Apr 15, 2009

குறுஞ்செய்தி கலாட்டா-4




1)என் சகோதரனின் ஸ்பெசல் புலம்பல்

காஃபில சுகர் இல்லைனா
குடிக்க முடியாது

அது போல

கிளாஸ்ல ஃபிகர் இல்லைனா
படிக்க முடியாது

இப்ப தெரியுதா நான் ஏன் படிக்கலனு:(

2) சன் டைரக்ட் DTH ரீமிக்ஸ்

இன் எக்ஸாம் ஹால்

B.C.A Stud: அரியர் எக்ஸாமா?

B.E Stud : ஆமா

B.C.A Stud: நான் 2 அரியர்.

B.E Stud : அட! என்னோடயது அதிகம் 11 அரியர்.

B.C.A Stud: மைக்ரோ பிராசஸர், M3 அரியர் இருக்கா?

B.E Stud : அத விட அதிகம் M1, M2, M3, சர்க்யூட் தியரி, கண்ட்ரோல் சிஸ்டம்ஸ்
எல்லாமே இருக்கு..

சரி எவ்வளவு நேரம் எக்ஸாம் எழுதுவே?

B.C.A Stud: 2 1/2 hrs மட்டுமே:)

B.E Stud : அட! இது உன்னுடையது அதிகம். 15நிமிடம் மட்டுமே:)))

டன் டனா டன்

3) மனைவி: இந்த வாரம் முழுதும் படம் பார்த்தோம்
அடுத்த வாரம் முழுதும் சாப்பிங் போலாங்க?

கணவன்: ஓக்கே.
அதுக்கு அடுத்த வாரும் முழுதும்
கோவிலுக்கு போவோம்.!

மனைவி: ஏங்க?

கணவன்: பிச்சை எடுக்கத்தான்..

4)”அவள் பார்வைக்கு
அர்த்தம் தெரிந்த
எனக்கு
பேசிய வார்த்தைக்கு
அர்த்தம் தெரியவில்லை!”

காரணம்
அவள் பேசியது...


ENGLISH

பயபுள்ள
மூச்சி விடாம
பேசுறா!!

5) அழகான கவிதை:

”அழகே
அழகை
இரசிக்கின்றது!”

-என் கையில் கண்ணாடி.

நோ
நோ
அழப்பிடாது

வேணும்னா
நீயும்
ஃபார்வேடு பண்ணிக்கோ:)

Apr 14, 2009

வா(ல்)ழ்த்துகள்


அஞ்சா சிங்கம்
விரைவில்
பூரிக் கட்டைகளின்
பத்தாவது ஆயிரத்தை
தொட்டு நிற்கப் போகும்
தைரியசாலி!!
வால் அண்ணாச்சிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!!

Apr 8, 2009

நான் பாஸாயிட்டேன்...



கொஞ்ச நாளா என்னால சரியா வலை உலகப் பக்கம் வரமுடியலங்க:( யார் பதிவையும் சரியா படிக்கவும் நேரம் இல்லை. திங்கள் கிழமை என் உனக்கானவையே கவிதை யூத் விகடன்ல வந்தது கூட தெரியாதுன்னா பாருங்களேன்!!!

விகடன்ல இருந்து மெயில் ஏதோ வந்திருக்க மாதிரி இருக்கேனு செக் பண்ணினா உங்கள் கவிதையை திங்கள் கிழமை அன்று பப்ளிஸ் செய்திருக்கோம்னு இருக்கு:)))))

அடடே இது கூட தெரியாம இருந்திருக்கோமே தெரிந்திருந்தா பக்கத்து வீட்டில் இருக்கும் நாலு நல்லவங்களை அழைச்சிட்டு வந்து காட்டி பெருமைப் பட்டிருக்கலாம்னு ரொம்ப வருத்ததுடன் விகடனைப் பார்த்தால் என் கவிதையை இன்றும் போட்டிருக்காங்க:))))))))

சந்தோசத்தில காலும் ஓட மாட்டேங்குது கையும் ஓட மாட்டேங்குது ஏற்கனவே என்னோட குறுஞ்செய்தி கலாட்டா விகடன்ல வந்திருக்குன்னாலும் என்னோட கவிதை வந்திருப்பது இதுவே முதல் முறை!

நன்றி யூத் விகடன்:)

எல்லாரையும் கூப்பிட்டு காட்டிட்டோம் இல்ல :)
அப்படியே எங்க வீட்டிலும் ஒரு போனப் போட்டு சொல்லலாம்னு போன் செய்தா ”உனக்கு தான் வேற வேலையே இல்லைன்னா எனக்குமா”னு ஒரு இன்ஸெல்ட்:( இதெல்லாம் ஒரு மேட்டரா இது மாதிரி எவ்வளவு முறை கிரேட் இன்ஸெல்ட் எல்லாம் ஆயிருக்கு இதுக்கெல்லாம் நாங்க அசர்ர ஆளு கிடையாது விட்ரா விட்ரா சூனா பானா யாரும் பார்க்கலை மண்ணை துடைச்சுக்கோனு சொல்லிகிட்டே போனை வச்சிட்டோம் இல்ல!! ஹி ஹி...

Apr 5, 2009

கல்லறைபூக்கள்


அதோ
அவள் பயணப்பட
ஆயத்தமாகிவிட்டாள்...
’ஓடிச் சென்று
கட்டியணைத்து
என்னை விட்டு போகாதே’
என்று
கத்திக் கதறத்
தவியாய் தவிக்கிறது
மனம்...
கால்களும், கண்களுமோ
எட்டி நின்றே
பார்க்கிறது!

இதோ
செல்கிறாள் அவள்
சொந்தங்கள்
படை சூழ...
தடுக்கத் துணிகிறது
கைகள்
தடுமாறி தடம்புரள்கிறது
கால்கள்
பல ஆயிரம் ஊசிகள்
குத்துகிறது நெஞ்சில்
விழியிலிருந்து வழிகிறது
கண்ணீர்
இதைத் துடைக்கவாவது
வேண்டும் நீ எனக்கு!

அலறிக்
கூப்பாடு போடுகிறது
மனம்
உதடுகளோ அசையாமல்
புரிகிறது மெளனம்
இயலாமை என்னை
கூனிக் குறுக வைக்கிறது
இதயத் துடிப்பின் வேகம்
கூடிக் கொண்டே போகிறது
மெள்ள மெள்ள
கண்களில்
இருள் சூழ..
விலகிச் செல்லும்
உணர்வை
நன்றாகவே உணருகிறேன்!

இப்பொழுது
ஆத்மாவாய்
அவளை தேடி செல்கிறேன்...
சொந்தங்கள் அவளை
அடக்கி விட்டார்கள்
அழகாய்
வண்ண வண்ண
மலர்கள் அடுக்கிய
பெட்டியினுள்..
நானோ கிடக்கிறேன்
நடுத் தெருவிலே
நரிகள் தின்னும்
பிணமாய்!!