Mar 31, 2009

சீதாயணம்!!



நானும்
சீதைதான்...
அவளைப் போல்
தீக்குளிக்க
நானும் தயார்!




அதற்கு முன்- நீ
தீக்குளித்து
ராமனாய்
மீண்டு வந்து
பார்.....இந்த
சீதையை!!

Mar 27, 2009

வெட்டிப்பயல் அண்ணாவாச்சு நீங்களாச்சு!!

வணக்கம் மக்களே:)

ரொம்ப நாட்களா நாமளும் பிளாக்கரான கதையை சொல்லனும் சொல்லனும்னு நினைச்சிட்டு இருக்கேன் [ ஆமா உன்னை எல்லாம் இப்ப யார் இதை கேட்டாங்கன்னு சொல்லறீங்களா?? அப்படி சொல்றவங்க என் பதிவை 10 தடவை வாசிக்கனும். சரிம்மா தாயீ நான் எல்லாம் அப்படி சொல்லலைனு சொல்லறவங்களும் 10 தடவை வாசிச்சே தான் ஆகனும்:))) ]ஆனா பாருங்க நேரமே இல்லை அவ்ளோ பிசி( இந்த இடத்தில நீங்க இதை நம்பனும்)!!!

ஒரு 2 வருசமா நான் பிளாக் வாசிச்சு கிட்டு இருந்தேன். வாசிச்சிட்டுன்னா பல பிளாக்குகள்ன்னு நினைச்சிடாதீங்க. ஒரே ஒரு பிளாக் மட்டும் தான். அந்த பிளாக்கிற்க்கு தீவிரமான ரசிகை நான். தினமும் ஏதாவது புது போஸ்ட் வந்திருக்கான்னு செக் பண்ணுவதும், எனக்கு பிடித்த பதிவை எல்லாம் என் பிரண்ட்ஸ்க்கு ஃபார்வேடு செய்வதும் தான் என் வேலையே!!

அவ்ளோ அருமையான எழுத்தாளர்:))

அவரோட ஒவ்வொரு பதிவும் நன்கு ரசிக்கும் படி இருக்கும்.. இடையில இனி என்னால முதல் மாதிரி எழுத முடியாதுன்னு அறிவிச்சிட்டார். இப்போ திரும்ப வந்ததில என்னைப் போல உள்ளவங்களுக்கு மிக்க மகிழ்ச்சியே:)) சரி அடிக்க வந்துறாதீங்க அது யாருன்னு சொல்லிடறேன்

வெட்டிப்பயல் பாலாஜி அண்ணா தான் அது:))

இவர் பதிவை படிச்சுப் படிச்சுதான் ஏன் நாமளும் பிளாக் எழுதக் கூடாதுன்னு தோனுச்சு அதனால வந்த வினையைத் தான் இப்போ நீங்க எல்லாம் அனுபவிச்சிட்டு இருக்கீங்க:)

அண்ணனின் பதிவில் எனக்கு மிகவும் பிடிச்ச தொடர்கதை
ஆடுபுலி ஆட்டம்

வயிறு வலிக்க சிரித்த நகைசுவை
மணல் கயிறு

மனதை உருக வைத்த சிறுகதை
முட்டாப்பய

என்னை இந்த அளவுக்கு எழுத சொல்லி ஊக்கப் படுத்திய நல்லவங்க 2பேர் இருக்காங்க. அவங்க யார்ன்னு அடுத்த பதிவுல சொல்றேன்......
அவங்களை நீங்க அடிச்சாலும் சரி, கடிச்சாலும் சரி அது உங்க பாடு....

இந்த பதிவை தொடரச்சொல்லி நான் அழைப்பது

பழமைபேசி அண்ணாச்சி

G3

இவங்க எப்படி பிளாக்கிற்க்குள் வாந்தாங்கன்னு அவங்களே சொல்லுவாங்க:)

Mar 25, 2009

குறுஞ்செய்தி கலாட்டா-3


1) இன்றைய தத்துவம்:

ஆட்டுக் கால்ல சூப் வெக்கலாம், கோழி கால்லையும் சூப் வெக்கலாம் ஆனா மிஸ்டு கால்ல சூப் வெக்க முடியுமா????

ஓக்கே ஓக்கே அழக்கூடாது....

2) உன் பெயரை
கேட்ட பிறகு தான்
தெரிந்து கொண்டேன்
உன் பெற்றோருக்கும்
கவிதை
எழுத தெரியும்
என்று!!!


இப்படிக்கு
மனசாட்சி இல்லாமல் பொய் சொல்வோர் சங்கம்:)


3) பறவைங்க எல்லாம் ஏன் வெளிநாட்ல இருந்து
இங்க பறந்து வருது தெரியுமா??

ஏன்????

ஏன்னா அது நடந்து வந்தா லேட்டாகும் இல்ல அதான்!!




4) டைரக்டர்: படத்துல வடிவேலு போடலாமா இல்ல
விவேக் போடலாமா??

விஜய்: ரெண்டு பேரும் வேணா சார் காமெடி ரோலும் நானே பண்றேன்:)

டைரக்டர்: படத்துல காமெடி நீங்க தான் பண்றீங்க
நான் தேடுரது ஹீரோ ரோலுக்கு!

5) பாப் கார்ன் ஃபிரை பண்ணும் போது ஏன் ஜம்ப் பண்ணுது தெரியுமா?

தெரியலையா!

நீங்க போய் அந்த சட்டில உட்கார்ந்து பாருங்க அப்ப தெரியும்..

6) இன்னைக்கு நைட் 12 மணிக்கு..உங்க ரூமுக்கு..
பேய் வரும்....பயந்து லைட்ட மட்டும் போட்டுடாதீங்க

பாவம்,

பேய் பயந்திரும்!!

Mar 23, 2009

இது எங்க ஏரியா தைரியமிருந்தா உள்ளே வா -1



நானும் சென்னை வந்ததிலிருந்து இந்த போஸ்ட்டைப் போடனும்னு நினைத்திட்டு இருக்கேன் ஆனால் பாருங்க நேரமே இல்லை. சரி சரி மேட்டரை சொல்லிடறேன்.

எங்க பிளாட்ல குட்டீஸ் நிறைய இருக்காங்க. சாயந்திரம் ஒரு 7 மணில இருந்து 9 மணி வரைக்கும் இவங்க ராஜ்ஜியம் தான். நானும் பரிக்‌ஷித்த தூக்கிட்டு இவங்க எங்க எல்லாம் ஓடறாங்களோ பின்னாடியே போயிடுவேன். பரிக்‌ஷித்திற்க்கும் இது தான் பிடிக்கிறது. வீட்டிற்க்குள் இருப்பதை விட வெளில இருக்கறதை தான் விரும்பறான்:))

ஆனால் இதில் விசியம் என்னன்னா எங்க பிளாட்ல இருக்கிற மக்களை விட அவர்களின் குட்டீஸைத் தான் எனக்கு நல்லா தெரியும். இது வரைக்கும் மொத்தமா எவ்ளோ பிளாட் இருக்கு அதில் யார் இருக்காங்கன்னு சத்தியமா எனக்கு தெரியாதுங்க. கணக்கு போட்டுப் பார்த்தா ஒரு 8 வீடு தான் தெரியும்.

ஆனால் எல்லா குட்டீஸையும் நல்லா தெரியும். அவங்க அம்மாங்க எல்லாம் ஒரு நாள் கூட நம்ம பையன் விளையாடறான், பொண்ணு விளையாடறாள்னு மருந்துக்கு கூட எட்டிப் பார்த்ததில்லை. இத்தனைக்கும் அவங்க வேலைக்கு எல்லாம் போவதில்லை. வீட்டில் தான் இருக்காங்க. எப்பவும் வீட்டுக் கதவு அடைத்து தான் இருக்கும். அப்படி என்ன தான் பண்ணுவாங்களோ போங்க!!!

இதில் ஒரு வீட்டில் அவங்க குட்டி எப்பவும் வெளில நின்னு கதவை தட்டுவது தான் வேலையே.. ஆனால் அடைத்த கதவு அடைத்தது தான் திறக்கவே மாட்டாங்க.. இதை நினைத்து சிரிக்கறதா?? அழறதா??

சரி இது எல்லாத்தையும் விட்டுட்டு நாம இந்த மழலைகள் செய்யும் வாலுத் தனத்தை பற்றி பேசுவோம்..




வீக் எண்ட் வந்திட்டா போதும் அவ்ளோ தான் ஸ்கூல் விட்டு வந்ததிலிருந்து ஆரம்பிச்சா பசிக்கும் வரை ஓரே ஆட்டம் தான். இந்த வாரம் வெள்ளிக்கிழமை நான் 7 மணி வாக்கில் வீட்டினுள் இருந்து பரிக்‌ஷித்த தூக்கிட்டு வெளில வந்தேன். ஓரே மழலைகள் கூட்டம் இதில் ஆச்சரியமான விசயம் என்னன்னா படிக்கட்டுகளில் உட்கார்ந்திட்டு இருந்ததுதான் (ஏதும் செய்யாமல் உட்கார்ந்திட்டு இருப்பதுனா அதில ஏதோ இருக்கு அதாவது யாரோ வசமா அவங்க கிட்ட மாட்டிகிட்டாங்கன்னு அர்த்தம்). என்னதான் நடக்குதுன்னு பக்கதில போய்ப் பார்த்தா ஒரு அக்கா மாட்டிகிட்டாங்க எல்லோருக்கும் நடுவுல. எல்லோருக்கும் மெஹந்தி போட்டு விட்டுட்டு இருந்தாங்க. பாப்பாவுக்கும் போட்டு விடுங்கன்னு அதில் ஒரு பிஞ்சு பரிக்‌ஷித் கையைப் பிடிக்க இவன் வீல்னு கத்த அப்றம் அந்த குட்டியே தன் பந்தைக் கொடுத்து இவரை சமாதனப்படுத்தினதுதான் ஹைலைட்:)))

தம்பி பாப்பா விரலை வாயில் வைக்கும் அதனால வேண்டாம்னு சொன்னா என்னமா கேள்வி கேட்கிறாங்க... ஏன் வாயில் வைக்குது?? எதுக்கு?? நீங்க வேண்டாம்னு சொல்லுங்க இல்லைன்னா நான் சொல்லறேன்..(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:((() இன்னொரு குட்டி நானும் தான் வாய்ல விரல வைக்கறேன் நானெல்லாம் மெஹந்தி வைக்கலையா????

இல்லப்பா தம்பி மெஹந்தி போட்ட பிறகு வாயில விரலை வைத்தா இது எல்லாம் வயித்துக்குள்ள போகும் இல்ல அதான் - நான்

ஏன்????? வயித்துக்குள்ள போனா என்னா???? - குட்டீஸ்

வயிறு வலிக்கும் - நான்

ஏன் வலிக்குது???? அதெப்படி உங்களுக்கு தெரியும்??? தம்பி பாப்பா உங்க கிட்ட சொல்லுமா??? ஆனால் ஏன் என்கிட்ட மட்டும் தம்பி பேச மாட்டேங்குறா???

டிஸ்கி: இன்னும் நிறைய வால் தனங்கள் இருக்கு. அதையும் போட்டா பதிவு ரொம்பபபபப் பெருசா இருக்கும். இது வெறும் இன்ரொடக்ஸனா மட்டும் இருக்கட்டும் அடுத்த பாகத்தில மீதி.....

Mar 20, 2009

ஒய்யாரக் கவிதை...





உனக்கான -என்
கவிதைப் புத்தகத்தில்
பக்கங்கள்
திரும்பிக் கொண்டிருக்கின்றன...
ஆனால்
என்னவனே -உன்னைப்போல்
ஒய்யாரக் கவிதை
ஒன்றுமேயில்லை!




HAPPY BIRTHDAY SARAVANA!

With Love

POORNIMA








Love you Dad!

PARIKSHITH

Mar 16, 2009

உனக்கானவையே...



உன் வரவையே
வரமாக எண்ணி
புரிந்து கொண்டிருக்கிறேன்
இன்னமும்
தவம்!



இழப்புகளோடு
சில கண்ணீர்
துளிகளையும்
இழக்க வேண்டியிருக்கிறது!!



என்னை
காத்திருக்கவைக்கவாவது
என் காதலனாய் இரு!!!
கடைசிவரை வராமல்
போனால் கூட
ஒன்றுமில்லை.....



ஒவ்வொரு பயணத்திலும்
ஆக்கிரமித்து வைக்கிறேன்
என்னை ஒட்டிய
இருக்கையை!
நீ இன்றேனும் வருவாய் என்று....

Mar 4, 2009

ஆ..ஆஆ..ஆஆஆ..ஆஆஆஆஆஆ

காலையில் எழும் பொழுதே தெரிந்தது மனதில் ஏதோ மாற்றம், என்னவென்று பார்த்ததில் எக்ஸாம் பீவர் என்று தெரிந்தது... அறக்கப் பறக்க கிளம்பும் பொழுது கைகள் தான் வேலையைச் செய்கிறதே தவிர மனதில் வேற என்ன என்னவோ ஓடிக் கொண்டிருக்கிறது..

அம்மாவின் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அன்று செல்லும் போது அம்மா உடன் இருந்தாங்க.. இப்போ என்னடானா அவங்க பாட்டுக்கு ஊருக்குப் போயிட்டாங்க.
சே... நான் என்ன செய்வேன் ஏது செய்வேன்னு தெரியலையே!! மாமியார் தான் கூட இருக்காங்க.. இருந்தாலும்.... இவ்ளோ நாளா அம்மா வீட்டிலேயே இருந்தாச்சா, அம்மா கூட இருக்கும் போது என்ன கவலைங்கற தைரியதில இருந்திட்டேன்.. ஒரு வேளை என் மாமியார் என்னை விட பயந்தகொள்ளியா இருந்திட்டா அதான்..

அச்ச்ச்ச்சோசோசோஓஓஓஓஓ..
பைத்தியமே பிடிச்சுக்கும் போல இருக்கே..

போடு போன ரங்கமணிக்கு
டிரிங் டிரிங் டிரிங்

“ம்ம்ம் சொல்லு”

“ம்ம்ம்ம் ம்ம்ம்ம்”

“என்ன சீக்கிரம் சொல்லு வேலை இருக்கு. இங்க வந்தாலும் நிம்மதியா இருக்க விடமாட்டியா!!!”

“எல்லாம் என் நேரம். கிளம்பிட்டு இருக்கோம். எனக்கு....எனக்கு.. பயமா இருக்குபா:(”

“அதான் அம்மா கூட இருக்காங்க இல்ல, அப்புறம் என்ன! இதுக்கு தான் போனா?? சரி வைய்யு எனக்கு வேலை இருக்கு”

“ம்ம்ம்:((((”

ஒரு வழியா நாங்க 2பேரும் கிளம்பி, தூங்கிக் கொண்டிருந்த பரிக்‌ஷித்தை எழுப்பி, டையேப்பரைக் கட்டி விட்டு, பவுடர் போட்டு, டிரஸ் மாத்திவிடுகையில் அழகாய் ங்கு.. ங்கனு சிரிக்கையில் மனதில் எங்கோ ஒரு மூலையில் வழித்தது..

”ஐ லவ் யூடா செல்லக் குட்டி” என்று ஒரு முத்தம் வைத்து தோளில் சாய்த்துக் கொண்டு வீட்டைப் பூட்டி விட்டு கிளம்பினோம்.

டாக்ஸியில் செல்லும் பொழுது பரிக்‌ஷித் நன்கு சிரித்துக் கொண்டு சாலையை வேடிக்கைப் பார்த்தபடி குதூகலச் சிரிப்புடன் குதித்த படி குஷியாக இருந்தான்!!!! நான் தான் தேவை இல்லாமல் கவலைப் படுகிறேனோனு தோனுச்சு....

வலது பக்க அம்புக் குறியுடன் ஸ்டெர்லிங் ரோடு என்ற பலகையைப் பார்த்தவுடன் என் அருமைத் தம்பி, உடன்பிறவாச் சகோதரன் வானவில் வீதி கார்த்திக்கின் நினைவு வந்தது. இங்க தான் எங்கயாவது சுற்றிக் கொண்டிருப்பான் என்று எண்ணிக் கொண்டேன்...

12 மணிவாக்கில் சைல்ட் ஹாஸ்பிட்டல் சென்றடைந்தோம். எங்க டாக்டர் கிட்ட போனதும், அவர் ஒரு குட்டி பாப்பாவை பார்திட்டு இருந்தார். அந்த பாப்பா அழுதிட்டு இருந்துச்சு. திடீர்னு பரிக்‌ஷித் ’ம்மானு’ அழ ஆரம்பிச்சிட்டார். பக்கதில இருந்தவங்க எல்லாம் என்னாச்சுனு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க! பாவம் அவங்களுக்கு எப்படி தெரியும் எந்த குழந்தை அழுதாலும் இவரும் அழுவாருன்னு:(... டாக்டர் கிட்ட குட்டி வெயிட் ஏற என்ன செய்யனு கேட்டிட்டு, வேக்சின் போடும் ரூமிர்க்கு அவர் அனுப்பி வைக்க... ஆ!! வந்திருச்சுடா நான் பயந்து கொண்டிருந்த அந்த ஊசி..............பேந்த பேந்த முழித்துக் கொண்டு அங்கிருந்த ஹெட் நர்சிடம் சென்றோம். அவர் எந்த ஊசி போடனும், எது போட்டிருக்கு என்று கேட்ட கேள்விக்கு உளரிக் கொட்டி இம்முனிசேசன் ரெக்கார்ட எடுத்து நீட்டி” ஓ!! ஈஸி பைவ் ஆ”னு கேட்டதற்க்கு ஆமாம்னு சொன்னேன்.

அங்க வேற ஒரு குட்டி பாப்பாவிற்க்கு ஊசி போட மெடிசின் எடுத்து கிட்டு இருந்தாங்க.. அட ராமா நான் ஊசினாவே 10மைல் தூரத்துக்கு திரும்பி பார்க்காம ஓடர ஆளு!! என் மகனுக்கு குட்டீஸின் அழுகையைக் கேட்டால் அவர் அழுகையை நிப்பாட்ட நாலு நாள் ஆவும்.. இது என்னடா வம்புன்னு வெளிய ஓடிட்டோம்.

சரி உன் மகனுக்கு ஊசி போடையில என்ன செய்வேனு மாமியாரு கேட்க்க நீங்க இருக்கும் போது என்ன கவலைனு நான் சொல்ல.. சரி சரி வானு உள்ளார இழுத்திட்டு போயிட்டாங்க..

பரிக்‌ஷித்திர்க்கு ஊசிய ரெடி பண்ணிட்டு இருக்கையிலேயே தூரமா போய் நின்னுட்டேன்.......’ம்மாஆஆ’னு கத்தினான்.. 10 செக்கண்ட்ல அழுகையை நிறுத்திட்டான்... அட தங்கமே அவ்ளோதான்னு அப்புறம் அவனை கொஞ்சவும்.,

“இதுக்கு போய் இவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்ணிட்டியே நீ! ஊசி உனக்கா இல்லை அவனுகானு எனக்கே சந்தேகம் வந்திருச்சு”ன்றாங்க மாமியார்....


Mar 3, 2009

அழகுன்னா இதுவல்லவோ!!!


முன்னாடி நான் அழகுன்னா என்னனு கேட்டிருந்தேன்.. அதர்க்கு பதில் பதிவான இதில் பாருங்க அழகை!!

How sweet? அழகுச் செல்லம்..
முட்டைக் கண்ணு..

உம்முன்னு இருக்கும் போதும் சரி,
அப்பா ஏம்ப்பா என்ன விட்டுட்டு டெல்லிக்குப் போயிட்டீங்கனு பேசும் போதும் சரி, அப்பாகிட்ட இருந்து போன் வந்துதான்னு கேட்கும் போதும் சரி எவ்ளோ முக பாவனைகள்!!!
பார்க்க பார்க்க சலிக்கவில்லை.. சேனலை மாற்றும் போது எந்த சேனலில் இது ஓடினாலும் இதைத் தான் பார்கிறேன்.

யாருக்கும் தெரியாமல் போனை சட்டையில் வைத்துக் கொண்டு மறைந்து மறைந்து செல்வது அழகோ அழகு... BGM கலக்கல்))

சின்ன வயசுல நானும் இப்படி தான் (அழகா) இருந்தேனாம். எல்லோரும் சொல்லுவாங்க:)))) இதை நம்புவர்களின் கனவில் தேவதைகள் வருவாங்க.. நம்பாதவர்களுக்கு வேறென்ன பேய் தான்:(