உன் இடம் அறிந்தவுடன்,
உன் நிழலை மட்டும்
பார்த்து வந்த என் கண்கள் துடித்தது
என் நினைவான உன்னைக் காண..
ஆனாலும்,
என்னால் எட்டி நின்று பார்க்க மட்டுமே முடிந்தது
பெண்ணே உன்னை!
என்றாவாதேனும் காண்பேன் உன்னை,
அன்று வாழ்க்கையை தொடங்குவேன்
உன்னோடு!
என்றிருந்த நான்
வாழ்க்கையே முடிந்து விட்டதாய்
உணர்ந்தேன் இன்று..
போகட்டும் வேதனைகள் என்னோடு மட்டுமே!
உன் கண்ணில் பட்டு
உன் கண்ணீராக வழிய விரும்பவில்லை
நான்..
போகட்டும் வேதனைகள் என்னோடு மட்டுமே!
அடி பெண்ணே!
என்ன இது!
தியாகம் செய்வதாக நினைப்போ!
தமக்கையின் பிள்ளைக்காக உன் வாழ்க்கையை
வாழ்வு முடிந்து போன அவள்
கணவனோடு இணைத்துவிட்டாயே!
எப்படியடி முடிந்தது உன்னால்
என் நினைவினை அழித்துக்கொண்டு வாழ?
என்னால் எப்படியடி முடியும் நீ இல்லாத வாழ்க்கையை வாழ?
கடந்து சென்ற நாட்களில்,
எப்படியேனும் காண்பேன் உன்னை,
வாழ்வோம் சேர்ந்தென்ற நினைப்பினில் தானே வாழ்ந்தேன்..
என் உயிரே!
என் கண்ணே!
நான் என் வாழ்க்கையை எண்ணி வருந்தவில்லை..
வரப்போகும் நாட்களை நினைத்து அழுகிறேன்..
அன்றைய உன் முதல் சந்திப்பு,
இன்றும் என் நெஞ்சில்
இன்பச் சுமைகளாய்..
சேர்ந்தே பல வருடங்கள் படித்தோம்
அதில்,
மொத்தமாக ஒற்றை வார்த்தையை
என் பெயர் சொல்லி அழைத்தத்தில்
உலகமே என்னுள் அடங்கிவிட்டதாய் எண்ணி
பார்த்த பின்பு தான் தெரிந்து கொண்டேன்
என் பெயர் கொண்ட
உன் அண்டை வீட்டுச் சிறுவனை அழைத்தாய் என்று.
ஏமாற்றம் என்றாலும்
இன்பமாகத்தான் இருந்தது!
வெறும் கண்களால் மட்டுமே
பேசித் தொடர்ந்த நம் காதல்
உனக்குள்ளும் நான் இருந்தேன் என்பது
எனக்கும் தெரிந்ததே!
வாய் திறந்து என் காதலை
உன்னிடம்
சொல்லவில்லை என்றாலும்,
உன் பார்வையிலேயே நீ என்னை
ஏற்றுக் கொண்டாய் என்பதை நானும் அறிந்தே இருந்தேன்.
காணும் ஒவ்வொரு நாட்களும்
உன்னிடம்
பேசவேண்டுமென நினைத்துக் கொண்டுதான் வருவேன்
ஆனால்
நீ பார்க்கும் அந்த பார்வையில்
நான்
கரைந்து நின்று ஊமையாகிவிடுவேன்..
உன் ரெட்டை ஜடை,
ஒற்றைச் சிரிப்பு,
ஒரப் பார்வை,
மௌன மொழி
இதற்காக மட்டுமே
உன்னோடு பள்ளியில் படித்தேன் எனலாம்..
மூன்று வருடங்கள்
பார்த்துப் பார்த்து
நெஞ்சில் புதைந்து போன உன் முகம்,
பார்த்துப் பார்த்தே
வளர்ந்த நம் காதல்
வெறும் பார்வையிலேயே
போய் விட்டது நாட்கள்.
பள்ளிக் கடைசி தினத்திலாவது,
உன்னோடு
பேசிவிடவேண்டும் என்று எண்ணி வந்த
நான் பார்த்த காட்சி என் இருக்கையில் அமர்ந்து,
தலை சாய்த்து
தொடர்ந்த உன்
இரண்டு மணி நேர அழுகை.
அப்பொழுதும் வாய் திறக்காமல்
பார்த்துக் கொண்டுதான் நின்றிருந்தேன்..
முதல் முறையாக
உன்னைப் பார்க்க முடியாமல்
தலை கவிழ்ந்து நின்றதும் அன்றுதான்.. அருகில் வந்து
உன்னிடம்,
உன் பெயரை
முதல் முறையாக அழைத்தேன்..
அப்பொழுது,
நீ
பேச முடியாமல் தவித்த தவிப்பு.. எத்தனை நேரம் அசையாமல் அப்படியே
நின்றிருந்தேன் தெரியவில்லை.. நினைவு வந்து
பார்த்த போதுதான் தெரிந்தது
நீ அழுத அழுகைக்கு
சாட்சியாக
உன் கணக்கு புத்தகத்தை விட்டுச் சென்றிருந்தாய்!
அதிகமாக அழ முடிந்த உன்னால்
அளவாகத்தான் எழுத முடிந்திருந்தது
அதில்- "உனக்காக காத்திருப்பேன்"!
சேர்வோம் என்ற நம்பிக்கையில்
பிரிந்தோம் அன்று.
ஆனால் இன்று??
அன்று பேசாத நான் இன்றும் பேசாமல் இப்பொழுதும் அதே உன் நினைவோடு செல்கிறேன்..
உன்னை என்னுள் வைத்து என்னை இன்னொருத்திக்குத் தர முடியாது என்னால்....
உன் நினைவுகளுடன் நான்!..
7 கருத்துக்கள்:
Hi
can i get the copy writes to publish it
sure..
//என் பெயர் கொண்ட
உன் அண்டை வீட்டுச் சிறுவனை அழைத்தாய் என்று.
ஏமாற்றம் என்றாலும்
இன்பமாகத்தான் இருந்தது!//
//நீ அழுத அழுகைக்கு
சாட்சியாக
உன் கணக்கு புத்தகத்தை விட்டுச் சென்றிருந்தாய்!அதிகமாக அழ முடிந்த உன்னால்
அளவாகத்தான் எழுத முடிந்திருந்தது
அதில்- "உனக்காக காத்திருப்பேன்"!சேர்வோம் என்ற நம்பிக்கையில்//
அழகிய மலர்களால் சரம் தொடுத்தது போல் இருக்கிறது நீங்கள் வார்தைகள் கொண்டு கவிதை வடித்திருப்பது. இது போல் நிறைய கவிதைகளை எதிர் பார்க்கிறேன் உங்களிடமிருந்து... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
//புதியவன் said...
//என் பெயர் கொண்ட
உன் அண்டை வீட்டுச் சிறுவனை அழைத்தாய் என்று.
ஏமாற்றம் என்றாலும்
இன்பமாகத்தான் இருந்தது!//
//நீ அழுத அழுகைக்கு
சாட்சியாக
உன் கணக்கு புத்தகத்தை விட்டுச் சென்றிருந்தாய்!அதிகமாக அழ முடிந்த உன்னால்
அளவாகத்தான் எழுத முடிந்திருந்தது
அதில்- "உனக்காக காத்திருப்பேன்"!சேர்வோம் என்ற நம்பிக்கையில்//
அழகிய மலர்களால் சரம் தொடுத்தது போல் இருக்கிறது நீங்கள் வார்தைகள் கொண்டு கவிதை வடித்திருப்பது. இது போல் நிறைய கவிதைகளை எதிர் பார்க்கிறேன் உங்களிடமிருந்து... தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் //
Thanks a lot for your comment Mr.Puthiyavan..
//அதிகமாக அழ முடிந்த உன்னால்
அளவாகத்தான் எழுத முடிந்திருந்தது
அதில்- "உனக்காக காத்திருப்பேன்"!//
அழகிய வரிகள்...
மொத்தக் கவிதையின் வரிகளைச் சுருக்கி இருக்கலாம்...
// தமிழ்ப்பறவை said...
//அதிகமாக அழ முடிந்த உன்னால்
அளவாகத்தான் எழுத முடிந்திருந்தது
அதில்- "உனக்காக காத்திருப்பேன்"!//
அழகிய வரிகள்...//
ரொம்ப நன்றி
//மொத்தக் கவிதையின் வரிகளைச் சுருக்கி இருக்கலாம்...//
அடுத்த முறை சரி பண்ணிடலாம்..
ரொம்ப நல்லாருக்கு கவிதை! நான் கவுஜ எழுத ட்ரை பண்றேன்
Post a Comment