அதோ
அவள் பயணப்பட
ஆயத்தமாகிவிட்டாள்...
’ஓடிச் சென்று
கட்டியணைத்து
என்னை விட்டு போகாதே’
என்று
கத்திக் கதறத்
தவியாய் தவிக்கிறது
மனம்...
கால்களும், கண்களுமோ
எட்டி நின்றே
பார்க்கிறது!
இதோ
செல்கிறாள் அவள்
சொந்தங்கள்
படை சூழ...
தடுக்கத் துணிகிறது
கைகள்
தடுமாறி தடம்புரள்கிறது
கால்கள்
பல ஆயிரம் ஊசிகள்
குத்துகிறது நெஞ்சில்
விழியிலிருந்து வழிகிறது
கண்ணீர்
இதைத் துடைக்கவாவது
வேண்டும் நீ எனக்கு!
அலறிக்
கூப்பாடு போடுகிறது
மனம்
உதடுகளோ அசையாமல்
புரிகிறது மெளனம்
இயலாமை என்னை
கூனிக் குறுக வைக்கிறது
இதயத் துடிப்பின் வேகம்
கூடிக் கொண்டே போகிறது
மெள்ள மெள்ள
கண்களில்
இருள் சூழ..
விலகிச் செல்லும்
உணர்வை
நன்றாகவே உணருகிறேன்!
இப்பொழுது
ஆத்மாவாய்
அவளை தேடி செல்கிறேன்...
சொந்தங்கள் அவளை
அடக்கி விட்டார்கள்
அழகாய்
வண்ண வண்ண
மலர்கள் அடுக்கிய
பெட்டியினுள்..
நானோ கிடக்கிறேன்
நடுத் தெருவிலே
நரிகள் தின்னும்
பிணமாய்!!
இன்றைய ஆசிர்வாதங்கள்
-
#1
"உலகம் ‘பொருந்திப் போ’ என்கிறது.
பிரபஞ்சம் ‘தனித்து விளங்கு’ என்கிறது."
#2
"உங்கள் வாக்குறுதி
யாரோ ஒருவரின் நம்பிக்கை.
வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள...
15 hours ago
25 கருத்துக்கள்:
\\நானோ கிடக்கிறேன்
நடுத் தெருவிலே
நரிகள் தின்னும்
பிணமாய்!!\\
வலிகளின் உச்சம்.
கால்களும், கண்களுமோ
எட்டி நின்றே
பார்க்கிறது!\\
நல்ல வரிகள் வலிகளோடு
உங்கள் கவி அருமை /.
கால்களும், கண்களுமோ
எட்டி நின்றே
பார்க்கிறது!\\
வலி ...
:-((
ஒண்ணும் சொல்லிக்க முடியல.. அதனாலேயே கும்மி அடிக்க மனசில்ல...
தலைப்பு அருமை
//மெள்ள மெள்ள
கண்களில்
இருள் சூழ..//
மிக நேர்த்தியா, ‘மெள்ள’ங்ற சொல்லைப் பாவிச்சு இருக்கீங்க. பொதுவா, ’மெல்ல’ங்ற சொல்தான் புழக்கத்துல வரும். ஆனா, ’மெல்ல’ங்றது திரிபடைய வாய்ப்பிருக்கு. மெல்லுதல்ங்ற பொருள்ல. ஆனா, நீங்க அழுத்திச் சொல்லுற மாதிரி, பாவிச்சு இருக்கீங்க.
கவிஞர் பூர்ணிமா வாழ்க!
தமிழ் மெல்ல இனிச் சாகும்ன்னு சொல்லுறாங்க. தமிழ் போற்றும் மங்கையர்கள் இருக்கும் வரை, தமிழை எந்த அடிப்பொடிகளாலும் அசைக்க முடியாதென்பதே உண்மை!
படித்த எனக்கும் வலிக்கிறது.
நல்லா இருக்கு!
தலைப்பே சொல்லுது வரிகளின் வலியை
மனது கனத்தது படித்து முடித்தவுடன்
eaan poornima akka sokamana kavithai
anna azathega ethuku azarenga
:(((((
தலைப்பை பார்ர்க்காம படிச்சதுனால, ஏதோ ஊருக்கு அனுப்பி வைக்குறதுக்கு தான் சோகம்னு நினச்சேன்...கடைசில தன் புரிஞ்சது இது சோகம் இல்லை வலின்னு
அருமை ...
வலிகளின் உச்சம்...கவிதை அருமை பூர்ணிமா....
ஒரே ஃபீலிங்க்ஸா போச்சுங்க..
இந்த மாதிரி சீரியஸா எழுதாதீங்க..மனசுக்கு கஷ்டமா இருக்குல்ல..
( ஆனா கவிதை வெரி டச்சிங் )
//அலறிக்
கூப்பாடு போடுகிறது
மனம்
உதடுகளோ அசையாமல்
புரிகிறது மெளனம்//
உணர்வுக் குவியல்...
//நானோ கிடக்கிறேன்
நடுத் தெருவிலே
நரிகள் தின்னும்
பிணமாய்!!//
கல்லறைபூக்கள் இங்கே கண்ணீர்
பூக்களாய்...
சோகம் என்றாலும் அருமையான கவிதை
ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க பூர்ணிமா சரண்...
:(( சோகத்தை வலியை வார்த்தைகளில் வடித்து வைத்திருக்கீறீர்கள்!
டெம்ப்ளேட் சூப்பர்!
இப்படி வலிகளடங்கிய கவிதையைப் புனைவதில் என்ன சந்தோஷம் கிடைக்கிறது உங்களுக்கு??? :(
வாவ், அட்டகாசம்..!
அழுவாச்சி கவிதை எல்லாம் தான் எனக்கு பிடிக்குதுன்னு நினைக்கிறேன். :))
மனதில் கணமும்
விழியில் கண்ணீரும்
வரவழைத்தன கவிதை வரிகள்.....
மிக மிக அருமையாக எழுதியிருக்கிறீங்க பூர்ணிமா:))
//அலறிக்
கூப்பாடு போடுகிறது
மனம்
உதடுகளோ அசையாமல்
புரிகிறது மெளனம்//
அருமையான வரிகள்
இப்படியெல்லாம் எழுதினா நான் எப்படி கும்மி அடிக்க !!!
\நானோ கிடக்கிறேன்
நடுத் தெருவிலே
நரிகள் தின்னும்
பிணமாய்!!\\
nalla varigal
நல்ல வரிகள்
Post a Comment