நானும் சென்னை வந்ததிலிருந்து இந்த போஸ்ட்டைப் போடனும்னு நினைத்திட்டு இருக்கேன் ஆனால் பாருங்க நேரமே இல்லை. சரி சரி மேட்டரை சொல்லிடறேன்.
எங்க பிளாட்ல குட்டீஸ் நிறைய இருக்காங்க. சாயந்திரம் ஒரு 7 மணில இருந்து 9 மணி வரைக்கும் இவங்க ராஜ்ஜியம் தான். நானும் பரிக்ஷித்த தூக்கிட்டு இவங்க எங்க எல்லாம் ஓடறாங்களோ பின்னாடியே போயிடுவேன். பரிக்ஷித்திற்க்கும் இது தான் பிடிக்கிறது. வீட்டிற்க்குள் இருப்பதை விட வெளில இருக்கறதை தான் விரும்பறான்:))
ஆனால் இதில் விசியம் என்னன்னா எங்க பிளாட்ல இருக்கிற மக்களை விட அவர்களின் குட்டீஸைத் தான் எனக்கு நல்லா தெரியும். இது வரைக்கும் மொத்தமா எவ்ளோ பிளாட் இருக்கு அதில் யார் இருக்காங்கன்னு சத்தியமா எனக்கு தெரியாதுங்க. கணக்கு போட்டுப் பார்த்தா ஒரு 8 வீடு தான் தெரியும்.
ஆனால் எல்லா குட்டீஸையும் நல்லா தெரியும். அவங்க அம்மாங்க எல்லாம் ஒரு நாள் கூட நம்ம பையன் விளையாடறான், பொண்ணு விளையாடறாள்னு மருந்துக்கு கூட எட்டிப் பார்த்ததில்லை. இத்தனைக்கும் அவங்க வேலைக்கு எல்லாம் போவதில்லை. வீட்டில் தான் இருக்காங்க. எப்பவும் வீட்டுக் கதவு அடைத்து தான் இருக்கும். அப்படி என்ன தான் பண்ணுவாங்களோ போங்க!!!
இதில் ஒரு வீட்டில் அவங்க குட்டி எப்பவும் வெளில நின்னு கதவை தட்டுவது தான் வேலையே.. ஆனால் அடைத்த கதவு அடைத்தது தான் திறக்கவே மாட்டாங்க.. இதை நினைத்து சிரிக்கறதா?? அழறதா??
சரி இது எல்லாத்தையும் விட்டுட்டு நாம இந்த மழலைகள் செய்யும் வாலுத் தனத்தை பற்றி பேசுவோம்..
வீக் எண்ட் வந்திட்டா போதும் அவ்ளோ தான் ஸ்கூல் விட்டு வந்ததிலிருந்து ஆரம்பிச்சா பசிக்கும் வரை ஓரே ஆட்டம் தான். இந்த வாரம் வெள்ளிக்கிழமை நான் 7 மணி வாக்கில் வீட்டினுள் இருந்து பரிக்ஷித்த தூக்கிட்டு வெளில வந்தேன். ஓரே மழலைகள் கூட்டம் இதில் ஆச்சரியமான விசயம் என்னன்னா படிக்கட்டுகளில் உட்கார்ந்திட்டு இருந்ததுதான் (ஏதும் செய்யாமல் உட்கார்ந்திட்டு இருப்பதுனா அதில ஏதோ இருக்கு அதாவது யாரோ வசமா அவங்க கிட்ட மாட்டிகிட்டாங்கன்னு அர்த்தம்). என்னதான் நடக்குதுன்னு பக்கதில போய்ப் பார்த்தா ஒரு அக்கா மாட்டிகிட்டாங்க எல்லோருக்கும் நடுவுல. எல்லோருக்கும் மெஹந்தி போட்டு விட்டுட்டு இருந்தாங்க. பாப்பாவுக்கும் போட்டு விடுங்கன்னு அதில் ஒரு பிஞ்சு பரிக்ஷித் கையைப் பிடிக்க இவன் வீல்னு கத்த அப்றம் அந்த குட்டியே தன் பந்தைக் கொடுத்து இவரை சமாதனப்படுத்தினதுதான் ஹைலைட்:)))
தம்பி பாப்பா விரலை வாயில் வைக்கும் அதனால வேண்டாம்னு சொன்னா என்னமா கேள்வி கேட்கிறாங்க... ஏன் வாயில் வைக்குது?? எதுக்கு?? நீங்க வேண்டாம்னு சொல்லுங்க இல்லைன்னா நான் சொல்லறேன்..(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:((() இன்னொரு குட்டி நானும் தான் வாய்ல விரல வைக்கறேன் நானெல்லாம் மெஹந்தி வைக்கலையா????
இல்லப்பா தம்பி மெஹந்தி போட்ட பிறகு வாயில விரலை வைத்தா இது எல்லாம் வயித்துக்குள்ள போகும் இல்ல அதான் - நான்
ஏன்????? வயித்துக்குள்ள போனா என்னா???? - குட்டீஸ்
வயிறு வலிக்கும் - நான்
ஏன் வலிக்குது???? அதெப்படி உங்களுக்கு தெரியும்??? தம்பி பாப்பா உங்க கிட்ட சொல்லுமா??? ஆனால் ஏன் என்கிட்ட மட்டும் தம்பி பேச மாட்டேங்குறா???
டிஸ்கி: இன்னும் நிறைய வால் தனங்கள் இருக்கு. அதையும் போட்டா பதிவு ரொம்பபபபப் பெருசா இருக்கும். இது வெறும் இன்ரொடக்ஸனா மட்டும் இருக்கட்டும் அடுத்த பாகத்தில மீதி.....
இன்றைய ஆசிர்வாதங்கள்
-
#1
"உலகம் ‘பொருந்திப் போ’ என்கிறது.
பிரபஞ்சம் ‘தனித்து விளங்கு’ என்கிறது."
#2
"உங்கள் வாக்குறுதி
யாரோ ஒருவரின் நம்பிக்கை.
வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள...
23 hours ago
109 கருத்துக்கள்:
வந்தேன்..!
//நானும் பரிக்ஷித்த தூக்கிட்டு இவங்க எங்க எல்லாம் ஓடறாங்களோ பின்னாடியே போயிடுவேன். //
ஏன் முன்னாடி ஓடுற அளவுக்கு தெம்பு இல்லையா?
//வீட்டிற்க்குள் இருப்பதை விட வெளில இருக்கறதை தான் விரும்பறான்:)) //
வீட்டுல இருக்கற ரெண்டுப்ரே முகத்தை எத்தனை நேரந்தான் பார்ப்பான்? அதான்!
எங்க விஷ்ணுவுக்கு வீட்டுக் கதவுகிட்ட போனாலே சந்தோசம்தான்.
வந்துட்டேன் தங்ஸ்!
ஆனா மாப்பிய சமாளிக்க ரொம்ப தான் சிரமம் போல:-))
//எப்பவும் வீட்டுக் கதவு அடைத்து தான் இருக்கும். அப்படி என்ன தான் பண்ணுவாங்களோ போங்க!!!//
நிம்மதியா மெகா சீரியல் பார்ப்பாங்க.
//பாப்பாவுக்கும் போட்டு விடுங்கன்னு அதில் ஒரு பிஞ்சு பரிக்ஷித் கையைப் பிடிக்க இவன் வீல்னு கத்த அப்றம் அந்த குட்டியே தன் பந்தைக் கொடுத்து இவரை சமாதனப்படுத்தினதுதான் ஹைலைட்:)))
//
சோ ஸ்வீட்.
//இன்னொரு குட்டி நானும் தான் வாய்ல விரல வைக்கறேன் நானெல்லாம் மெஹந்தி வைக்கலையா????
//
பதில் சொல்லுங்க......
//இன்னும் நிறைய வால் தனங்கள் இருக்கு. அதையும் போட்டா பதிவு ரொம்பபபபப் பெருசா இருக்கும்//
தினமும் போடுங்க
//ஏன் வலிக்குது???? அதெப்படி உங்களுக்கு தெரியும்??? தம்பி பாப்பா உங்க கிட்ட சொல்லுமா??? ஆனால் ஏன் என்கிட்ட மட்டும் தம்பி பேச மாட்டேங்குறா???//
அவ்வ்வ்வ்வ் ! உங்கபாடு கொஞ்சம் திண்டாட்டம்தான்போல.
ஹ்ம்ம்..! நாங்க இருக்கற அபார்ட்மென்ட்ல கூட வாண்டுகள் கூட்டம் இருக்கு அனால், என்ன எல்லாம் அரபி!
விஷ்ணுவுக்கு தூரத்தில் நின்று வேடிக்கை காட்டுவதோடு சரி. :((
// இது வெறும் இன்ரொடக்ஸனா மட்டும் இருக்கட்டும் அடுத்த பாகத்தில மீதி.....//
எதிர்ப்பார்க்கிறோம்.
பகிர்வுக்கு நன்றி.
//தம்பி பாப்பா விரலை வாயில் வைக்கும் அதனால வேண்டாம்னு சொன்னா என்னம்மா கேள்வி கேட்கிறாங்க//
அடடே...!
நல்ல பழக்கம்தான் :)
//வெறும் இன்ரொடக்ஸனா மட்டும் இருக்கட்டும் அடுத்த பாகத்தில மீதி//
ஒ...!
வெறும் இண்ட்ரோவுக்கே இவ்ளோ டெரரா டைட்டிலா
ரைட்டு :)
எங்க வீட்டு வாண்டு மருதாணி வச்ச அடுத்த இரண்டு நிமிடத்தில் கலர் புடிச்சிடுச்சு..கழுவனும்னு ஒத்தக்காலில் நிக்கும்.. ;-)
குட்டீஸ்..ஆல்வேய்ஸ் இண்ட்ரஸ்டிங்...
நான் ஏதோ சுட்டி டிவி விளம்பரம்னு நினச்சேன்..
அப்பாலிக்கா பாத்தா மெய்யாலுமே சுட்டி டிவி தான்.
//இன்னும் நிறைய வால் தனங்கள் இருக்கு.//
வால்பையன் வந்து சொல்வாரா ??
இன்னொரு குட்டி நானும் தான் வாய்ல விரல வைக்கறேன் நானெல்லாம் மெஹந்தி வைக்கலையா????
athane antha pappa vakkum pothu unga paapaku vacha enna
:-)
\\ப்பவும் வீட்டுக் கதவு அடைத்து தான் இருக்கும். அப்படி என்ன தான் பண்ணுவாங்களோ போங்க!!!\\
வீட்ல வேலைன்னு ஒன்னு இருக்கும்
ஹூம்
அம்மனிக்கு அதெல்லாம் எப்படி தெரியும்
மாமியார் செய்து தந்த பிரியாணி, கேசரி தின்னுபோட்டு குட்டீஸோட விளையாட போய்டுவீக
:) :) :)
\\இது வெறும் இன்ரொடக்ஸனா மட்டும் இருக்கட்டும் அடுத்த பாகத்தில மீதி...\\
இங்கேயும் தொடரா ...
என் ப்ளாட்டில் உள்ள குட்டிகளை நான் குட்டிச்சாத்தான்னுதான் கூப்பிடுவேன்..அவ்வளவு சேட்டை காரைக்கூட போக விடாமல் வழியை மறைத்துக் கொண்டு....
கடந்த வெள்ளிக்கிழமை மிகவும் வேலை முடிந்து மிகவும் களைத்துப் போய் மூன்றாம் மாடி ஏறும்போது இரண்டாம் மாடியிலேயே ஒரு வாண்டு கையை வைத்து மேலே ஏற விடாமல் மறைத்துக் கொண்டான்.. ஆனா வாண்டு செம்ம க்யூட்.. எனக்கே சிரிப்பு வந்துவிட்டது அந்த பிஞ்சு விரலை கொண்டு வழியை மறைத்த போது..எப்படியோ அவனுக்கே மனசு வந்து விட்டான் ஒரு வழியாய்!!

குட்டீஸ்கு என்ன பதில் சொன்னீங்க...
//இது வரைக்கும் மொத்தமா எவ்ளோ பிளாட் இருக்கு அதில் யார் இருக்காங்கன்னு சத்தியமா எனக்கு தெரியாதுங்க//
சென்னை மாதிரி நகரங்கள்ல இதுதான் இப்போதைய நிலைமை...
wow, supera irukku.
kutties pathi eluthinaal ippadithaan mudikka mutiyaathu. next part seekiram. :)
varen varen kuttikka varen :)
//வீட்டிற்க்குள் இருப்பதை விட வெளில இருக்கறதை தான் விரும்பறான்:))
//
pinne veetukkula irutha poorniyai thane thirumba thirumba parkanum
parkishith romba intelligent
athaiai pola :)
pathil sonningala illaiya
சூப்பர் சூப்பர்...
பதிவு எவ்வளவு பெருசா போனாலும் இதெல்லாம் படிக்க சுவை தான் :)
குட்டிகள வச்சு ஒரு குட்டி ராஜ்ஜியமே நடத்துறீங்க.
பார்த்து வடிவேல் படத்துல வரும் சுட்டி மாதிரி ஏதாவது இருந்தா உங்களுக்கு சிக்கல் ஆயிடும்
எங்க பிளாட்ல குட்டீஸ் நிறைய இருக்காங்க. சாயந்திரம் ஒரு 7 மணில இருந்து 9 மணி வரைக்கும் இவங்க ராஜ்ஜியம் தான். நானும் பரிக்ஷித்த தூக்கிட்டு இவங்க எங்க எல்லாம் ஓடறாங்களோ பின்னாடியே போயிடுவேன். பரிக்ஷித்திற்க்கும் இது தான் பிடிக்கிறது. வீட்டிற்க்குள் இருப்பதை விட வெளில இருக்கறதை தான் விரும்பறான்:))///
நல்ல உடற்பயிற்சிதானே!!
ஆனால் இதில் விசியம் என்னன்னா எங்க பிளாட்ல இருக்கிற மக்களை விட அவர்களின் குட்டீஸைத் தான் எனக்கு நல்லா தெரியும்!
பெரியவஙக வெளிய வருவதில்லையே!
இதில் ஒரு வீட்டில் அவங்க குட்டி எப்பவும் வெளில நின்னு கதவை தட்டுவது தான் வேலையே.. ஆனால் அடைத்த கதவு அடைத்தது தான் திறக்கவே மாட்டாங்க.. இதை நினைத்து சிரிக்கறதா?? அழறதா??///
மூடாத கதவுகள் இருந்தது ஒருகாலம்!!
\\தம்பி பாப்பா விரலை வாயில் வைக்கும் அதனால வேண்டாம்னு சொன்னா என்னம்மா கேள்வி கேட்கிறாங்க... \\
ஆமாம், குட்டீஸ்களுடைய கேல்விக்கு பதில் சொல்ல இந்த உலகத்தில் எந்த அறிவாலியாலும் முடியாதுங்க...
:) ஆமா ஆமா இவங்க கேக்கற கேள்விக்கு பதில் சொல்லியே மாளாது நம்மால..
முன்பெல்லாம் ஊர் சுத்துனமா தூங்குறதுக்கு ஊட்டுக்குப் போனமான்னு சின்னதுக வாழ்க்கை.அதுலயும் அம்மணிக ஆறுமணியான்னா ஓடிருவாக.இப்ப கோழிக்குஞ்சுக மாதிரி வீட்டுக்குள்ள அடைஞ்சமா கோழிக்கூட்டத் திறந்ததும் கீச் மூச்ன்னு வெளியே ஓடினமான்னு குட்டீஸ் வாழ்க்கை.
பதிவு நான் இன்னும் படிக்கலை...விமானத்துக்கு நேரமாச்சு... வெள்ளிக்கிழமைதான் இனி! இஃகிஃகி!!

sooooooooooo sweet :-)
பூர்ணி,சிலசமயங்களில் கேள்வி கேட்டே ஒரு வழி பண்ணிடுவாங்க இந்த குட்டீஸ் எல்லாம்.திணறணும்.
//இவன் வீல்னு கத்த அப்றம் அந்த குட்டியே தன் பந்தைக் கொடுத்து இவரை சமாதனப்படுத்தினதுதான் ஹைலைட்:)))//
!!!
// ஆயில்யன் said...
//வெறும் இன்ரொடக்ஸனா மட்டும் இருக்கட்டும் அடுத்த பாகத்தில மீதி//
ஒ...!
வெறும் இண்ட்ரோவுக்கே இவ்ளோ டெரரா டைட்டிலா
ரைட்டு :)//
ரிப்பீட்டு!
:)))))))))))
ம்ம்ம் .....தொடருங்க....தொடருங்க....
அன்புடன் அருணா
அட! ஆரம்பமே குட்டீஸ் அதிரடி கேள்விலாம் கேட்டிருக்காங்க!! தொடருங்க!
// கணினி தேசம் said...
வந்தேன்..!
//
வாங்க வாங்க:))
// கணினி தேசம் said...
//நானும் பரிக்ஷித்த தூக்கிட்டு இவங்க எங்க எல்லாம் ஓடறாங்களோ பின்னாடியே போயிடுவேன். //
ஏன் முன்னாடி ஓடுற அளவுக்கு தெம்பு இல்லையா?
//
இருங்க இருங்க உங்களை விஷ்ணுகிட்ட மாட்டிவிடறேன்:)
நானும் ச்சின்னை பையன் தான்
//
தம்பி பாப்பா விரலை வாயில் வைக்கும் அதனால வேண்டாம்னு சொன்னா என்னமா கேள்வி கேட்கிறாங்க...
//
கேள்விக்கே கேள்வியா!!
//
ஏன் வலிக்குது???? அதெப்படி உங்களுக்கு தெரியும்??? தம்பி பாப்பா உங்க கிட்ட சொல்லுமா??? ஆனால் ஏன் என்கிட்ட மட்டும் தம்பி பேச மாட்டேங்குறா???
//
இது தேவையா.. யம்மா எம்புட்டு கேள்வி
50 ;))
ஒன்னும் சொல்றதுக்கு இல்லை...ரசித்தேன் ;)))
51..போனஸ் ;)
குட்டிஸ் கேட்டமாதிரி நெறைய கொஸ்டீன்ஸ் கேக்கணும் அடுத்த பதிவில பார்த்துக்கலாம்!
குட்டீஸ் கேட்கிற கேள்விக்கு பதிலே சொல்ல முடியாதுங்க!
இந்த குட்டீஸ் ஏரியாவ இன்னைக்கு ஃபுல்லா பார்த்துகிட்டே இருக்கலாம்ப்பா
அவ்ளோ இண்ட்ரஸ்ட்டிங்க்
வர்ஷினி கூட இப்போ வீட்டில் இருப்பது கிடையாது, இடுப்பில் ஏறி உக்காந்து கிட்டு வெளியே கை காண்பிக்கும், போகலனை இடுப்பில் ஒரு உதை.
தன் வயதொத்த பசங்களோட விளையாடுவதற்கு ஆர்வம் அதிகம் காண்பிக்கிறாள்.
நல்லா எஞ்சாய் பண்ணுங்க பரிக்ஷிதோட சேர்ந்து.
நட்புடன் ஜமால் said...
\\ப்பவும் வீட்டுக் கதவு அடைத்து தான் இருக்கும். அப்படி என்ன தான் பண்ணுவாங்களோ போங்க!!!\\
வீட்ல வேலைன்னு ஒன்னு இருக்கும்
ஹூம்
அம்மனிக்கு அதெல்லாம் எப்படி தெரியும்
மாமியார் செய்து தந்த பிரியாணி, கேசரி தின்னுபோட்டு குட்டீஸோட விளையாட போய்டுவீக
ungaluku yen ethanai poramai enga mela jamal
கோபிநாத் said...

nanum
கணினி தேசம் said...
//வீட்டிற்க்குள் இருப்பதை விட வெளில இருக்கறதை தான் விரும்பறான்:)) //
வீட்டுல இருக்கற ரெண்டுப்ரே முகத்தை எத்தனை நேரந்தான் பார்ப்பான்? அதான்!
எங்க விஷ்ணுவுக்கு வீட்டுக் கதவுகிட்ட போனாலே சந்தோசம்தான்.
//
இங்கையும் அதே கதை தான்.. ஏதாவது ஊட்டி விட்டுட்டு இருப்பேன் அதை சாப்பிடறதுக்குள்ள பயங்கறமா அழுவான்.. சரினு தூக்கிட்டு வெளில போலாம்னு வந்தா கதவுகிட்ட வர வரவே எதிர் வீட்டில இருப்பவங்களை பேச சொல்லி கூப்பிடுவான்:)))))
அபி அப்பா said...
வந்துட்டேன் தங்ஸ்!
ஆனா மாப்பிய சமாளிக்க ரொம்ப தான் சிரமம் போல:-))
//
ரொம்ப ரொம்ப:)
கணினி தேசம் said...
//எப்பவும் வீட்டுக் கதவு அடைத்து தான் இருக்கும். அப்படி என்ன தான் பண்ணுவாங்களோ போங்க!!!//
நிம்மதியா மெகா சீரியல் பார்ப்பாங்க.
//
ஒரு வேளை அப்படியா இருக்குமோ???
ஒரு வேளை இப்படியா இருக்குமோ???
கணினி தேசம் said...
//பாப்பாவுக்கும் போட்டு விடுங்கன்னு அதில் ஒரு பிஞ்சு பரிக்ஷித் கையைப் பிடிக்க இவன் வீல்னு கத்த அப்றம் அந்த குட்டியே தன் பந்தைக் கொடுத்து இவரை சமாதனப்படுத்தினதுதான் ஹைலைட்:)))
//
சோ ஸ்வீட்
//
நல்ல குட்டீஸ்!!
SUREஷ் said...
//இன்னொரு குட்டி நானும் தான் வாய்ல விரல வைக்கறேன் நானெல்லாம் மெஹந்தி வைக்கலையா????
//
பதில் சொல்லுங்க......
//
ஆஹா:((
SUREஷ் said...
//இன்னும் நிறைய வால் தனங்கள் இருக்கு. அதையும் போட்டா பதிவு ரொம்பபபபப் பெருசா இருக்கும்//
தினமும் போடுங்க
//
நேரம் இருப்பின்!
கணினி தேசம் said...
//ஏன் வலிக்குது???? அதெப்படி உங்களுக்கு தெரியும்??? தம்பி பாப்பா உங்க கிட்ட சொல்லுமா??? ஆனால் ஏன் என்கிட்ட மட்டும் தம்பி பேச மாட்டேங்குறா???//
அவ்வ்வ்வ்வ் ! உங்கபாடு கொஞ்சம் திண்டாட்டம்தான்போல.
ஹ்ம்ம்..! நாங்க இருக்கற அபார்ட்மென்ட்ல கூட வாண்டுகள் கூட்டம் இருக்கு அனால், என்ன எல்லாம் அரபி!
விஷ்ணுவுக்கு தூரத்தில் நின்று வேடிக்கை காட்டுவதோடு சரி. :((
//
பாஷை தெரியாத இடத்தில வேற வழி இல்லை:(
கணினி தேசம் said...
// இது வெறும் இன்ரொடக்ஸனா மட்டும் இருக்கட்டும் அடுத்த பாகத்தில மீதி.....//
எதிர்ப்பார்க்கிறோம்.
பகிர்வுக்கு நன்றி.
//
டைம் கிடைக்கும் போது எல்லாம் போடறேன்..
ஆயில்யன் said...
//தம்பி பாப்பா விரலை வாயில் வைக்கும் அதனால வேண்டாம்னு சொன்னா என்னம்மா கேள்வி கேட்கிறாங்க//
அடடே...!
நல்ல பழக்கம்தான் :)
//
அத்தனை வாண்டுகளுக்கும் நடுவில் மாட்டி விழி பிதுங்கும் அளவுக்கு கேள்வி கேட்டால் என்ன செய்வேன் நான் அதுவும் தனியாக:))
ஆயில்யன் said...
//வெறும் இன்ரொடக்ஸனா மட்டும் இருக்கட்டும் அடுத்த பாகத்தில மீதி//
ஒ...!
வெறும் இண்ட்ரோவுக்கே இவ்ளோ டெரரா டைட்டிலா
ரைட்டு :)
//
அப்போ தானே நீங்க எல்லாம் ஊள்ளாற வர்ரீங்க:)
தமிழ் பிரியன் said...
எங்க வீட்டு வாண்டு மருதாணி வச்ச அடுத்த இரண்டு நிமிடத்தில் கலர் புடிச்சிடுச்சு..கழுவனும்னு ஒத்தக்காலில் நிக்கும்.. ;-)
//
இங்கே எதிர் வீட்டுக் குட்டியும் உங்க வாண்டு போல் தான்:)
அ.மு.செய்யது said...
குட்டீஸ்..ஆல்வேய்ஸ் இண்ட்ரஸ்டிங்...
//
ஆமாங்க! அவர்களின் நடுவில் இருந்தால் மனசுக்கு அவ்ளோ சந்தோசமா இருக்கு:)
அ.மு.செய்யது said...
நான் ஏதோ சுட்டி டிவி விளம்பரம்னு நினச்சேன்..
அப்பாலிக்கா பாத்தா மெய்யாலுமே சுட்டி டிவி தான்.
//
இது எங்க ஏரியா சுட்டி டீவிங்க!
அ.மு.செய்யது said...
//இன்னும் நிறைய வால் தனங்கள் இருக்கு.//
வால்பையன் வந்து சொல்வாரா ??
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
gayathri said...
இன்னொரு குட்டி நானும் தான் வாய்ல விரல வைக்கறேன் நானெல்லாம் மெஹந்தி வைக்கலையா????
athane antha pappa vakkum pothu unga paapaku vacha enna
//
நல்ல கேள்வி காயு:)))
இனியவள் புனிதா said...
:-)
//
வாங்க புனிதா.. படித்து ரசித்தீங்களா!!!
நட்புடன் ஜமால் said...
\\ப்பவும் வீட்டுக் கதவு அடைத்து தான் இருக்கும். அப்படி என்ன தான் பண்ணுவாங்களோ போங்க!!!\\
வீட்ல வேலைன்னு ஒன்னு இருக்கும்
ஹூம்
அம்மனிக்கு அதெல்லாம் எப்படி தெரியும்
மாமியார் செய்து தந்த பிரியாணி, கேசரி தின்னுபோட்டு குட்டீஸோட விளையாட போய்டுவீக
:) :) :)
//
சரியாக சொன்ன ஜமால் வாழ்க!!
நட்புடன் ஜமால் said...
\\இது வெறும் இன்ரொடக்ஸனா மட்டும் இருக்கட்டும் அடுத்த பாகத்தில மீதி...\\
இங்கேயும் தொடரா ...
//
வேற எங்கே??????
உங்களுக்கு தான் வலை உலகமே தெரியுமே!!!!
இனியவள் புனிதா said...
என் ப்ளாட்டில் உள்ள குட்டிகளை நான் குட்டிச்சாத்தான்னுதான் கூப்பிடுவேன்..அவ்வளவு சேட்டை காரைக்கூட போக விடாமல் வழியை மறைத்துக் கொண்டு....
கடந்த வெள்ளிக்கிழமை மிகவும் வேலை முடிந்து மிகவும் களைத்துப் போய் மூன்றாம் மாடி ஏறும்போது இரண்டாம் மாடியிலேயே ஒரு வாண்டு கையை வைத்து மேலே ஏற விடாமல் மறைத்துக் கொண்டான்.. ஆனா வாண்டு செம்ம க்யூட்.. எனக்கே சிரிப்பு வந்துவிட்டது அந்த பிஞ்சு விரலை கொண்டு வழியை மறைத்த போது..எப்படியோ அவனுக்கே மனசு வந்து விட்டான் ஒரு வழியாய்!!
//
அழகு!!
புதியவன் said...
//ஏன் வலிக்குது???? அதெப்படி உங்களுக்கு தெரியும்??? தம்பி பாப்பா உங்க கிட்ட சொல்லுமா??? ஆனால் ஏன் என்கிட்ட மட்டும் தம்பி பேச மாட்டேங்குறா???//
குட்டீஸ்கு என்ன பதில் சொன்னீங்க...
//
:))))(இது தான்)
புதியவன் said...
//இது வரைக்கும் மொத்தமா எவ்ளோ பிளாட் இருக்கு அதில் யார் இருக்காங்கன்னு சத்தியமா எனக்கு தெரியாதுங்க//
சென்னை மாதிரி நகரங்கள்ல இதுதான் இப்போதைய நிலைமை...
//
உண்மை தான் புதியவன்:((
Karthik said...
wow, supera irukku.
kutties pathi eluthinaal ippadithaan mudikka mutiyaathu. next part seekiram. :)
//
கண்டிப்பா:))
Priya Kannan said...
varen varen kuttikka varen :)
//
அப்போ எனக்காக வரலையா????/
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
Priya Kannan said...
//வீட்டிற்க்குள் இருப்பதை விட வெளில இருக்கறதை தான் விரும்பறான்:))
//
pinne veetukkula irutha poorniyai thane thirumba thirumba parkanum
parkishith romba intelligent
athaiai pola :)
//
இது உங்களுக்கே கொஞ்சம் அதிகமா தோனலை!!!
Priya Kannan said...
pathil sonningala illaiya
//
ஹி ஹி
வெட்டிப்பயல் said...
சூப்பர் சூப்பர்...
பதிவு எவ்வளவு பெருசா போனாலும் இதெல்லாம் படிக்க சுவை தான் :)
//
ஆமாம் அண்ணா:))
Syed Ahamed Navasudeen said...
குட்டிகள வச்சு ஒரு குட்டி ராஜ்ஜியமே நடத்துறீங்க.
பார்த்து வடிவேல் படத்துல வரும் சுட்டி மாதிரி ஏதாவது இருந்தா உங்களுக்கு சிக்கல் ஆயிடும்
//
:(((
thevanmayam said...
எங்க பிளாட்ல குட்டீஸ் நிறைய இருக்காங்க. சாயந்திரம் ஒரு 7 மணில இருந்து 9 மணி வரைக்கும் இவங்க ராஜ்ஜியம் தான். நானும் பரிக்ஷித்த தூக்கிட்டு இவங்க எங்க எல்லாம் ஓடறாங்களோ பின்னாடியே போயிடுவேன். பரிக்ஷித்திற்க்கும் இது தான் பிடிக்கிறது. வீட்டிற்க்குள் இருப்பதை விட வெளில இருக்கறதை தான் விரும்பறான்:))///
நல்ல உடற்பயிற்சிதானே!!
//
வாங்க தேவா....
thevanmayam said...
ஆனால் இதில் விசியம் என்னன்னா எங்க பிளாட்ல இருக்கிற மக்களை விட அவர்களின் குட்டீஸைத் தான் எனக்கு நல்லா தெரியும்!
பெரியவஙக வெளிய வருவதில்லையே!
//
உண்மைதான்:((
thevanmayam said...
இதில் ஒரு வீட்டில் அவங்க குட்டி எப்பவும் வெளில நின்னு கதவை தட்டுவது தான் வேலையே.. ஆனால் அடைத்த கதவு அடைத்தது தான் திறக்கவே மாட்டாங்க.. இதை நினைத்து சிரிக்கறதா?? அழறதா??///
மூடாத கதவுகள் இருந்தது ஒருகாலம்!!
//
என்ன சொல்ல!!
கலாட்டா அம்மணி said...
\\தம்பி பாப்பா விரலை வாயில் வைக்கும் அதனால வேண்டாம்னு சொன்னா என்னம்மா கேள்வி கேட்கிறாங்க... \\
ஆமாம், குட்டீஸ்களுடைய கேல்விக்கு பதில் சொல்ல இந்த உலகத்தில் எந்த அறிவாலியாலும் முடியாதுங்க...
//
ஆமாம் பாருங்க என்னாலையே முடியலைன்னா!!!
நாணல் said...
:) ஆமா ஆமா இவங்க கேக்கற கேள்விக்கு பதில் சொல்லியே மாளாது நம்மால..
//
இனி பரிக்ஷித் என்ன என்ன எல்லாம் கேட்க்கப் போறாரோ!!!!!
நாகை சிவா said...
:))))
//
வாங்க அண்ணே!!!
ராஜ நடராஜன் said...
முன்பெல்லாம் ஊர் சுத்துனமா தூங்குறதுக்கு ஊட்டுக்குப் போனமான்னு சின்னதுக வாழ்க்கை.அதுலயும் அம்மணிக ஆறுமணியான்னா ஓடிருவாக.இப்ப கோழிக்குஞ்சுக மாதிரி வீட்டுக்குள்ள அடைஞ்சமா கோழிக்கூட்டத் திறந்ததும் கீச் மூச்ன்னு வெளியே ஓடினமான்னு குட்டீஸ் வாழ்க்கை.
//
ஆமாங்க!
பழமைபேசி said...
பதிவு நான் இன்னும் படிக்கலை...விமானத்துக்கு நேரமாச்சு... வெள்ளிக்கிழமைதான் இனி! இஃகிஃகி!!
//
போங்க போங்க
ராஜா said...
//ஏன் வலிக்குது???? அதெப்படி உங்களுக்கு தெரியும்??? தம்பி பாப்பா உங்க கிட்ட சொல்லுமா??? ஆனால் ஏன் என்கிட்ட மட்டும் தம்பி பேச மாட்டேங்குறா???//
sooooooooooo sweet :-)
//
:)
ஹேமா said...
பூர்ணி,சிலசமயங்களில் கேள்வி கேட்டே ஒரு வழி பண்ணிடுவாங்க இந்த குட்டீஸ் எல்லாம்.திணறணும்.
//
ஆமாம் ஹேமா.. என்னால பதில் சொல்ல முடியாத மாதிரியான கேள்விதான் கேட்கிறாங்க:((
சந்தனமுல்லை said...
//இவன் வீல்னு கத்த அப்றம் அந்த குட்டியே தன் பந்தைக் கொடுத்து இவரை சமாதனப்படுத்தினதுதான் ஹைலைட்:)))//
!!!
//
இப்படியும் சில குட்டீஸ்!!!
G3 said...
:)))))))))))
//
அக்காக்கு எப்பவும் ஸ்மைல் தான்:))
அன்புடன் அருணா said...
ம்ம்ம் .....தொடருங்க....தொடருங்க....
அன்புடன் அருணா
//
நன்றிங்க:)
ஷீ-நிசி said...
அட! ஆரம்பமே குட்டீஸ் அதிரடி கேள்விலாம் கேட்டிருக்காங்க!! தொடருங்க
//
நன்றி
நசரேயன் said...
நானும் ச்சின்னை பையன் தான்
//
யாருங்க????????
நீங்க சின்னப் பையனா??????
நம்பிட்டேங்க!!!!!
நசரேயன் said...
//
தம்பி பாப்பா விரலை வாயில் வைக்கும் அதனால வேண்டாம்னு சொன்னா என்னமா கேள்வி கேட்கிறாங்க...
//
கேள்விக்கே கேள்வியா!!
//
நாங்க எல்லாம் அவ்ளோ புத்திசாலியாக்க!!!
நசரேயன் said...
//
ஏன் வலிக்குது???? அதெப்படி உங்களுக்கு தெரியும்??? தம்பி பாப்பா உங்க கிட்ட சொல்லுமா??? ஆனால் ஏன் என்கிட்ட மட்டும் தம்பி பேச மாட்டேங்குறா???
//
இது தேவையா.. யம்மா எம்புட்டு கேள்வி
//
இதுக்கே உங்களுக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருங்குதே என்னை நினைச்சுப் பார்த்தீங்களா????
கோபிநாத் said...
50 ;))
ஒன்னும் சொல்றதுக்கு இல்லை...ரசித்தேன் ;)))
//
:)))
கோபிநாத் said...
51..போனஸ் ;)
//
தாங்ஸ் அண்ணா:))
ஜீவன் said...
குட்டிஸ் கேட்டமாதிரி நெறைய கொஸ்டீன்ஸ் கேக்கணும் அடுத்த பதிவில பார்த்துக்கலாம்!
//
:))
வால்பையன் said...
குட்டீஸ் கேட்கிற கேள்விக்கு பதிலே சொல்ல முடியாதுங்க!
//
ஆமாம் வால்...
அமிர்தவர்ஷினி அம்மா said...
இந்த குட்டீஸ் ஏரியாவ இன்னைக்கு ஃபுல்லா பார்த்துகிட்டே இருக்கலாம்ப்பா
அவ்ளோ இண்ட்ரஸ்ட்டிங்க்
வர்ஷினி கூட இப்போ வீட்டில் இருப்பது கிடையாது, இடுப்பில் ஏறி உக்காந்து கிட்டு வெளியே கை காண்பிக்கும், போகலனை இடுப்பில் ஒரு உதை.
தன் வயதொத்த பசங்களோட விளையாடுவதற்கு ஆர்வம் அதிகம் காண்பிக்கிறாள்.
நல்லா எஞ்சாய் பண்ணுங்க பரிக்ஷிதோட சேர்ந்து.
//
நன்றி அமித்து அம்மா:))
sakthi said...
நட்புடன் ஜமால் said...
\\ப்பவும் வீட்டுக் கதவு அடைத்து தான் இருக்கும். அப்படி என்ன தான் பண்ணுவாங்களோ போங்க!!!\\
வீட்ல வேலைன்னு ஒன்னு இருக்கும்
ஹூம்
அம்மனிக்கு அதெல்லாம் எப்படி தெரியும்
மாமியார் செய்து தந்த பிரியாணி, கேசரி தின்னுபோட்டு குட்டீஸோட விளையாட போய்டுவீக
ungaluku yen ethanai poramai enga mela jamal
//
ஆமாங்க நல்லா கேளுங்க.....
sakthi said...
கோபிநாத் said...
50 ;))
ஒன்னும் சொல்றதுக்கு இல்லை...ரசித்தேன் ;)))
nanum
//
நன்றிங்க முதல் வருகைக்கும்:))
என் பொண்ணு ஸ்கூல் விட்டு வந்தவுடன் பாட்டி ஆசையோடு "இன்னைக்கு ஸ்கூல்ல என்னம்மா சொல்லிக்கொடுதாங்கன்னு" கேட்க என் 4 வயது மகள் "நான் சொன்னால் உனக்கு புரியவா போகுதுன்னு" எதிர் கேள்வி. இந்த காலத்து புள்ளைங்க ரொம்ப ஷார்புங்க
இந்த மாதிரிதான் ...
நல்ல சுவரஸ்யமான நிறைய விஷயத்த லேட்டா தெரிஞ்சுக்கறேன்...
அருமையான டாபிக்...
நிறைய எதிர்பார்க்கிறோம்....
(பசங்க கிட்ட பதில் சொல்லமுடியாம முழிக்கரதுங்கறது சும்மாவா).
Post a Comment