Jun 12, 2009

நான் நானாகவே!அப்பப்போ லீவ் போட்டுட்டு இருக்கேன்னு என் தம்பி கார்த்திக்கும்,Honey Roseம் இந்த என்னைப் பற்றிய பதிவுக்கு டேக் பண்ணி விட்டுட்டாங்க..

சரி உங்க விதிய மாத்த முடியாது அனுபவிங்கன்னு நானும் போட்டாச்சு:))))


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

பெருசா ஒரு காரணமும் இல்லங்க.. இது என் அத்தை வைத்த பெயர்.. ஆனால் பாருங்க விதி வலியது எனக்கு அவங்களை பிடிக்காது..

ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்:))

ஸ்கூலில் என்னை G.P.னு தான் கூப்பிடுவாங்க. இதுவும் பிடிக்கும்..

என் தம்பிக்கு போலவே எனக்கும் இன்னும் பல பெயர்கள் இருக்கு ஆனால் சொல்லமாட்டேனே :))


2. கடைசியாக அழுதது எப்பொழுது?

யாரைக் கேட்கறீங்க? என்னையா இல்லை எங்க வீட்டு ரங்கமணியையா?


3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

கையெழுத்து நல்லா இருந்தா தலை எழுத்து நல்லா இருக்காதுன்னு எங்க ஆச்சி சொல்லி இருக்காக.. எனக்கு தலை எழுத்து சூப்பரோ சூப்பர்......


4. பிடித்த மதிய உணவு என்ன?

தயிர் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும், என் அம்மாவின் கத்தரிக்காய் கறியும்..


5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

நன்றாக பேசுவேன்.. அவ்ளோ சீக்கிரத்தில பிரண்ட் ஆயிடமாட்டேன்..


6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

எனக்கு நீச்சல் நன்றாக தெரியும்.. சோ எங்க தள்ளி விட்டாலும் வந்திருவேன்:)


7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

கண்கள்.. பார்வையை வைத்தே சிலரின் எண்ணத்தை புரிந்து கொள்வேன்.

8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?

அடுத்தவங்க கிட்ட அவங்க மனசு கஷ்டப்படும்படி பேசிடமாட்டேன்.

அம்மாவிடமும் , என் துணையிடமும் யோசிக்காமல் கோபப்பட்டு பேசிவிட்டு பிறகு வருந்துவது:(


9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

அவரை பிடிக்கும்.. அவர் செய்யும் எல்லாமும் பிடிக்கும், என் மீது கொள்ளும் கோபமும் பிடிக்கும்.

பிடிக்காதுன்னு சத்தியமா எதுவும் இல்லங்க..
ம்ம்ம்ம்ம் அவர் எனக்கு தெரியாம செய்யும் எதுவும் பிடிக்காது.. ஆனால் அப்படி செய்தாலும் சொல்லிடுவாக:)


10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?

என் சகோதரி:(


11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?

Red with Black


12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?

கண்ணத்தில் முத்தமிட்டால்-- சட்டென நனைந்தது இதயம்


13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

கருப்பு


14. பிடித்த மணம்?

பரிக்‌ஷித்தின் வாசனை


15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?

வெட்டிப்பயல் அண்ணா-- காரணம் அவர் எழுத்தும், என் மேல் கொண்ட பாசமும்

நாணல் .---- பிடிக்கும் காரணம் தெரியலை

விஜய்- காமெடியாக எழுதுவது நல்ல நண்பர்

சஞ்சய் அண்ணன்-- பிடிக்காது காரணம் என்னை அநியாயத்துக்கு திட்டி கமெண்ட் போடுவது :(


16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

Roseன் கவிதைகள்:)

ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி!!


17. பிடித்த விளையாட்டு?

செஸ்


18. கண்ணாடி அணிபவரா?

இதை தெரிஞ்ச்சுக்கிட்டு என்ன செய்வீங்கன்னு முதல்ல சொல்லுங்க அப்புறம் நான் சொல்றேன்..( யப்பா புத்திசாலி தனமா ஒரு கேள்வி கேட்டாச்சு.. இதுக்குப் போயி மூளைய இந்த அளவுக்கு யூஸ் பண்ண வச்சிட்டாங்களே:()


19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?

பேய் படம்னா ரொம்ப பிடிக்கும்:)
காதல், காமெடியும் பிடிக்கும்


20. கடைசியாகப் பார்த்த படம்?

கடைசியாக பார்த்ததுனா அருந்ததி
கடைசியாக பார்த்த புதுப் படம் குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்..
கடைசியாக தியேட்டரில் பார்த்தது தசாவதாரம்


21. பிடித்த பருவ காலம் எது?

குளிர்காலம்

(காலைல 7 மணி வரைக்கும் பெட்ஷீட்ட இழுத்துப் போர்த்திட்டு தூங்கும் சுகமே தனி! )


22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?

இப்போதைக்கு நமக்கு அந்தளவுக்கு நேரம் இல்லைங்க..


23. உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

பரிக்‌ஷித்த போட்டோ புடிக்கும் போது எல்லாம் ::))


24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பரிக்‌ஷித்தின் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் சத்தம்:)

எங்கள் எதிர் வீட்டுப் பெண்மணியின் சத்தம் ( பிளாட்ல இருப்பவங்க உங்க எதிர் வீட்டில் குழந்தை ஏதும் இருந்தால் கூடுமானவரை உங்கள் தேவையில்லாத சத்தத்தை குறைத்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ்:( )


25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

Delhi


26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

நிறைய்ய்ய்ய இருந்துச்சு இப்போ மறந்து போச்சு):


27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

என்னையும் ஒரு மனுஷியா மதிச்சு டேக் செய்திருப்பது!!!


28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

நானே............ஒரு நல்ல பொண்ணு என் கிட்ட இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்கப்பிடாது..


29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

ஊட்டி ஊட்டி ஊட்டி


30. எப்படி இருக்கணும்னு ஆசை?

புரியலையே...


31. கணவன் செய்ய விரும்பும் ஒரே காரியம்?

அவரில்லாம நான் மட்டும் தனியா சமையல் செய்யனும்னு தான் நினைக்கறேன்:(


32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?

வாழ்வது கொஞ்ச்ச காலம், இருப்பதை வைத்து சந்தோசமாய் இரு..