முடியாது என்னால்....

உன் நினைவுகளுடன் நான்!..

Oct 14, 2008

உண்மைத்துவம்

அழகானவர்கள் எல்லாம் அன்பானவர்கள் அல்ல..

என் காதலானது..

அடி பெண்ணே!

குப்பை தொட்டி கூட என்னை

காதலித்து இருக்கும்,

நீ கிழித்து போட்ட கடிதங்களை

படித்து இருந்தால்...

உன்னால்

விடியும் வரை காத்திருந்தேன்
கனவில் நீ வருவாய் என்று!
ஆனால்,
மறந்து விட்டேன் உறங்க
உன் நினைவால்!!

Oct 13, 2008

காதல்

தோற்றுப் போகிறேன்
நான்,
உன் ஒரு புன்னகையில்!!

நானும் நீயும்

நான் மட்டும்
நடந்து கொண்டிருந்த
என் வாழ்க்கையில்,
புதிய பாதை என வந்தாய்
முதல் பார்வையிலேயே..