3-மான்கள்,3- புலிகள் ஒரு ஆற்றங்கரையில் நின்று கொண்டிருக்கின்றன. ஒரு படகு வழியா அவைகள் மறுகரைக்கு செல்லவேண்டும்.
நிபந்தனைகள்
1. படகில் 2 மட்டுமே செல்ல அனுமதி.
2. எந்தக் கரையில் இருந்தாலும் சரி புலிகளை விட மான்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் அல்லது சமமாக இருக்கலாம்.
3. புலிகளை விட மான்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் பட்சத்தில் புலிகள் மான்களைத் தின்றுவிடும், அதனால் அப்படி இருக்கக்கூடாது .
சரி உங்க பதிலை பின்னூட்டத்திலே பார்க்கலாம்.
திருமலை நாயக்கர் மஹால் - மதுரை
-
#1
*திருமலை நாயக்கர் மஹால் என அழைக்கப்படும் திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரையை
ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் 1636 ஆம்
ஆண்ட...
1 week ago
17 கருத்துக்கள்:
எனக்கு தெரியும் ஆனா
சொல்ல மாட்டேன் !
உங்களுக்கு தெரியும்ங்கரது தான் எனக்கு முதலிலேயே தெரியுமே ஜீவன் :)
1) 2 புலி
2) 2 ஆடு
3) 1 புலி 1 ஆடு
முடிஞ்சி போல ...
சரீங்களா ?
// அதிரை ஜமால் said...
1) 2 புலி
2) 2 ஆடு
3) 1 புலி 1 ஆடு
முடிஞ்சி போல ...
சரீங்களா ?//
ஹலோ ஸார்.. முதலில் 2 புலி போகுதுனு சொல்லரீங்க அடுத்து எப்படிங்க 2 ஆடு போகும். திரும்ப இக்கரைக்கு படகு மட்டும் தனியா போகாது இல்ல? ஏதாவது ஒரு விலங்கு படகுல அக்கரையிலிருந்து இருந்து இக்கரைக்கு போனா தான திரும்ப 2 விலங்கு வர முடியும். இப்போ புரிந்ததா?
Try again.. thanks for ur reply..
என் வலைப்பதிவில் ஃபாலோவர் ஆனதற்கு ரெம்ப நன்றி.
இப்படி கஷ்டமான கேள்வியெல்லாம் நான் பாஸ் செய்துடுவேன். :-)
கொஞ்சமாவது மூளையை யூஸ் பண்ணுங்க ஸார்..
\\என் வலைப்பதிவில் ஃபாலோவர் ஆனதற்கு ரெம்ப நன்றி. \\
ரீப்பிட்டே:))
இந்த புதிருக்கான விடை ஐந்து சுற்றுகள்ல கிடைக்கும்னு நினைக்கிறேன்.
என்னுடைய முயற்சி:
1) முதல் சுற்றில் இரண்டு புலிகள் படகுல போகுது ஒரு புலிய அக்கரை விட்டு விட்டு ஒரு புலி படகுல திரும்பி வருது (இக்கரை 1 புலி 3 மான், அக்கரை 1 புலி, படகு 1 புலி)
2) வந்த புலி ஒரு மானை படகுல ஏத்திக்கிட்டு ஒரு புலியும் ஒரு மானும் படகுல போகுது அக்கரைல அந்த மானை இறக்கி விட்டு விட்டு திரும்பவும் அதே புலி படகுல இக்கரைக்கு வருது (இக்கரை 2 மான் 1 புலி, அக்கரை 1 புலி 1 மான், படகு 1 புலி)
3) முன்ன மாதிரியே ஒரு மானை படகுல ஏத்திக்கிட்டு ஒரு புலியும் ஒரு மானும் படகுல போகுது அக்கரைல அந்த மானை இறக்கி விட்டு விட்டு திரும்பவும் அதே புலி படகுல இக்கரைக்க்கு வருது (இக்கரை 1 மான் 1 புலி, அக்கரை 1 புலி 2 மான், படகு 1 புலி)
4) நான்காவது முறையும் ஒரு மானை படகுல ஏத்திக்கிட்டு ஒரு புலியும் ஒரு மானும் படகுல போகுது அக்கரைல அந்த மானை இறக்கி விட்டு விட்டு திரும்பவும் அதே புலி படகுல இக்கரைக்க்கு வருது (இக்கரை 0 மான் 1 புலி, அக்கரை 1 புலி 3 மான், படகு 1 புலி)
5) கடைசி முறைய மீதி இருக்கிற முன்றாவது புலிய படகுல ஏத்திக்கிட்டு இரண்டு புலியும் அக்கரைக்கு வந்து சேருது (இக்கரை 0 மான் 0 புலி, அக்கரை 3 புலி 3 மான், படகு 0 புலி 0 மான் )
ஸ்ஸ்ஸ்...அப்பாடா... ஏதோ நம்மளால முடிஞ்சது....
விடை சரியான்னு சீக்கிரம் சொல்லிடுங்க. இல்லன்னா மறுபடியும் முயற்சி செய்வோம்....
Divya said...
\\என் வலைப்பதிவில் ஃபாலோவர் ஆனதற்கு ரெம்ப நன்றி. \\
ரீப்பிட்டே:))
என்னங்க திவ்யா பதில் சொல்லாமலே ரீப்பிட் ஆனா எப்படி?
புதியவன் ஸார் இக்கரைல இருப்பதும், அக்கரைல இருப்பதும் தான் கணக்கு. படகில் இருப்பதை தனியா எடுத்துக்க கூடாது. படகில் இருக்கிற விலங்க, படகு எக்கரைல இருக்கோ அந்த விலங்குடன் சேர்த்துக்கணும். உங்களோட 2nd step ல திரும்ப வந்த புலி ஒரு மானை படகுல ஏத்திக்கிட்டு அந்த புலியும், மானும் படகுல போகுதுனு சொல்லரீங்க இல்லை அக்கரைல ஒரு புலி இருக்குது. இப்போ இதுவும் போன பின்பு 2 புலி, 1 மான். புலி, மானை விட அதிகமா இருந்தா என்ன ஆகும்? so try again.. all the best.
மானை அடித்து நாம் தின்றுவிட்டு, புலிகளையும் அடித்து தோல்களை நல்ல விலைக்கி விற்று விட்டு, கறியை மட்டும் சஞ்சய்க்கு அனுப்பிவிட்டு போலிஸுக்கு போன் பண்ணி சொல்லிவிடலாம்.
எனக்கு இங்க வேலை இல்லை அப்படின்னு போடு போட்டிருக்கு
//வால்பையன் said...
மானை அடித்து நாம் தின்றுவிட்டு, புலிகளையும் அடித்து தோல்களை நல்ல விலைக்கி விற்று விட்டு, கறியை மட்டும் சஞ்சய்க்கு அனுப்பிவிட்டு போலிஸுக்கு போன் பண்ணி சொல்லிவிடலாம்.//
வாங்க வால்பையன்.. சஞ்சய் உங்களை என்ன பண்ணினாருன்னு தெரிஞ்சுக்கலாமா?
// குடுகுடுப்பை said...
எனக்கு இங்க வேலை இல்லை அப்படின்னு போடு போட்டிருக்கு//
வாங்க குடுகுடுப்பை.. இப்படி எல்லாம் சொல்லி நீங்க தப்பிக்க முடியாது. so யோசிங்க..
1) 2 புலி
1.1) 1 புலி return
2) 2 புலி
2.1) 1 புலி return
3) 2 ஆடு
3.1) 1 புலி + 1 ஆடு return
4) 2 ஆடு
4.1) 1 புலி return
5) 2 புலி
5.1) 1 புலி return
6) 2 புலி
முடிஞ்சிச்சா ?
// அதிரை ஜமால் said...
1) 2 புலி
1.1) 1 புலி return
2) 2 புலி
2.1) 1 புலி return
3) 2 ஆடு
3.1) 1 புலி + 1 ஆடு return
4) 2 ஆடு
4.1) 1 புலி return
5) 2 புலி
5.1) 1 புலி return
6) 2 புலி
//
சரிதாங்க அதிரை ஜமால்..
கண்டுபிடிசிட்டீங்க..
வாழ்த்துக்கள்..
அப்போ அடுத்த புதிர்க்கு ரெடி ஆகுங்க.
நாங்க ரெடி ...
Post a Comment