Showing posts with label கும்மி பதிவில்லை. Show all posts
Showing posts with label கும்மி பதிவில்லை. Show all posts

Dec 22, 2008

காதலுடன்...



சேகரித்திருந்த
கிழிந்த கிழமைகளில்
குவிஆடியாய்
உன்னைப்பற்றிய நினைவுகள்
பூதாகரப்படுத்தி பறக்கின்றன!




உனது பயண
முடிச்சுகளில்
நீ கொடுத்த ஆனந்தமும்
எனது சிரிப்புகளும்
பத்திரமாய் இருக்கிறது
உன்னருகில்...
நான் மறைத்து
வைத்துள்ள
நினைவுகளின்
சிறகுகளில்
உனது முகம் மட்டுமே!



எனது
விடியல்
உனது முகத்திலும்,
எனது உறக்கம்
உனது மார்பிலும்
சேர்ந்திருந்தது.
இப்போது உறக்கமும் விடியலும்
என்னிடமிருந்து
தனித்து,
தள்ளி நிற்கின்றன.



வேதனைகள்
எழுத்துகள் அறியாது,
விம்மல்கள்
வார்த்தைகள் வடிக்காது,
நெஞ்சம் கனப்பதை
கண்கள் உரைக்காது,
கண்கள் பனிப்பதை
கணவா நீ உணரு!!



நமக்கான நாட்களை
சேகரிக்கிறேன்
நீ வரும் நாளில்
உன் முகம் தெரியும்வரை!!!



இன்று நம்மை
இணைத்த நாளின்
மறுபிறவி..........
...................
..........ஆயினும்
சந்தோஷத்
தாண்டவமாடும்
மனதுடன்
ஆயிரமாயிரம்
முத்தங்களை
தேக்கி........
நம் காதல்
பரிசை
கையில் வைத்தபடி
பார்த்து நிற்கிறேன்
உன்னைக் காணப் போகும்
நாளைத் தேடியபடி!!!