வழக்கொழிந்த தமிழ் சொற்களைப் போடுவதற்காக விஜயும் ( இவரு நம்மலை ரொம்ப நாளைக்கு முன்னரே டேக் பண்ணிட்டார்.. நேரம் இன்மையால் நம்ம தான் பதிவு போடலை), அணில் குட்டி அனிதா-கவிதாவும் நம்மளை டேக் பண்ணி இருக்காங்கப்பு..
நானும் என் மண்டைக்கு எட்டிய வரை யோசனை பண்ணி பார்த்திட்டேன்.. நம்மலுக்கு தமிழ் வர்றதே தற்குறி இதுல எங்கிட்டு போயி வழக்கொழிந்த சொற்களை தேடிப் பிடிக்கறதுன்னு எனக்கு ஒரே பீலிங்க்ஸ்...
சரின்னு ஓசில வாங்கி வைத்த தமிழ் இலக்கண புத்தகம், அவசரத்தில புத்தி மழுங்கிப் போயி பக்கத்து வீட்டு பொண்ணோட 9ம் வகுப்பு வேதியியல் புத்தகம், அவள் தம்பியோட காமிக்ஸ் புத்தகம்னு வாங்கி புரட்டு புரட்டுனு புரட்டியதில் அதில் உள்ள 2 பக்கம் சிறிது கிழிந்ததுதான் மிச்சம்( போங்க ஆன்ட்டி உங்களுக்கு போனாப் போகுதுன்னு படிக்க என் புத்தகம் கொடுத்தா இப்படியா செய்வீங்க இனிமேல் புத்தம் கித்தகம்னு என்கிட்டே வந்தீங்க அவ்ளோ தானு மிரட்ட ஆரம்பிச்சிட்டான் பக்கத்து வீட்டு வீரன் அவன்கிட்ட இருந்து ஜகா வாங்கறதுக்குள்ள நமக்கு கிர்ர்ர்ருன்னு ஆயிருச்சு.. )
இது வேலைக்காவதுனு ஒரு முடிவுக்கு வந்து கடைசியா எங்க வீட்டு ரங்கமணி கிட்ட சரண்டர் ஆனேன்.. சரி நாம இதைப் பற்றி அப்புறமா விவாதிப்போம் இப்போ எனக்கு முக்கியமான வேலை ஒன்னு இருக்குன்னு சொல்லிட்டு சன் டிவில வடிவேல் காமெடி பார்க்க ஆரம்பிச்சிட்டார் சின்னப் பிள்ள தனமா..
கடைசியாக எங்கள் வீட்டு ரங்கமணியோட உட்கார்ந்து பேசியதில் சில வார்த்தைகள் இதோ..
பரண்- அந்தக் காலத்து வீடுகளில் வேண்டாத பொருட்களை ஸ்டோர் ரூமில் வைப்பது போல், மேலே மரத்தால் ஆனா சிலேபில் வைப்பார்கள் அதைத்தான் பரண், அட்டாலினு சொல்லுவோம்.. எங்க அம்மா வழித் தாத்தா வீடு ஓட்டு வீடு. வீட்டினுல்லேயே படிக்கட்டுகள் இருக்கும் பரணிர்க்குச் செல்ல.. சின்னப் பிள்ளையா இருக்கும் போது நான் அங்கு தான் ஒளிந்து விளையாடுவேன்..
இருமருங்கு- இருபக்கம்
திரிகை- கையால் சுற்றி தானியங்கள் அரைக்கும் கல்
அரசிலவு- மளிகைச் சாமான்கள்
புடிசாதகம்- பிடிவாதம்
சிய்யம்- இனிப்பான போண்டா
ஆக்குப்பாரை- சமையலறை
பொத்தான்-- பட்டன்
நம்மலும் சிலரை பதிவை தொடர சொல்லி மாட்டி விடனும் இல்ல..
ராமலக்ஷ்மி-முத்துச்சரம்
இராகவன், நைஜிரியா
நட்புடன் ஜமால்-கற்போம் வாருங்கள்
வால் பையன்
புதியவன்-வானம் உன் வசப்படும்
Feb 5, 2009
தொலைக்கப்பட்டவை...
எழுதியது
Poornima Saravana kumar
at
8:20 PM
46
கருத்துக்கள்
பதிவானது.. தொடர் விளையாட்டு
Dec 23, 2008
பட பட பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி விருது கிடைச்சிருக்குங்க. அட சத்தியமாத்தாங்க சொல்றேன் நம்புங்க. எனக்கு விருது கொடுத்த மாமனிதர், சிரிக்க வைக்கும் சித்தர் விஜய் அவருக்கு எனது நன்றிகள்.
இந்த விருதை பத்திரமா வச்சு பரிக்க்ஷீத்திற்கு காட்டலாம்னு இருந்தேன். ஆனா நீ மட்டும் வச்சு கிட்டா எப்பிடி பங்கு போட்டு கூலான பிளாக்கிற்கு கொடுத்திரனும்னு சொல்லிட்டாங்க.
வெட்டி வம்பு மாதிரியே புதிய பிளாகர்களை ஊக்குவிக்கும் படி 3 பேரை தேர்வு செய்திருக்கேன்..
புதியவன் - அழகழகான கவிதைகளையும் அதற்க்கு பொருத்தமான படங்களையும் போட்டு தாக்குபவர்.
சாளரம் கார்க்கி - இவர் இன்னது தான்னு இல்லாம என்ன வேணாலும் போட்டு கலக்கும் கலக்கல் மன்னர்.
ரம்யா - வைகைப் புயலை ஒரு வழி பண்ணாம விடமாட்டார் போல.
இவங்க 3 பேரும் செய்ய வேண்டியது
*இந்த பட்டாம்பூச்சி படத்த ப்ளாக்ல போட்டுடனும்.
*உங்களுக்கு பங்கு பிரிச்சுக் கொடுத்த இந்த நல்லவரை மறந்திடக்கூடாது.
*நீங்களும் என்னை மாதிரியே நல்ல மனதோட யாருக்காவது பங்கை சரியா கொடுத்திரனும்.
*லிங்க் எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக்கோங்க ( அட என் பிளாக்ல இல்லை உங்க பிளாக்ல).
டிஸ்கி 1: விஜய் நீங்க சொல்லாமலே உங்கள் ப்ளாக்கை எப்பிடி விளம்பரம்(2 முறை ) பண்ணி இருக்கேன்னு பார்த்திங்களா!!
டிஸ்கி 2:இந்த விளம்பரத்திற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரிவிக்கப்படுகிறது.
எழுதியது
Poornima Saravana kumar
at
9:58 PM
67
கருத்துக்கள்
பதிவானது.. தொடர் விளையாட்டு
