கொஞ்ச நாட்களா ஒரு சூப்பரான டெம்ப்ளேட் செட் பண்ணனும்னு ஒரு எண்ணம் என் மனசுல ஓடிகிட்டே இருந்துச்சு....
ஆனால் பாருங்க என்கிட்ட ஒரு ரொம்ப நல்ல்ல்ல பழக்கம் ஒன்னு இருக்கு:)))) நான் என்ன செய்யனும்னு நினைச்சாலும் பக்கத்தில யாராவது இருக்கனும்.... எதுக்குனு கேட்கறீங்களா????? ஹி ஹி வேற எதுக்குங்க இது ஓக்கேவா.. இது நல்லா இல்லைலனு போட்டு பெணாத்தி எடுக்கத்தான்... ஆனால் அவங்க ஓக்கேன்னு சொன்னா நல்லாயில்லன்னு சொல்லுவேன். நல்லாயில்லன்னு சொன்னா சூப்பர்னு சொல்லுவேன். இருந்தாலும் யாராவது இருக்கனும் நமக்கு.
நமக்குன்னு இருக்கவே இருக்காங்க ஒருத்தங்க... அவங்க மாட்டனும் இல்ல அப்போ தான இந்த மாதிரி ஏதாவது ஒரு வேலை செய்யமுடியும்.... எப்போ நம்ம கைல மாட்டுவாங்கனு காத்துகிட்டு இருந்தேன்....
அந்த பொன்னான நாள் இன்னிக்கிதான்றத நான் சொல்ல வேண்டியதில்லை என் டெம்ப்ளேட் மாறியிருப்பதை வச்சே கண்டுபிடிச்சு இருப்பீங்க:))
சரிங்க என் புராணத்த படிச்சிட்டு ஓட்டு போடாம போயிடாதீங்க...
டிஸ்கி 1: யாரும் நல்லாயில்லைனு சொல்லிடாதீங்க....
டிஸ்கி 2: அப்படி சொல்லமுடியாதே... அதான் அந்த மாதிரி ஒரு ஆப்சனே வக்கலை:))
காணாத உலகம்
-
1.
சிந்தனையுடன் கூடிய குரல்,
அதிகாரமான குரலை விட
வெகுதூரம் பயணிக்கும்.
2.
பூமியின் ஒவ்வொரு மூலையிலும்,
அமைதியான வியப்பில் ஆழ்ந்து நிற்க
ஒரு காரணம் உள்ளத...
1 day ago
