அமிர்தவர்ஷிணி, சந்தன முல்லை, இன்னும் மற்ற வலைப்பூ அம்மாமார்களே பரிக்ஷித்திர்க்கு 6 மாதங்கள் ஆயிற்று.. அவருக்கு சாப்பிட என்ன தரலாம்னு உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.. எங்கள் மருத்துவரிடமும் கேட்டிருக்கிறேன், இருந்தாலும் அனுபவசாலிகளிடம் கேட்டுக்கலாம்னு தான்..
திருமலை நாயக்கர் மஹால் - மதுரை
-
#1
*திருமலை நாயக்கர் மஹால் என அழைக்கப்படும் திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரையை
ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் 1636 ஆம்
ஆண்ட...
1 week ago
47 கருத்துக்கள்:
நிறைய சொல்றோம்
அப்பாக்களும் சொல்லலாம்ல ...
குட்டீஸ்க்கு என் அன்பும் வாழ்த்துக்களும்.
:) Indha pakkam vandhuttu ponadhukku attendence mattum pottukaren :D
யாராக இருந்தாலும்,எதைப்பற்றி எழுதினாலும்
பின்னூட்டம் போடாம நாங்க போகவே மாட்டோம்.
தோ வி ஆர் யூத்.
பரிக்ஷித்திர்க்கு ஆறு மாதங்கள் ஆயிடுச்சா...குறைவின்றி வளர வாழ்த்துக்கள்...
///இருந்தாலும் அனுபவசாலிகளிடம் கேட்டுக்கலாம்னு தான் ///
நான் சின்ன புள்ளயா இருந்தப்போ என்ன சாப்பிட்டேன்னு நினைவு இல்லை!
பெரிய தட்டையில் சிறிய அளவு உணவாக
உதாரணம்: பெரிய தட்டையில் ஒரு சிறிய இட்லி வச்சி கொடுங்க, குழந்தைகளுக்கு அப்படி பார்த்தால் பெரிதாக தெரியாது.
பூர்ணிமா சரண்,
பப்புவுக்கு இப்போ வயது 3. 6 மாசத்துல என்ன கொடுத்தோம் சாப்பிடன்னு நிஜமாவே மறந்து போச்சு!
செரிலாக் கொடுத்ததுதான் நல்லா நினைவில் இருக்கு.அப்புறம், உருளைக்கிழங்கு, முட்டை வெள்ளைக்கரு!
இதுதான் உடனே நினைவுக்கு வருது! அப்புறம், அமிர்தவர்ஷினி , சந்தனமுல்லைன்னு எங்க பேரை போட்டு போஸ்ட்
போட்டுருக்கீங்க..... ஏதோ நாங்கதான் அம்மாக்களின் ஏகபோக உரிமையை கொண்டாடுறோம்னு மத்த அம்மாக்கள் தப்பா நினைச்சுக்கப்
போறாங்க..அதனால, ஏதாவது உதவிகள் கேக்கணும்னா, http://ammakalinpathivukal.blogspot.com/ இங்க வாங்க....அதிலிருக்கும்
ஐடி-க்கு மடல் அனுப்புங்க..போஸ்டாக போடுகிறோம்! அப்புறம் ஒரு சின்ன ரிக்வெஸ்ட்..கொஞ்சம் தர்மசங்கடமா இருக்கு....
நிறைய பெரிய தலைகள் இருக்கும்போது எங்களை மாதிரி (நான் மற்றும் அமித்து அம்மா) வால்கள் ஆடக் கூடாது..அதனால்,
பொதுவாகவே கேளுங்க....எல்லோருமே சஜஷன் கொடுப்பாங்க..எங்க பேரை போட வேண்டாமே ..ப்ளீஸ்! ப்ர்திக்ஸிற்கு என் அன்பு!
பூரணி,
குழந்தையை பற்றி ஓரளவு தெரிந்தவர்கள் தான் சொல்லலாம்ப்பா..
குறிப்பாக எனக்கு நிறைய தெரியும், ஆனா நவீனுக்கு எல்லாம் ஒத்துக்கொள்ளும் அதுவே என் அண்ணன் குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாது அவனுக்கு தனியாக நானே டாக்டரிடம் கேட்டு சமைத்து தருவேன். ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும்.
அதனால் உங்கள் வீட்டிலேயே குழந்தையை பற்றி தெரிந்தவர்களை கேட்டு செய்யுங்களேன்ப்பா!!
சாப்பிட எது வேண்டுமானாலும் கொடுங்கள், ஆனால் கவிதை மட்டும் சொல்லிராதிங்க ப்ளீஸ்!
//வால்பையன் said...
சாப்பிட எது வேண்டுமானாலும் கொடுங்கள், ஆனால் கவிதை மட்டும் சொல்லிராதிங்க ப்ளீ//
கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்..
குழந்தைக்கு அமுதம் ஆகாது.. :)))
//சாப்பிட எது வேண்டுமானாலும் கொடுங்கள், ஆனால் கவிதை மட்டும் சொல்லிராதிங்க ப்ளீஸ்!
Repeat..!
ha..ha. :))
ஹை! எங்க சுட்டி விஷ்ணுவுக்கு இப்போ ஐந்து மாதம், போன வாரம்தான் Cerelac கொடுக்க ஆரம்பித்தோம்.
அடுத்த மாதத்திலிருந்து பிற உணவு வகைகளை கொடுப்பதாய் இருக்கிறோம். நீங்க வாங்கற டிப்ஸ் எல்லாத்தையும் அப்படியே பதிவுல போடுங்க... எங்களுக்கும் உபயோகமா இருக்கும்.
நன்றி.
முதல்ல என்னை கேக்காம விட்டதுக்கு என் கண்டணங்கள். அந்த பஞ்சாயத்து பின்ன வச்சுப்போம்.
காலை பையன் எழுந்த பின்னெ பல்லை விளக்கிவிட்டு(பல் இல்லாட்டி நோ பிராப்ளம்) சூடா 4 இட்லி, அதுக்கு தொட்டுக்க தக்காளி சட்னி, பொதினா சட்னி, சிதம்பரம் கொத்சு, இட்லி பொடி வித் இதயம் நல்லெண்ணெய், தவிர ஒரு சின்ன கப்பிலே நல்லா குழைந்த வெண்பொங்கல் அதிலே மிளகு முழுசா போடாம மிக்சிலே அறைச்சுடனும், அந்த 1 கப்பிலே மொத்தமே 2 முந்திரி மாத்திரமே இருக்கனும், அந்த நெய் பசு நெய்யா இருந்தா ஷேமம்.
பின்னே சின்னதாக ஒரு முட்டை தோசை. அதும் நாட்டு கோழிமுட்டையாக இருத்தல் நலம். சின்ன சைஸ்ல ஊத்தி முட்டை அதன் மேலே உடைச்சு ஊத்தி, ஆனா பாருங்க ரொம்ப கவனம் அதை திருப்பி போடும் போது கூட அந்த மஞ்ச கரு உடைய கூடாது. (அப்படி பொரட்டி எடுத்து கொடுத்தா ஆஸ்கார் அவார்டுக்கு பரிந்துரை செய்யப்படலாம் உங்க பெயர். "award goes to amutha''ன்னு எதுனா ஒரு மக்கிட்டு கட்டுன அம்மனி சொல்லும் நாங்களும் பதிவெல்லாம் போடுவோம்)
அப்படி ஒரு தோசை. பின்னே லைட்டா ஒரு வெங்காய தோசை அதுல பாருங்க 7 சின்ன வெங்காயம் எடுத்து பொடி பொடியா நறுக்கி , அதௌ தனியா லைட்டா வதக்கி வச்சிகிட்டு அப்பளம் இருக்கே அப்பளம் அந்த சைஸ்ல ஒரு மொத்தமான தோசை ஊத்தி அதன் மேல சின்ன வெங்காயத்த அப்படியே தூவி விட்டு ஒரு ஸ்பூன் எடுத்து அந்த இட்லிக்கு செஞ்ச பொதினா சட்னியை குரு மேட்டிலும், தேங்காய் கெட்டி சட்னியை சனி மூலையிலும் வைக்கனும்!
இதல்லாம் காலை டிபன்.
இதல்லாம் ஊட்டி விடும் போது ரெண்டு கண்டிஷன் இருக்கு,
ஒன்னு நீங்க பாடிகிட்டே ஊட்ட கூடாது, ரெண்டாவது நீங்க சத்தியமா பாடிகிட்டே ஊட்ட கூடாது!
இதல்லாம் காலை மெனு!
மதியம் மெனு பின்ன உங்க பதில் பார்த்துட்டு சொல்லலாமா வேண்டாமான்னு யோசிக்கிறேன்!
இப்படிக்கு
அபிஅப்பா
@அபிஅப்பா
//இதல்லாம் காலை மெனு!
//
மெனு குழந்தைக்கா இல்ல மொத்த குடும்பத்துக்கேவா?
@அபிஅப்பா,
பையன் அவங்க அம்மா மாதிரி கிடையாது. அதனால் இவ்ளோ ஹெவியா வேனாமே
பாவம்பா நீங்க இப்பிடியா இவங்ககிட்டே மாட்டிக்கணும்????பாப்பா பாவம் ....இங்கே ஒண்ணும் உருப்படியா கிடைக்கிற மாதிரித் தெரிலை...
அன்புடன் அருணா
Technology is being used in the right way. Is this is what they call "productive use"?
Actually, I do not know anything about the topic but one advice: don't go by the printed books
Thank You!
நானும் பார்த்து எழுதி வச்சுக்கிட்டேன்.அப்புறமா உதவும்.
உருளை கிழங்கு வேகவைத்து மசித்தது, காரட் வேக வைத்தி மசித்தது, கொஞ்சம் பருப்பு, இது எல்லாம் கொடுக்க ஆரம்பிங்க.
நாளைக்கு வீட்டுக்கார அம்மாவை கேட்டுவிட்டு சொல்லுகின்றேன்.
கஞ்சி மாவு ஒன்று வீட்டிலேயே தயார் செய்து கொடுப்பார்கள். அதையும் சொல்லுகின்றேன்.
செரிலாக் போன்ற உணவுகளை விட, இது மாதிரி இயற்கை உணவுகள் மிக நல்லது.
ஆறுமாதக் குழந்தைக்கு காலையில் ஐந்து அல்லது ஐந்தரை மணி அளவில் ஒரு டம்ளர் பால் (அது பசும் பாலாகவும் இருக்கலாம் அல்லது லாக்டோஜனாகவும் இருக்கலாம் as per ur doctors suggestion ,
பிறகு காலை 9 மணி அளவில் செர்லாக் தரலாம் (இது வீட்,ஆப்பிள்,ரைஸ்,vegetable என்று கடைகளில் கிடைக்கும்.)
மதியம் 1 மணிக்கு நன்றாக மசித்த அரிசிச் சாதத்துடன் மசித்த உருளை கிழங்கையோ அல்லது மசித்த கேரட்டையோ கலந்து கூழ் போல தரலாம்.
ஒரு நாள் கீரை தண்ணீர் ஒரு நாள் பருப்புத் தண்ணீர்...இப்படி மாற்றி...மாற்றி சாதத்துடன் கலந்து தரலாம் .இது குழந்தையின் ஜீரண சக்தியைப் பொறுத்து தொடரலாம்.
இதற்குப் பிறகு குழந்தையை சற்று நேரம் விளையாட விட்டு தூங்க வைத்தல் அவஷியம்.
மாலை மூன்று அல்லது 4 மணி அளவில் சத்து மாவுக் கஞ்சி போல தயார் செய்தது தரலாம் (மன்னா health mix என்று ரெடிமேட் ஆக கிடைக்கும் )
இரவு 7 மணிக்கு செர்லாக் ...இரண்டு மணி நேர இடைவெளியில் ஒரு டம்ளர் பால் .
பிறகு குழந்தையை தூங்க வைக்கலாம்.
இவை தவிர ஆப்பிள் ஆரம்பத்தில் ஒரே ஒரு கீற்று மட்டும் வேக வைத்து மசித்து ஊட்டி பழக்கப் படுத்தலாம் .அதே போல மலை வாழைப் பழம்...முட்டையின் வெள்ளைக் கரு மட்டும். இப்படி சில இவை போதும் ஆறு மாதக் குழந்தைக்கு.காலையில் செர்லாக் பதிலாக ஒரே ஒரு இட்லி மட்டும் சர்க்கரையிட்டு பிசைந்து தரலாம் .எல்லாமே குழந்தையின் விருப்பத்தைப் பொறுத்தே தொடர முடியும்.பழக்கப் படுத்துதல் என்ற ஒரு விஷயத்தை மட்டும் தொடர்ந்து செய்து வரலாம் .
நானும் மகளுக்கு 5 மாதங்கள் ஆனபோது 'குழந்தைகளுக்கான உணவு' பத்தி தெரிஞ்சுக்க ஒரு செய்முறை வகுப்பில கலந்துக்கிட்டேன். மேலை நாடுகள்ல, இவங்க முக்கியமா சொல்லறது - 'உப்பு, சர்க்கரை சேர்க்காதிங்க. உணவை அதன் உண்மை சுவையுடன் அறிமுகப் படுத்துங்க'. மகளுக்கு, இந்த முறையிலதான் திட உணவுகளை அறிமுகப் படுத்தினேன் (11 வருடங்களுக்கு முன்பு). இப்பவும் பால்ல சர்க்கரை இல்லாமத்தான் குடிப்பா. அதிகமான உப்போ, இனிப்போ விரும்ப மாட்டா. பின்னாளில் உப்பைக் குறை, சக்கரையைக் குறை - இந்த தொல்லை எல்லாம் கிடையாது. ( எங்க குடும்பத்துல நிறைய பேருக்கு சர்க்கரை நோய்). அந்த வகுப்பில செய்து காண்பிச்சது- வாழைப்பழம், பப்பாளிப் பழம் இதையெல்லாம் ஒரு ஸ்பூன் வைத்து மென்மையா துருவினாப்போல செய்து , அதை ஸ்பூன் வைத்தே மசித்தாங்க. அவங்க சொன்ன காரணம்,' இதனால் சுவை மாறாமல் இருக்கும்'.
கவிதா சொன்னதும் முக்கியமானது. சில குழந்தைகளுக்கு, ஒரு சில உணவு வகைகள் ஒத்துக்கொள்ளாது. சோ, ஒரு நேரத்தில் ஒரே ஒரு வகையை மட்டும் சாப்பிடக் கொடுங்க. சில நாட்கள் ஒரு வகையை முயற்சி செய்த பிறகு, அடுத்த வகையை அறிமுகம் செய்யுங்க.
உங்கள் குழந்தை ஆரோக்கியமாக சாப்பிட்டு, வளர வாழ்த்துக்கள்.
// நட்புடன் ஜமால் said...
நிறைய சொல்றோம்
அப்பாக்களும் சொல்லலாம்ல ...
//
தாராளமா:)
// நட்புடன் ஜமால் said...
குட்டீஸ்க்கு என் அன்பும் வாழ்த்துக்களும்.
//
thank u:)
// G3 said...
:) Indha pakkam vandhuttu ponadhukku attendence mattum pottukaren :D
//
மிக்க மகிழ்ச்சி:)
// அ.மு.செய்யது said...
யாராக இருந்தாலும்,எதைப்பற்றி எழுதினாலும்
பின்னூட்டம் போடாம நாங்க போகவே மாட்டோம்.
தோ வி ஆர் யூத்
//
நல்ல பழக்கம்...
// புதியவன் said...
பரிக்ஷித்திர்க்கு ஆறு மாதங்கள் ஆயிடுச்சா...குறைவின்றி வளர வாழ்த்துக்கள்...
//
நன்றி புதியவன்:)
// ஜீவன் said...
///இருந்தாலும் அனுபவசாலிகளிடம் கேட்டுக்கலாம்னு தான் ///
நான் சின்ன புள்ளயா இருந்தப்போ என்ன சாப்பிட்டேன்னு நினைவு இல்லை!
//
ஒரு இடத்தில உட்கார்ந்து யோசித்து சொல்லுங்க..
// நட்புடன் ஜமால் said...
பெரிய தட்டையில் சிறிய அளவு உணவாக
உதாரணம்: பெரிய தட்டையில் ஒரு சிறிய இட்லி வச்சி கொடுங்க, குழந்தைகளுக்கு அப்படி பார்த்தால் பெரிதாக தெரியாது.
//
ம்ம் அப்படி வச்சு யாருக்கு தர????
// சந்தனமுல்லை said...
பூர்ணிமா சரண்,
பப்புவுக்கு இப்போ வயது 3. 6 மாசத்துல என்ன கொடுத்தோம் சாப்பிடன்னு நிஜமாவே மறந்து போச்சு!
செரிலாக் கொடுத்ததுதான் நல்லா நினைவில் இருக்கு.அப்புறம், உருளைக்கிழங்கு, முட்டை வெள்ளைக்கரு!
இதுதான் உடனே நினைவுக்கு வருது! அப்புறம், அமிர்தவர்ஷினி , சந்தனமுல்லைன்னு எங்க பேரை போட்டு போஸ்ட்
போட்டுருக்கீங்க..... ஏதோ நாங்கதான் அம்மாக்களின் ஏகபோக உரிமையை கொண்டாடுறோம்னு மத்த அம்மாக்கள் தப்பா நினைச்சுக்கப்
போறாங்க..அதனால, ஏதாவது உதவிகள் கேக்கணும்னா, http://ammakalinpathivukal.blogspot.com/ இங்க வாங்க....அதிலிருக்கும்
ஐடி-க்கு மடல் அனுப்புங்க..போஸ்டாக போடுகிறோம்! அப்புறம் ஒரு சின்ன ரிக்வெஸ்ட்..கொஞ்சம் தர்மசங்கடமா இருக்கு....
நிறைய பெரிய தலைகள் இருக்கும்போது எங்களை மாதிரி (நான் மற்றும் அமித்து அம்மா) வால்கள் ஆடக் கூடாது..அதனால்,
பொதுவாகவே கேளுங்க....எல்லோருமே சஜஷன் கொடுப்பாங்க..எங்க பேரை போட வேண்டாமே ..ப்ளீஸ்! ப்ர்திக்ஸிற்கு என் அன்பு!
//
கருத்துக்கு நன்றிங்க சந்தனமுல்லை:)
ஆனியன் ரவாவும், ஆஃப் பாயிலும் கொடுக்கலாம்.
நான் கொயிந்தையா இருக்கச்ச எங்க அம்மா அத தான் கொடுத்தாங்க..
// கவிதா | Kavitha said...
பூரணி,
குழந்தையை பற்றி ஓரளவு தெரிந்தவர்கள் தான் சொல்லலாம்ப்பா..
குறிப்பாக எனக்கு நிறைய தெரியும், ஆனா நவீனுக்கு எல்லாம் ஒத்துக்கொள்ளும் அதுவே என் அண்ணன் குழந்தைக்கு ஒத்துக்கொள்ளாது அவனுக்கு தனியாக நானே டாக்டரிடம் கேட்டு சமைத்து தருவேன். ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும்.
அதனால் உங்கள் வீட்டிலேயே குழந்தையை பற்றி தெரிந்தவர்களை கேட்டு செய்யுங்களேன்ப்பா!!
//
அவருக்கென தனியாக பாத்திரத்தில் சாதம் வைத்து பருப்பு தண்ணியில் மசித்து தருகிறேன். செரிலாக் தரேன், கேரல் கட் செய்து வேக வைத்து மிக்ஸியில் போட்டு அடித்து பாலும், கொஞ்சம் வெந்நீரும் அரைத்ததையும் சேர்த்து போட்டு நன்கு கொதிக்க வைத்து புட்டியில் ஊற்றி தருகிறேன்.
// வால்பையன் said...
சாப்பிட எது வேண்டுமானாலும் கொடுங்கள், ஆனால் கவிதை மட்டும் சொல்லிராதிங்க ப்ளீஸ்!
//
:(
// கார்க்கி said...
//வால்பையன் said...
சாப்பிட எது வேண்டுமானாலும் கொடுங்கள், ஆனால் கவிதை மட்டும் சொல்லிராதிங்க ப்ளீ//
கன்னாபின்னாவென வழிமொழிகிறேன்..
குழந்தைக்கு அமுதம் ஆகாது.. :)))
//
:))
// Karthik said...
//சாப்பிட எது வேண்டுமானாலும் கொடுங்கள், ஆனால் கவிதை மட்டும் சொல்லிராதிங்க ப்ளீஸ்!
Repeat..!
ha..ha. :))
//
நல்லா சிரிச்சியா??
// கணினி தேசம் said...
ஹை! எங்க சுட்டி விஷ்ணுவுக்கு இப்போ ஐந்து மாதம், போன வாரம்தான் Cerelac கொடுக்க ஆரம்பித்தோம்.
அடுத்த மாதத்திலிருந்து பிற உணவு வகைகளை கொடுப்பதாய் இருக்கிறோம். நீங்க வாங்கற டிப்ஸ் எல்லாத்தையும் அப்படியே பதிவுல போடுங்க... எங்களுக்கும் உபயோகமா இருக்கும்.
நன்றி.
//
உங்க சுட்டிக்கு என் வாழ்த்துக்கள்:)
// அபிஅப்பா said...
முதல்ல என்னை கேக்காம விட்டதுக்கு என் கண்டணங்கள். அந்த பஞ்சாயத்து பின்ன வச்சுப்போம்.
காலை பையன் எழுந்த பின்னெ பல்லை விளக்கிவிட்டு(பல் இல்லாட்டி நோ பிராப்ளம்) சூடா 4 இட்லி, அதுக்கு தொட்டுக்க தக்காளி சட்னி, பொதினா சட்னி, சிதம்பரம் கொத்சு, இட்லி பொடி வித் இதயம் நல்லெண்ணெய், தவிர ஒரு சின்ன கப்பிலே நல்லா குழைந்த வெண்பொங்கல் அதிலே மிளகு முழுசா போடாம மிக்சிலே அறைச்சுடனும், அந்த 1 கப்பிலே மொத்தமே 2 முந்திரி மாத்திரமே இருக்கனும், அந்த நெய் பசு நெய்யா இருந்தா ஷேமம்.
பின்னே சின்னதாக ஒரு முட்டை தோசை. அதும் நாட்டு கோழிமுட்டையாக இருத்தல் நலம். சின்ன சைஸ்ல ஊத்தி முட்டை அதன் மேலே உடைச்சு ஊத்தி, ஆனா பாருங்க ரொம்ப கவனம் அதை திருப்பி போடும் போது கூட அந்த மஞ்ச கரு உடைய கூடாது. (அப்படி பொரட்டி எடுத்து கொடுத்தா ஆஸ்கார் அவார்டுக்கு பரிந்துரை செய்யப்படலாம் உங்க பெயர். "award goes to amutha''ன்னு எதுனா ஒரு மக்கிட்டு கட்டுன அம்மனி சொல்லும் நாங்களும் பதிவெல்லாம் போடுவோம்)
அப்படி ஒரு தோசை. பின்னே லைட்டா ஒரு வெங்காய தோசை அதுல பாருங்க 7 சின்ன வெங்காயம் எடுத்து பொடி பொடியா நறுக்கி , அதௌ தனியா லைட்டா வதக்கி வச்சிகிட்டு அப்பளம் இருக்கே அப்பளம் அந்த சைஸ்ல ஒரு மொத்தமான தோசை ஊத்தி அதன் மேல சின்ன வெங்காயத்த அப்படியே தூவி விட்டு ஒரு ஸ்பூன் எடுத்து அந்த இட்லிக்கு செஞ்ச பொதினா சட்னியை குரு மேட்டிலும், தேங்காய் கெட்டி சட்னியை சனி மூலையிலும் வைக்கனும்!
இதல்லாம் காலை டிபன்.
இதல்லாம் ஊட்டி விடும் போது ரெண்டு கண்டிஷன் இருக்கு,
ஒன்னு நீங்க பாடிகிட்டே ஊட்ட கூடாது, ரெண்டாவது நீங்க சத்தியமா பாடிகிட்டே ஊட்ட கூடாது!
இதல்லாம் காலை மெனு!
மதியம் மெனு பின்ன உங்க பதில் பார்த்துட்டு சொல்லலாமா வேண்டாமான்னு யோசிக்கிறேன்!
இப்படிக்கு
அபிஅப்பா
//
ஆமா இதெல்லாம் யாருக்கு????????
// கணினி தேசம் said...
@அபிஅப்பா
//இதல்லாம் காலை மெனு!
//
மெனு குழந்தைக்கா இல்ல மொத்த குடும்பத்துக்கேவா?
//
எனக்கு சப்போட்டுக்கு ஆள் கிடச்சிருச்சு...
// கார்க்கி said...
@அபிஅப்பா,
பையன் அவங்க அம்மா மாதிரி கிடையாது. அதனால் இவ்ளோ ஹெவியா வேனாமே
//
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
// Muthusamy said...
Technology is being used in the right way. Is this is what they call "productive use"?
Actually, I do not know anything about the topic but one advice: don't go by the printed books
Thank You!
//
thank you for your useful advice..
// ஹேமா said...
நானும் பார்த்து எழுதி வச்சுக்கிட்டேன்.அப்புறமா உதவும்.
//
அமாம் ஹேமா பின்னாடி உதவும்..
நான் சீரியஸா கேட்டதிர்க்கு எப்படி என்னைப் போட்டு தாளித்து இருக்காங்கன்னு:(
// அன்புடன் அருணா said...
பாவம்பா நீங்க இப்பிடியா இவங்ககிட்டே மாட்டிக்கணும்????பாப்பா பாவம் ....இங்கே ஒண்ணும் உருப்படியா கிடைக்கிற மாதிரித் தெரிலை...
//
பருங்க நல்லா மாட்டிகிட்டேன்:(
// இராகவன் நைஜிரியா said...
உருளை கிழங்கு வேகவைத்து மசித்தது, காரட் வேக வைத்தி மசித்தது, கொஞ்சம் பருப்பு, இது எல்லாம் கொடுக்க ஆரம்பிங்க.
நாளைக்கு வீட்டுக்கார அம்மாவை கேட்டுவிட்டு சொல்லுகின்றேன்.
கஞ்சி மாவு ஒன்று வீட்டிலேயே தயார் செய்து கொடுப்பார்கள். அதையும் சொல்லுகின்றேன்.
செரிலாக் போன்ற உணவுகளை விட, இது மாதிரி இயற்கை உணவுகள் மிக நல்லது.
//
தாங்ஸ் அண்ணா.. அப்படியே அண்ணீ கிட்டயும் கேட்டு சொல்லுங்க:)
// மிஸஸ்.டவுட் said...
ஆறுமாதக் குழந்தைக்கு காலையில் ஐந்து அல்லது ஐந்தரை மணி அளவில் ஒரு டம்ளர் பால் (அது பசும் பாலாகவும் இருக்கலாம் அல்லது லாக்டோஜனாகவும் இருக்கலாம் as per ur doctors suggestion ,
பிறகு காலை 9 மணி அளவில் செர்லாக் தரலாம் (இது வீட்,ஆப்பிள்,ரைஸ்,vegetable என்று கடைகளில் கிடைக்கும்.)
மதியம் 1 மணிக்கு நன்றாக மசித்த அரிசிச் சாதத்துடன் மசித்த உருளை கிழங்கையோ அல்லது மசித்த கேரட்டையோ கலந்து கூழ் போல தரலாம்.
ஒரு நாள் கீரை தண்ணீர் ஒரு நாள் பருப்புத் தண்ணீர்...இப்படி மாற்றி...மாற்றி சாதத்துடன் கலந்து தரலாம் .இது குழந்தையின் ஜீரண சக்தியைப் பொறுத்து தொடரலாம்.
இதற்குப் பிறகு குழந்தையை சற்று நேரம் விளையாட விட்டு தூங்க வைத்தல் அவஷியம்.
மாலை மூன்று அல்லது 4 மணி அளவில் சத்து மாவுக் கஞ்சி போல தயார் செய்தது தரலாம் (மன்னா health mix என்று ரெடிமேட் ஆக கிடைக்கும் )
இரவு 7 மணிக்கு செர்லாக் ...இரண்டு மணி நேர இடைவெளியில் ஒரு டம்ளர் பால் .
பிறகு குழந்தையை தூங்க வைக்கலாம்.
இவை தவிர ஆப்பிள் ஆரம்பத்தில் ஒரே ஒரு கீற்று மட்டும் வேக வைத்து மசித்து ஊட்டி பழக்கப் படுத்தலாம் .அதே போல மலை வாழைப் பழம்...முட்டையின் வெள்ளைக் கரு மட்டும். இப்படி சில இவை போதும் ஆறு மாதக் குழந்தைக்கு.காலையில் செர்லாக் பதிலாக ஒரே ஒரு இட்லி மட்டும் சர்க்கரையிட்டு பிசைந்து தரலாம் .எல்லாமே குழந்தையின் விருப்பத்தைப் பொறுத்தே தொடர முடியும்.பழக்கப் படுத்துதல் என்ற ஒரு விஷயத்தை மட்டும் தொடர்ந்து செய்து வரலாம் .
//
ரொம்ப நன்றிங்க மிஸஸ்.டவுட்:)
// Anonymous said...
நானும் மகளுக்கு 5 மாதங்கள் ஆனபோது 'குழந்தைகளுக்கான உணவு' பத்தி தெரிஞ்சுக்க ஒரு செய்முறை வகுப்பில கலந்துக்கிட்டேன். மேலை நாடுகள்ல, இவங்க முக்கியமா சொல்லறது - 'உப்பு, சர்க்கரை சேர்க்காதிங்க. உணவை அதன் உண்மை சுவையுடன் அறிமுகப் படுத்துங்க'. மகளுக்கு, இந்த முறையிலதான் திட உணவுகளை அறிமுகப் படுத்தினேன் (11 வருடங்களுக்கு முன்பு). இப்பவும் பால்ல சர்க்கரை இல்லாமத்தான் குடிப்பா. அதிகமான உப்போ, இனிப்போ விரும்ப மாட்டா. பின்னாளில் உப்பைக் குறை, சக்கரையைக் குறை - இந்த தொல்லை எல்லாம் கிடையாது. ( எங்க குடும்பத்துல நிறைய பேருக்கு சர்க்கரை நோய்). அந்த வகுப்பில செய்து காண்பிச்சது- வாழைப்பழம், பப்பாளிப் பழம் இதையெல்லாம் ஒரு ஸ்பூன் வைத்து மென்மையா துருவினாப்போல செய்து , அதை ஸ்பூன் வைத்தே மசித்தாங்க. அவங்க சொன்ன காரணம்,' இதனால் சுவை மாறாமல் இருக்கும்'.
கவிதா சொன்னதும் முக்கியமானது. சில குழந்தைகளுக்கு, ஒரு சில உணவு வகைகள் ஒத்துக்கொள்ளாது. சோ, ஒரு நேரத்தில் ஒரே ஒரு வகையை மட்டும் சாப்பிடக் கொடுங்க. சில நாட்கள் ஒரு வகையை முயற்சி செய்த பிறகு, அடுத்த வகையை அறிமுகம் செய்யுங்க.
உங்கள் குழந்தை ஆரோக்கியமாக சாப்பிட்டு, வளர வாழ்த்துக்கள்.
//
thank u Anony:)
// அ.மு.செய்யது said...
ஆனியன் ரவாவும், ஆஃப் பாயிலும் கொடுக்கலாம்.
நான் கொயிந்தையா இருக்கச்ச எங்க அம்மா அத தான் கொடுத்தாங்க..
//
வேற ஏதும் கொடுக்கலையா????
பூர்ணிமா, குழந்தைக்கு என்ன பிடிக்குதோ எல்லாம் கொடுங்க, குட்டிப் பையன் அவன் விருப்பத்திற்கு என்ன வேண்டுமோ சாப்பிடட்டும்.
பரிக்ஷித்திர்க்கு எனது வாழ்த்துக்கள்!!!
Post a Comment