Showing posts with label எங்க ஏரியா. Show all posts
Showing posts with label எங்க ஏரியா. Show all posts

Mar 23, 2009

இது எங்க ஏரியா தைரியமிருந்தா உள்ளே வா -1



நானும் சென்னை வந்ததிலிருந்து இந்த போஸ்ட்டைப் போடனும்னு நினைத்திட்டு இருக்கேன் ஆனால் பாருங்க நேரமே இல்லை. சரி சரி மேட்டரை சொல்லிடறேன்.

எங்க பிளாட்ல குட்டீஸ் நிறைய இருக்காங்க. சாயந்திரம் ஒரு 7 மணில இருந்து 9 மணி வரைக்கும் இவங்க ராஜ்ஜியம் தான். நானும் பரிக்‌ஷித்த தூக்கிட்டு இவங்க எங்க எல்லாம் ஓடறாங்களோ பின்னாடியே போயிடுவேன். பரிக்‌ஷித்திற்க்கும் இது தான் பிடிக்கிறது. வீட்டிற்க்குள் இருப்பதை விட வெளில இருக்கறதை தான் விரும்பறான்:))

ஆனால் இதில் விசியம் என்னன்னா எங்க பிளாட்ல இருக்கிற மக்களை விட அவர்களின் குட்டீஸைத் தான் எனக்கு நல்லா தெரியும். இது வரைக்கும் மொத்தமா எவ்ளோ பிளாட் இருக்கு அதில் யார் இருக்காங்கன்னு சத்தியமா எனக்கு தெரியாதுங்க. கணக்கு போட்டுப் பார்த்தா ஒரு 8 வீடு தான் தெரியும்.

ஆனால் எல்லா குட்டீஸையும் நல்லா தெரியும். அவங்க அம்மாங்க எல்லாம் ஒரு நாள் கூட நம்ம பையன் விளையாடறான், பொண்ணு விளையாடறாள்னு மருந்துக்கு கூட எட்டிப் பார்த்ததில்லை. இத்தனைக்கும் அவங்க வேலைக்கு எல்லாம் போவதில்லை. வீட்டில் தான் இருக்காங்க. எப்பவும் வீட்டுக் கதவு அடைத்து தான் இருக்கும். அப்படி என்ன தான் பண்ணுவாங்களோ போங்க!!!

இதில் ஒரு வீட்டில் அவங்க குட்டி எப்பவும் வெளில நின்னு கதவை தட்டுவது தான் வேலையே.. ஆனால் அடைத்த கதவு அடைத்தது தான் திறக்கவே மாட்டாங்க.. இதை நினைத்து சிரிக்கறதா?? அழறதா??

சரி இது எல்லாத்தையும் விட்டுட்டு நாம இந்த மழலைகள் செய்யும் வாலுத் தனத்தை பற்றி பேசுவோம்..




வீக் எண்ட் வந்திட்டா போதும் அவ்ளோ தான் ஸ்கூல் விட்டு வந்ததிலிருந்து ஆரம்பிச்சா பசிக்கும் வரை ஓரே ஆட்டம் தான். இந்த வாரம் வெள்ளிக்கிழமை நான் 7 மணி வாக்கில் வீட்டினுள் இருந்து பரிக்‌ஷித்த தூக்கிட்டு வெளில வந்தேன். ஓரே மழலைகள் கூட்டம் இதில் ஆச்சரியமான விசயம் என்னன்னா படிக்கட்டுகளில் உட்கார்ந்திட்டு இருந்ததுதான் (ஏதும் செய்யாமல் உட்கார்ந்திட்டு இருப்பதுனா அதில ஏதோ இருக்கு அதாவது யாரோ வசமா அவங்க கிட்ட மாட்டிகிட்டாங்கன்னு அர்த்தம்). என்னதான் நடக்குதுன்னு பக்கதில போய்ப் பார்த்தா ஒரு அக்கா மாட்டிகிட்டாங்க எல்லோருக்கும் நடுவுல. எல்லோருக்கும் மெஹந்தி போட்டு விட்டுட்டு இருந்தாங்க. பாப்பாவுக்கும் போட்டு விடுங்கன்னு அதில் ஒரு பிஞ்சு பரிக்‌ஷித் கையைப் பிடிக்க இவன் வீல்னு கத்த அப்றம் அந்த குட்டியே தன் பந்தைக் கொடுத்து இவரை சமாதனப்படுத்தினதுதான் ஹைலைட்:)))

தம்பி பாப்பா விரலை வாயில் வைக்கும் அதனால வேண்டாம்னு சொன்னா என்னமா கேள்வி கேட்கிறாங்க... ஏன் வாயில் வைக்குது?? எதுக்கு?? நீங்க வேண்டாம்னு சொல்லுங்க இல்லைன்னா நான் சொல்லறேன்..(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:((() இன்னொரு குட்டி நானும் தான் வாய்ல விரல வைக்கறேன் நானெல்லாம் மெஹந்தி வைக்கலையா????

இல்லப்பா தம்பி மெஹந்தி போட்ட பிறகு வாயில விரலை வைத்தா இது எல்லாம் வயித்துக்குள்ள போகும் இல்ல அதான் - நான்

ஏன்????? வயித்துக்குள்ள போனா என்னா???? - குட்டீஸ்

வயிறு வலிக்கும் - நான்

ஏன் வலிக்குது???? அதெப்படி உங்களுக்கு தெரியும்??? தம்பி பாப்பா உங்க கிட்ட சொல்லுமா??? ஆனால் ஏன் என்கிட்ட மட்டும் தம்பி பேச மாட்டேங்குறா???

டிஸ்கி: இன்னும் நிறைய வால் தனங்கள் இருக்கு. அதையும் போட்டா பதிவு ரொம்பபபபப் பெருசா இருக்கும். இது வெறும் இன்ரொடக்ஸனா மட்டும் இருக்கட்டும் அடுத்த பாகத்தில மீதி.....