ஒரு பத்து பதினைந்து நாட்களுக்குள் 3முறை பார்த்திட்டேன் இப்படத்தை. இரண்டாவது முறை பார்க்கும் பொழுது இதைப் பற்றி நாம பதிவுல பேசினா என்னனு யோசிச்சேன் அப்புறம் அப்படியே விட்டுட்டேன் (பிஸி) . 3வது முறை டிவில போடவும், (ஆஹா இது நம்மலுக்காகவே போட்டிருக்காங்கய்யா) சரி போட்டுடலாம்னு தீர்மானுச்சிட்டேன் ( யாம் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெருக-- அம்புட்டு நல்லவுக நாங்க). இதிலிருந்து நீங்க ஒரு நல்ல விசியத்த புருஞ்சுக்கனும் ( நீ முதல்ல சொல்லு அது நல்லதா, கெட்டதானு நாங்க பார்த்துகரோம்னு சொல்லறது காதுல விழுது). அதாவது நாம எதையுமே யோசிச்சுட்டே இருக்காம கன்னா பின்னானு செயல்ல இறங்கிடனும்(கருத்துங்கோ!! ).
சரி நாம படத்தைப் பற்றி பேசலாமா? ( வந்த வேலைல கர்க்கிட்டா இருப்போம்ல). படத்தோட டைரடக்டர் சாரிங்க டங்க்கு சிலிப் ஆயிருச்சு டைரக்டர் யாருன்னு ஊருக்கே, இல்லை இல்லை உலகத்துக்கே தெரியும். ஆனாலும் சொல்லிடலாம் அது நம்ம மணி ரத்னம் தான்னு ( செய்யற வேலைய ஒழுங்கா செய்யனுமுன்னு எங்க... எங்க.. யாரும் சொல்லலை நான் தான் சொல்றேன்).
நடித்திருப்பதில் முக்கியமானவர்கள் கார்த்திக்- மனோ ( நம்ம கமலுக்கு அடுத்த காதல் மன்னருங்கோகோகோ---- (எக்கோ) ), ரேவதி-திவ்யா , மோகன்-சந்திர குமார் ( மைக் மன்னர்)
எதார்த்தமான மிடில் க்ளாஸ் குடும்பத்துக்குள் நடக்கும் கலாட்டாவோட ஆரம்பிச்சு, பொண்ணுக்கு பிடிக்காத, வீட்டிற்க்குப் பிடித்த திருமணம். இந்த இடத்தில் ஒரு முக்கியமான விசியத்த நான் சொல்லியே ஆகணும். ரேவேதி, மோகன் திருமணம் முடிந்த இரவு ரேவதி அவங்க அம்மாவிடம் கேட்கும் கேள்விகள் அப்பாவிதனமாகவும், ஏற்றுக் கொள்ளவேண்டிய உண்மையாகவும் இருக்கும் ( இதைப் பற்றி தனியா ஒரு பதிவு போட்டு பேசலாம்).
மோகன் ஒரு நல்ல கணவரா (அநியாயத்துக்கு) வந்திருக்கார். உரையாடல்கள் அளவாகவே ("ஆற்றில் போட்டாலும் அளந்து போடு") அளவாகவே இருக்கு. எங்கேயும் தேவை இல்லாத வசனம்னு ஏதும் இருக்கிற மாதிரி எனக்கு தெரியலை. ரேவதி, " நீங்க தொட்டா கம்பளி பூச்சி ஊரர மாதிரி இருக்குனு சொல்லும் காட்சி அருமையா இருக்கும். பின்னாடி அவங்களுக்கே மோகன் ரிப்பீட்டு அடிப்பது அட்ரா சக்கைனு சொல்ல வைக்குது. ரேவதி, திவ்யாவா நல்லா நடிச்சு இருக்காங்கனு சொல்வதை விட வாழ்ந்திருக்காங்கனு சொல்வதே பொருந்தும்.
கார்த்திக், ரேவதி காட்சிகள் வெறும் 20 அல்லது 25 நிமிடங்கள் மட்டுமே என்றாலும் மனசுக்குள்ள பச்சக்குன்னு ஒட்டிகிச்சு ( கோந்தான்னு கேட்காதீங்க!!) கார்த்திக்கின் சண்டையும் சரி, காதலும் சரி அவ்ளோ அழகா வந்திருக்கு. குறிப்பா சொல்லனும்னா அந்த ரெஸ்டாரன்ட் காட்சி. டைரக்டர் அப்பவே வீட்டுக்குத் தெரியாம பதிவுத் திருமணத்தை ( திருட்டு கல்யாணம்ங்கோ!!) நடத்த முடியாம போனதால பின்னாடி அதை வைத்தே ஒரு படம் எடுத்திட்டார்.
கிளைமாக்ஸ்ல இருவரும் மௌனமாக மனதிற்குள் பேசுவது ரொம்ப நல்லா இருக்கு.
பாடல்கள் எல்லாமே கலக்கல். இளையராஜானா சும்மாவா? பனி விழும் இரவு, மன்றம் வந்த பாடல்களின் மெட்டும், வரிகளும் பிரமாதம். கார்த்திக் வரும் காட்சிகளுக்கு அமைத்திருக்கும் இசை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
எத்தனையோ முறை இப்படத்தை பார்த்தாயிற்று ஆனாலும் பார்க்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு காட்சிகளும் புதுசாவே தெரியுது.
பி.கு1. ஏதாவது தவறு இருக்குன்னு நினைத்தால் சொல்லுங்க அடுத்த முறை சரி பண்ணிடலாம்.
பி.கு2. உங்கள் ஓட்டை உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு மட்டும் போட்டுவிட்டு போகாம தமிலிஷ்லையும், தமிழ் மணத்திலையும் சேர்த்து குத்தவும்.
திருமலை நாயக்கர் மஹால் - மதுரை
-
#1
*திருமலை நாயக்கர் மஹால் என அழைக்கப்படும் திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரையை
ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் 1636 ஆம்
ஆண்ட...
1 week ago
612 கருத்துக்கள்:
«Oldest ‹Older 601 – 612 of 612 Newer› Newest»மௌனராகம் எனக்கும் பிடித்த படம்...
// தமிழ் பிரியன் said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஓ.. இது கும்மிப் பதிவா?
//
அப்படி எல்லாம் இல்லிங்கோ !
// தமிழ் பிரியன் said...
மீ த 602 போட்டு எஸ்ஸாகிக்கிறேன்... இதெல்லாம் நமக்கு தாங்காதுப்பா.. ;)
//
அவ்வ்வ்வ்........
// கார்க்கி said...
யப்பா.. ரொம்ப ஃப்ரீயா இருந்தா வேற கடைப்பக்கமும் வாங்க.. இதென்னா கலாட்டா?
//
:(
// Karthik said...
Oops, Wats going on??
Are you guys planning 1000?
Congrats.
:)
//
ஒன்னும் புரியலைங்க என்னமோ நடக்குது !
// உருப்புடாதது_அணிமா said...
என்னவோ நடக்கிறது ............
மர்மமாய் இருக்கிறது
//
என்ன அது!
:)
நான் எதோ புது கதைன்னு நினைச்சேன்
பழைய தோசைய திருப்பி போட்டா கல் தோசை
623
624
625
Post a Comment