ஒரு தினம் மதிய வேலை, முன் அறையில் அமர்ந்திருந்தேன் என் வீட்டினருடன். வெளியில் ஒட்டடை ஒட்டடை என்ற சப்தம் கேட்டுப் பார்தேன். ஒட்டடை குட்சிகள் விற்றுக்கொண்டு ஒரு அம்மா வந்து கொண்டிருந்தாள். உடன் கழுத்துடன் சேர்த்துக் கட்டிய ஒரு துணியில் அவள் குழந்தை. சின்னஞ் சிறு குழந்தை அழுது கொண்டே இருந்தது. பார்த்ததும் மனத்திற்குள் ஏதோ ஒரு புரியாத அழுத்தம். என்னைப் பார்த்ததும் , என் வீட்டின் முன் நின்று கொண்டாள். நான் வீட்டினுள் நுழைந்து 'அம்மா ஒட்டடை குட்சி வேணுமா?' என்றேன். எதற்கு? எல்லாம் இருக்கு வேண்டாம் என்றார். நானும் வெளியில் சென்று இருக்கு வேண்டாம் என்று சொன்னாலும் மனது கேட்கவில்லை. அம்மா பாவம்மா குழந்தை வேற இருக்கு வாங்கிக்கலாம்னு சொன்னேன்.
அம்மாவும் வந்து எவ்வளவுனு கேட்டாங்க. 35ரூபாய் வாங்கிக்கோங்க என்றாள். என் அம்மா 15ரூபாய்னா கொடு இல்லனா வேண்டாம்னு சொல்லிவிட்டு மாடி போர்ஸன்ல இருக்கிறவங்களை அழைத்தாங்க. அவர்கள் எல்லோரும் ஒட்டடை குட்சி வாங்குவதிலேயே குறியாக இருந்தார்கள். ஆனால் என் மனசு முழுவதும் அந்த அழுகிற குழந்தை தான் இருந்துச்சு. கைதட்டி அதனோட அழுகையை நிறுத்த முயற்சித்து வெற்றியும் அடைந்தேன். என்னைப் பார்த்து சிரித்தது. நானும் சிரித்தேன். அக்குழந்தைக்கு எதாவது தரணும்னு நினைத்தேன், ஆனா என்ன தருவதுணு தெரியலை. ஆறு மதக் குழந்தையாம். அழகாக அழுக்காக இருந்தது. வீட்டிற்க்குள் வந்து ஒவ்வொரு அறையாகத் தேடினேன் என்னவென்று தெரியாமல் ஏதேனும் தர எண்ணி. இரண்டு கிலுகிலுப்பை இருந்தது. அதில் ஒன்றை எடுத்துச் சென்றேன்.
எதற்கு இது? இதெல்லாம் அவங்ககிட்டயே இருக்கும், நம்ம வீட்டு குழந்தைக்கு வேணும்னு சொல்லிட்டாங்க அம்மா. கொடுத்திடலாம்மா நம்மகிட்டதான் இரண்டு இருக்கு இல்லனு சொன்னேன். போ உனக்கு ஒன்றும் தெரியாதுனு சொல்லிவிட்டு போயிட்டாங்க. கடைசியாக எல்லோரும் சேர்ந்து மொத்தமாக மூன்று ஒட்டடை குட்சி வாங்கி விட்டு 45 ரூபாய் கொடுத்தாங்க. 5ருபாய் மட்டும் சேர்த்துக் கொடுங்கனு கேட்டாள். யாரும் தரலை. 5ரூபாய் தான, குழந்தைக்கு ஏதாவது வாங்கித் தரட்டும் கொடுத்திடலாம்னு சொன்னேன். என் பேச்சு அவர்கள் காதில் விழுந்ததாகத் தெரியவில்லை. எத்தனையோ செலவு பண்ணறோம் கொடுத்திடலாம்னு சொன்னேன். உனக்கு ஒன்றும் தெரியாது போனு சொல்லிட்டாங்க. அப்போ எனக்கு என்னதான் தெரியும்னு நினைக்கறீங்க என்று கேட்கிறேன் பதில் கூற எவரும் இல்லை அங்கே.
திருமலை நாயக்கர் மஹால் - மதுரை
-
#1
*திருமலை நாயக்கர் மஹால் என அழைக்கப்படும் திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரையை
ஆட்சி புரிந்த நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் 1636 ஆம்
ஆண்ட...
1 week ago
15 கருத்துக்கள்:
மனதை தொட்ட நிகழ்வு. நானும் இதுபோல சிலநேரம் கையாலாகாமல் உணர்ந்திருக்கிறேன்
ஆமாங்க.. ஏன் இவங்க எல்லோரும் நம்மள போல யோசிக்க மாட்டேன்கறாங்க?
மனதை தொட்டுவிட்டது உங்கள் வரிகள் ..
//ஆமாங்க.. ஏன் இவங்க எல்லோரும் நம்மள போல யோசிக்க மாட்டேன்கறாங்க?//
இது அவர்களை சொல்லி தவறு இல்லை அவர்கள் வளர்ந்த சூழல் அப்படி .
உங்களை அவர்கள் வளர்த்த சூழல் உங்களை இப்படி சிந்திக்க வைக்கிறது . அதற்காக உங்களை விட உங்கள் பெற்றோரை தான் பாராட்ட வேண்டும் . :) :)
வாழ்த்துக்கள் .
// உங்களை அவர்கள் வளர்த்த சூழல் உங்களை இப்படி சிந்திக்க வைக்கிறது உங்களை விட உங்கள் பெற்றோரை தான் பாராட்ட வேண்டும் .//
உண்மைதாங்க..
வாழ்த்துக்கு நன்றி
இது போல அவ்வப்பொழுது அல்ல.. அடிக்கடி எனக்கு நிகழும்...ஆனால் இப்போது தனியாக இருப்பதால் பிரச்சனையில்லை. பெரிய பெரிய கடையில எம்.ஆர். பி ரேட்டுக்கு பேரம் பேச மாட்டோம். ஆனா சிறு வியாபாரிகள்கிட்ட 5க்கும், 10க்கும் சண்டை போடுவோம்.
என்ன உலகமோ....?!
// தமிழ்ப்பறவை said...
பெரிய பெரிய கடையில எம்.ஆர். பி ரேட்டுக்கு பேரம் பேச மாட்டோம். ஆனா சிறு வியாபாரிகள்கிட்ட 5க்கும், 10க்கும் சண்டை போடுவோம்.
என்ன உலகமோ....?!//
சரியா சொன்னீங்க
கண்கள் பனிக்கின்ற பதிவு.
சூர்யா
// வண்ணத்துபூச்சியார் said...
கண்கள் பனிக்கின்ற பதிவு.
சூர்யா//
Thank you
நன்றி பூர்ணிமா.
// வண்ணத்துபூச்சியார் said...
நன்றி பூர்ணிமா.//
நன்றிக்கு நன்றியோ:)
Don't worry i will pay him
Oh! Thank You Amarnath..
So.. Touching!
//தமிழ்ப்பறவை said...
இது போல அவ்வப்பொழுது அல்ல.. அடிக்கடி எனக்கு நிகழும்...ஆனால் இப்போது தனியாக இருப்பதால் பிரச்சனையில்லை. பெரிய பெரிய கடையில எம்.ஆர். பி ரேட்டுக்கு பேரம் பேச மாட்டோம். ஆனா சிறு வியாபாரிகள்கிட்ட 5க்கும், 10க்கும் சண்டை போடுவோம்.
என்ன உலகமோ....?!
//
Repeatae..!!
இதை ஒரு வேளை குறும் படமா எடுத்தா ராயல்டி கேப்பீங்களா??
சிறப்பான பதிவு... மனதை கனகச் செய்கிறது...
Post a Comment