காலையில் எழும் பொழுதே தெரிந்தது மனதில் ஏதோ மாற்றம், என்னவென்று பார்த்ததில் எக்ஸாம் பீவர் என்று தெரிந்தது... அறக்கப் பறக்க கிளம்பும் பொழுது கைகள் தான் வேலையைச் செய்கிறதே தவிர மனதில் வேற என்ன என்னவோ ஓடிக் கொண்டிருக்கிறது..
அம்மாவின் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அன்று செல்லும் போது அம்மா உடன் இருந்தாங்க.. இப்போ என்னடானா அவங்க பாட்டுக்கு ஊருக்குப் போயிட்டாங்க.
சே... நான் என்ன செய்வேன் ஏது செய்வேன்னு தெரியலையே!! மாமியார் தான் கூட இருக்காங்க.. இருந்தாலும்.... இவ்ளோ நாளா அம்மா வீட்டிலேயே இருந்தாச்சா, அம்மா கூட இருக்கும் போது என்ன கவலைங்கற தைரியதில இருந்திட்டேன்.. ஒரு வேளை என் மாமியார் என்னை விட பயந்தகொள்ளியா இருந்திட்டா அதான்..
அச்ச்ச்ச்சோசோசோஓஓஓஓஓ..
பைத்தியமே பிடிச்சுக்கும் போல இருக்கே..
போடு போன ரங்கமணிக்கு
டிரிங் டிரிங் டிரிங்
“ம்ம்ம் சொல்லு”
“ம்ம்ம்ம் ம்ம்ம்ம்”
“என்ன சீக்கிரம் சொல்லு வேலை இருக்கு. இங்க வந்தாலும் நிம்மதியா இருக்க விடமாட்டியா!!!”
“எல்லாம் என் நேரம். கிளம்பிட்டு இருக்கோம். எனக்கு....எனக்கு.. பயமா இருக்குபா:(”
“அதான் அம்மா கூட இருக்காங்க இல்ல, அப்புறம் என்ன! இதுக்கு தான் போனா?? சரி வைய்யு எனக்கு வேலை இருக்கு”
“ம்ம்ம்:((((”
ஒரு வழியா நாங்க 2பேரும் கிளம்பி, தூங்கிக் கொண்டிருந்த பரிக்ஷித்தை எழுப்பி, டையேப்பரைக் கட்டி விட்டு, பவுடர் போட்டு, டிரஸ் மாத்திவிடுகையில் அழகாய் ங்கு.. ங்கனு சிரிக்கையில் மனதில் எங்கோ ஒரு மூலையில் வழித்தது..
”ஐ லவ் யூடா செல்லக் குட்டி” என்று ஒரு முத்தம் வைத்து தோளில் சாய்த்துக் கொண்டு வீட்டைப் பூட்டி விட்டு கிளம்பினோம்.
டாக்ஸியில் செல்லும் பொழுது பரிக்ஷித் நன்கு சிரித்துக் கொண்டு சாலையை வேடிக்கைப் பார்த்தபடி குதூகலச் சிரிப்புடன் குதித்த படி குஷியாக இருந்தான்!!!! நான் தான் தேவை இல்லாமல் கவலைப் படுகிறேனோனு தோனுச்சு....
வலது பக்க அம்புக் குறியுடன் ஸ்டெர்லிங் ரோடு என்ற பலகையைப் பார்த்தவுடன் என் அருமைத் தம்பி, உடன்பிறவாச் சகோதரன் வானவில் வீதி கார்த்திக்கின் நினைவு வந்தது. இங்க தான் எங்கயாவது சுற்றிக் கொண்டிருப்பான் என்று எண்ணிக் கொண்டேன்...
12 மணிவாக்கில் சைல்ட் ஹாஸ்பிட்டல் சென்றடைந்தோம். எங்க டாக்டர் கிட்ட போனதும், அவர் ஒரு குட்டி பாப்பாவை பார்திட்டு இருந்தார். அந்த பாப்பா அழுதிட்டு இருந்துச்சு. திடீர்னு பரிக்ஷித் ’ம்மானு’ அழ ஆரம்பிச்சிட்டார். பக்கதில இருந்தவங்க எல்லாம் என்னாச்சுனு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க! பாவம் அவங்களுக்கு எப்படி தெரியும் எந்த குழந்தை அழுதாலும் இவரும் அழுவாருன்னு:(... டாக்டர் கிட்ட குட்டி வெயிட் ஏற என்ன செய்யனு கேட்டிட்டு, வேக்சின் போடும் ரூமிர்க்கு அவர் அனுப்பி வைக்க... ஆ!! வந்திருச்சுடா நான் பயந்து கொண்டிருந்த அந்த ஊசி..............பேந்த பேந்த முழித்துக் கொண்டு அங்கிருந்த ஹெட் நர்சிடம் சென்றோம். அவர் எந்த ஊசி போடனும், எது போட்டிருக்கு என்று கேட்ட கேள்விக்கு உளரிக் கொட்டி இம்முனிசேசன் ரெக்கார்ட எடுத்து நீட்டி” ஓ!! ஈஸி பைவ் ஆ”னு கேட்டதற்க்கு ஆமாம்னு சொன்னேன்.
அங்க வேற ஒரு குட்டி பாப்பாவிற்க்கு ஊசி போட மெடிசின் எடுத்து கிட்டு இருந்தாங்க.. அட ராமா நான் ஊசினாவே 10மைல் தூரத்துக்கு திரும்பி பார்க்காம ஓடர ஆளு!! என் மகனுக்கு குட்டீஸின் அழுகையைக் கேட்டால் அவர் அழுகையை நிப்பாட்ட நாலு நாள் ஆவும்.. இது என்னடா வம்புன்னு வெளிய ஓடிட்டோம்.
சரி உன் மகனுக்கு ஊசி போடையில என்ன செய்வேனு மாமியாரு கேட்க்க நீங்க இருக்கும் போது என்ன கவலைனு நான் சொல்ல.. சரி சரி வானு உள்ளார இழுத்திட்டு போயிட்டாங்க..
பரிக்ஷித்திர்க்கு ஊசிய ரெடி பண்ணிட்டு இருக்கையிலேயே தூரமா போய் நின்னுட்டேன்.......’ம்மாஆஆ’னு கத்தினான்.. 10 செக்கண்ட்ல அழுகையை நிறுத்திட்டான்... அட தங்கமே அவ்ளோதான்னு அப்புறம் அவனை கொஞ்சவும்.,
“இதுக்கு போய் இவ்ளோ ஆர்ப்பாட்டம் பண்ணிட்டியே நீ! ஊசி உனக்கா இல்லை அவனுகானு எனக்கே சந்தேகம் வந்திருச்சு”ன்றாங்க மாமியார்....
திருமலை நாயக்கர் மஹால் - மதுரை
-
#1
*திருமலை நாயக்கர் மஹால் என அழைக்கப்படும் திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரையை
ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் 1636 ஆம்
ஆண்ட...
1 week ago
36 கருத்துக்கள்:
Me the First :-) Atlast :-)
ஆஹா ஒரு உசி போடுறதை இப்படியொர்யு அருமையான கதையா எழுதியிருக்கீங்களா??
குழந்தையுடன் செலவழிக்கும் ஒவ்வொரு அனுபவமும் இனிமையானது தான். பரீக்ஷித்தை பத்திரமா பார்த்துக்கோங்க. அப்புறம் இந்த மாதிரி தடுப்பூசி போட்டால், காய்ச்சல் வருவது சகஜம். ஆனால், அது ஒரு நாளைக்கு மேல் இருக்கக்கூடாது.
Take Care.
கிகிகிகி
ஹிஹிஹி
ஹாஹாஹா
இது எதுக்கு தெரியுமா?
எனக்கும் ஊசின்னா பயம்.. :)
+
நீங்கள் பரவாயில்லை ....நான் எல்லாம், ஏன் பொண்ணுக்கு ஊசி போடும் போது வெளியில வந்து விடுவேன்...
இங்கேயும் கொஞ்சம் எட்டி பாருங்க
http://valibarsangam.wordpress.com
அச்சோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ குட்டிப் பாப்பாவுக்கு வலிச்சுருக்குமே....
எனக்குக் கூட ஊசின்ன்ன்ன்ன்ன்ன்ன்னால் பயமோ பயம்...
அன்புடன் அருணா
நீங்கள் பரவாயில்லை ....நான் எல்லாம், ஏன் பொண்ணுக்கு ஊசி போடும் போது வெளியில ஓடி வந்து விடுவேன்...:-)
இங்கேயும் கொஞ்சம் எட்டி பாருங்க
http://valibarsangam.wordpress.com
// விஜய் said...
Me the First :-) Atlast :-)
//
:))
// விஜய் said...
ஆஹா ஒரு உசி போடுறதை இப்படியொர்யு அருமையான கதையா எழுதியிருக்கீங்களா??
குழந்தையுடன் செலவழிக்கும் ஒவ்வொரு அனுபவமும் இனிமையானது தான். பரீக்ஷித்தை பத்திரமா பார்த்துக்கோங்க. அப்புறம் இந்த மாதிரி தடுப்பூசி போட்டால், காய்ச்சல் வருவது சகஜம். ஆனால், அது ஒரு நாளைக்கு மேல் இருக்கக்கூடாது.
Take Care.
//
இந்த வாட்டி காய்ச்சல் வராதுனு சொல்லிட்டாங்க:)
நன்றி விஜய்:))
// கார்க்கி said...
கிகிகிகி
ஹிஹிஹி
ஹாஹாஹா
இது எதுக்கு தெரியுமா?
எனக்கும் ஊசின்னா பயம்.. :)
//
அப்பற எதுக்கு இவ்ளோ சிரிப்பு:))
// பழமைபேசி said...
+
//
நன்றி பழமைபேசி:))
// Saravanan said...
நீங்கள் பரவாயில்லை ....நான் எல்லாம், ஏன் பொண்ணுக்கு ஊசி போடும் போது வெளியில வந்து விடுவேன்...
//
:(
// அன்புடன் அருணா said...
அச்சோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ குட்டிப் பாப்பாவுக்கு வலிச்சுருக்குமே....
எனக்குக் கூட ஊசின்ன்ன்ன்ன்ன்ன்ன்னால் பயமோ பயம்...
அன்புடன் அருணா
//
ஆமாங்க பாவம் குட்டி:( நம்மளே ஊசின்னா இவ்ளோ பயப்படறோம்..
பாப்பா சமத்து:)!
அம்மா...:))?
ஹா ஹா ஹா
ஊசி பாப்பாக்கா
உங்களுக்கா
கி கி கி
ஐயயோ எனக்கு கூட ஊசின்னா பயம்ங்க...
ஆஹா.இப்பதான் பின்னூட்டங்கள பார்த்தேன்..இங்க நிறைய பேருக்கு
ஊசியோஃபோபியா இருக்கா ??
குட்டி மேட்டரா இருந்தாலும் க்யூட்டா எழுதியிர்கீங்க...
ஃபுல் சுவிங்ல படிச்சிட்டேன்.
:-))
//ஊசி உனக்கா இல்லை அவனுகானு எனக்கே சந்தேகம் வந்திருச்சு”ன்றாங்க மாமியார்....//
பதிவ படிக்கும் போது இந்த சந்தேகம் எனக்கும் இருந்தது...
Hello madam do remember, im also residing in sterling load.okay.
டெம்ப்ளட் நல்லாருக்கு!
தடுப்பூசி போடுவது மிகவும் அவசியம்.
ஊசிக்கு பயப்படாதிங்க!
ஹிஹிஹி
சும்மா சொல்ல வேண்டியது தான்.
ஆனா ஊசிய பார்த்தா வுடு ஜூட்!
குட்டிப்பையனுக்கு ஊசியா??
நான் தான் பயப்படுவேன்னா, நீங்களுமா??
//என் அருமைத் தம்பி, உடன்பிறவாச் சகோதரன் வானவில் வீதி கார்த்திக்கின் நினைவு வந்தது. இங்க தான் எங்கயாவது சுற்றிக் கொண்டிருப்பான் என்று எண்ணிக் கொண்டேன்...
ஆஹா..! கண்டிப்பா அங்கேதான் எங்காவது இருந்திருப்பேன். :)
யப்பா
ஊசிதானா மேட்டர்.
அமித்துக்கு ஊசி போட போகும் போது கூடவே என் மாமனாரையும் கூட்டிக்கிட்டு போய்டுவேன். ஏன்னா நான் போடுற அலறலில் டாக்டரை தேத்துவதற்கு ஒரு ஆள் வேணுமில்லையா.
அதுக்குத்தான்.
அடக் கடவுளே...ஊசி போடாம விட்டா திரும்பத் திரும்ப காய்ச்சல் வருமே.அதைத் தாங்க முடியுமா!ஊசி வலிக்காதுங்க.
/*“என்ன சீக்கிரம் சொல்லு வேலை இருக்கு. இங்க வந்தாலும் நிம்மதியா இருக்க விடமாட்டியா!!!”
*/
ஹும்.. இருந்தாலும் உங்க ஆளுக்கு தைரியம் அதிகம் தான், உண்மையை ஒளிவு மறைவு இல்லாம சொல்லுறாரு
:)
ஹே..//
எனக்கும் ஊசியென்றால் பயம்தான்...
சின்ன வயசுல ஹாஸ்பிட்டலை விட்டு ஓடில்லாம் வந்திருக்கேன்...
:)
புதுப்பொலிவு, பிரமாதம்!
ஊசிக்கு பயப்படாத ஆளே உலகத்தில இல்லைபோல இருக்கு:)))
Poorani,
மகளிர்தின வாழ்த்துக்கள்!!!
எவ்வளவோ கஷ்ட பட்டிருந்தாலும் இப்பவும் ஊசி என்றால் எனக்கு பயம்தான்.
உங்கள் உணர்ச்சிகள் ஏற்றுக் கொள்ளப் படுகின்றன தோழி
next post...?
:))))
:)
நல்லா இருக்கே இது.. ஊசின்னா நானும் பயந்துட்டு இருந்தவ தான் இரண்டு குழந்தைக்காக ஊசியா போட்டுக்கிட்டு போட்டுகிட்டு இப்ப பயமே இல்லை.. குட்டீஸுக்கு போடும்போதும் அவங்க செகண்ட்ஸ்ல தேறி வரது பாத்து பயமே போயிடுச்சு.. என் பொண்ணு அழவே மாட்டா.. பையன் ரெண்டு செகண்ட் அழுதுட்டு அவர்குடுக்கற மிட்டாய் வாங்கிட்டு வந்துடுவான்..
Post a Comment