அப்பப்போ லீவ் போட்டுட்டு இருக்கேன்னு என் தம்பி கார்த்திக்கும்,Honey Roseம் இந்த என்னைப் பற்றிய பதிவுக்கு டேக் பண்ணி விட்டுட்டாங்க..
சரி உங்க விதிய மாத்த முடியாது அனுபவிங்கன்னு நானும் போட்டாச்சு:))))
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
பெருசா ஒரு காரணமும் இல்லங்க.. இது என் அத்தை வைத்த பெயர்.. ஆனால் பாருங்க விதி வலியது எனக்கு அவங்களை பிடிக்காது..
ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்:))
ஸ்கூலில் என்னை G.P.னு தான் கூப்பிடுவாங்க. இதுவும் பிடிக்கும்..
என் தம்பிக்கு போலவே எனக்கும் இன்னும் பல பெயர்கள் இருக்கு ஆனால் சொல்லமாட்டேனே :))
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
யாரைக் கேட்கறீங்க? என்னையா இல்லை எங்க வீட்டு ரங்கமணியையா?
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
கையெழுத்து நல்லா இருந்தா தலை எழுத்து நல்லா இருக்காதுன்னு எங்க ஆச்சி சொல்லி இருக்காக.. எனக்கு தலை எழுத்து சூப்பரோ சூப்பர்......
4. பிடித்த மதிய உணவு என்ன?
தயிர் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும், என் அம்மாவின் கத்தரிக்காய் கறியும்..
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நன்றாக பேசுவேன்.. அவ்ளோ சீக்கிரத்தில பிரண்ட் ஆயிடமாட்டேன்..
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
எனக்கு நீச்சல் நன்றாக தெரியும்.. சோ எங்க தள்ளி விட்டாலும் வந்திருவேன்:)
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள்.. பார்வையை வைத்தே சிலரின் எண்ணத்தை புரிந்து கொள்வேன்.
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
அடுத்தவங்க கிட்ட அவங்க மனசு கஷ்டப்படும்படி பேசிடமாட்டேன்.
அம்மாவிடமும் , என் துணையிடமும் யோசிக்காமல் கோபப்பட்டு பேசிவிட்டு பிறகு வருந்துவது:(
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
அவரை பிடிக்கும்.. அவர் செய்யும் எல்லாமும் பிடிக்கும், என் மீது கொள்ளும் கோபமும் பிடிக்கும்.
பிடிக்காதுன்னு சத்தியமா எதுவும் இல்லங்க..
ம்ம்ம்ம்ம் அவர் எனக்கு தெரியாம செய்யும் எதுவும் பிடிக்காது.. ஆனால் அப்படி செய்தாலும் சொல்லிடுவாக:)
10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
என் சகோதரி:(
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
Red with Black
12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
கண்ணத்தில் முத்தமிட்டால்-- சட்டென நனைந்தது இதயம்
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு
14. பிடித்த மணம்?
பரிக்ஷித்தின் வாசனை
15. நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
வெட்டிப்பயல் அண்ணா-- காரணம் அவர் எழுத்தும், என் மேல் கொண்ட பாசமும்
நாணல் .---- பிடிக்கும் காரணம் தெரியலை
விஜய்- காமெடியாக எழுதுவது நல்ல நண்பர்
சஞ்சய் அண்ணன்-- பிடிக்காது காரணம் என்னை அநியாயத்துக்கு திட்டி கமெண்ட் போடுவது :(
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
Roseன் கவிதைகள்:)
ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி!!
17. பிடித்த விளையாட்டு?
செஸ்
18. கண்ணாடி அணிபவரா?
இதை தெரிஞ்ச்சுக்கிட்டு என்ன செய்வீங்கன்னு முதல்ல சொல்லுங்க அப்புறம் நான் சொல்றேன்..( யப்பா புத்திசாலி தனமா ஒரு கேள்வி கேட்டாச்சு.. இதுக்குப் போயி மூளைய இந்த அளவுக்கு யூஸ் பண்ண வச்சிட்டாங்களே:()
19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
பேய் படம்னா ரொம்ப பிடிக்கும்:)
காதல், காமெடியும் பிடிக்கும்
20. கடைசியாகப் பார்த்த படம்?
கடைசியாக பார்த்ததுனா அருந்ததி
கடைசியாக பார்த்த புதுப் படம் குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்..
கடைசியாக தியேட்டரில் பார்த்தது தசாவதாரம்
21. பிடித்த பருவ காலம் எது?
குளிர்காலம்
(காலைல 7 மணி வரைக்கும் பெட்ஷீட்ட இழுத்துப் போர்த்திட்டு தூங்கும் சுகமே தனி! )
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இப்போதைக்கு நமக்கு அந்தளவுக்கு நேரம் இல்லைங்க..
23. உங்கள் டெஸ்க்டாப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
பரிக்ஷித்த போட்டோ புடிக்கும் போது எல்லாம் ::))
24. பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பரிக்ஷித்தின் உர்ர்ர்ர்ர்ர்ர்ர் சத்தம்:)
எங்கள் எதிர் வீட்டுப் பெண்மணியின் சத்தம் ( பிளாட்ல இருப்பவங்க உங்க எதிர் வீட்டில் குழந்தை ஏதும் இருந்தால் கூடுமானவரை உங்கள் தேவையில்லாத சத்தத்தை குறைத்துக் கொள்ளுங்கள் ப்ளீஸ்:( )
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
Delhi
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
நிறைய்ய்ய்ய இருந்துச்சு இப்போ மறந்து போச்சு):
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
என்னையும் ஒரு மனுஷியா மதிச்சு டேக் செய்திருப்பது!!!
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
நானே............ஒரு நல்ல பொண்ணு என் கிட்ட இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்கப்பிடாது..
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ஊட்டி ஊட்டி ஊட்டி
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
புரியலையே...
31. கணவன் செய்ய விரும்பும் ஒரே காரியம்?
அவரில்லாம நான் மட்டும் தனியா சமையல் செய்யனும்னு தான் நினைக்கறேன்:(
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்வது கொஞ்ச்ச காலம், இருப்பதை வைத்து சந்தோசமாய் இரு..
ஆதிமனிதனின் அருங்கதை - மனிதக் குரங்கு ( Chimpanzee )
-
#1
வாலில்லா மனிதக் குரங்கு, சிம்பன்ஸி. சிம்பன்சிகள் மனிதர்களுடன் 98% டி.என்.ஏ
(DNA) ஒற்றுமை பெற்றவை. மனிதர்களைப் போன்ற கை, கால், மற்றும் முக அமைப்பைக்
...
12 hours ago
100 கருத்துக்கள்:
பதில்கள் 2 & 3-ல் கொப்பளிக்கிறது குறும்பு:)!
அருவியில் நீச்சல் அடிக்க முடியாதுங்க, பார்த்து:)!
me the secondu :))))
//யாரைக் கேட்கறீங்க? என்னையா இல்லை எங்க வீட்டு ரங்கமணியையா?//
Good question.. renduthukkumae badhil sollidunga :))))
//கையெழுத்து நல்லா இருந்தா தலை எழுத்து நல்லா இருக்காதுன்னு எங்க ஆச்சி சொல்லி இருக்காக.. எனக்கு தலை எழுத்து சூப்பரோ சூப்பர்......//
LOL :))))))))
Artha raathirila post ezhudhina oru formla dhaan ezhudhuveengalo ;) aarambamae asathala iruku :)))))
//என் அம்மாவின் கத்தரிக்காய் கறியும்..//
avangalukku konjamaachum saapida kudunga.. ellathayum eduthukkapudaadhu.. okva :P
//நன்றாக பேசுவேன்.. அவ்ளோ சீக்கிரத்தில பிரண்ட் ஆயிடமாட்டேன்..//
Same pinch :)))
//எனக்கு நீச்சல் நன்றாக தெரியும்.. சோ எங்க தள்ளி விட்டாலும் வந்திருவேன்:)
//
Is Koovam ok for u?? Thallivida naan ready :P
//பார்வையை வைத்தே சிலரின் எண்ணத்தை புரிந்து கொள்வேன்.//
avaingala neenga?? rigthae :)))
//அடுத்தவங்க கிட்ட அவங்க மனசு கஷ்டப்படும்படி பேசிடமாட்டேன். //
Chooooooooooo chweeeeeeeeeeet :))))
//Red with Black//
DMK katchi kodi maadiri soldreenga ;)))
//சட்டென நனைந்தது இதயம்//
haiiiiiiiiiii.. my fav song :))))
//சஞ்சய் அண்ணன்-- பிடிக்காது காரணம் என்னை அநியாயத்துக்கு திட்டி கமெண்ட் போடுவது :(//
Aaha.. ungala romba thitraara? Sollunga.. avara undu illainu pannidalaam.. naan irukken unga supportukku :))))
//யப்பா புத்திசாலி தனமா ஒரு கேள்வி கேட்டாச்சு.. //
hello.. budhisaalithanama illa mokkaiyannu naanga sollanum :P
//கடைசியாக பார்த்ததுனா அருந்ததி
கடைசியாக பார்த்த புதுப் படம் குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்..
கடைசியாக தியேட்டரில் பார்த்தது தசாவதாரம்//
kadaisiya school friendsoda paathadhu.. kadaisiya college friendsoda paathadhu... ellam vittuteenga !!!
//காலைல 7 மணி//
ayyo ayyo.. enna kodumai idhu.. 7 mani kaalailaya?? adhuvum kulir kaalathula.. adhellam artharaathiringa :))))))
//நிறைய்ய்ய்ய இருந்துச்சு இப்போ மறந்து போச்சு)://
Ada.. nyaabagamaradhi dhaan unga thanithiramaingaradha ippadi suthi valachchu soldradhu ;))))
//என்னையும் ஒரு மனுஷியா மதிச்சு டேக் செய்திருப்பது!!!//
LOL :))))))
//31. கணவன் செய்ய விரும்பும் ஒரே காரியம்?/
Qn. thappu.. ozhunga innoru vaatti qn paper paarunga :)))
Sari.. neenga vandhu indha gummiya paathu tension aagaradhukku munnadi me the appeatu :))))))))
Have a nice gummi day ;)))))
//யாரைக் கேட்கறீங்க? என்னையா இல்லை எங்க வீட்டு ரங்கமணியையா?//
பாவங்க உங்க ரங்கமணி...
//எனக்கு நீச்சல் நன்றாக தெரியும்.. சோ எங்க தள்ளி விட்டாலும் வந்திருவேன்:)//
ரசிக்கக் கூடிய குறும்பான பதில்...
//அவரை பிடிக்கும்.. அவர் செய்யும் எல்லாமும் பிடிக்கும், என் மீது கொள்ளும் கோபமும் பிடிக்கும்.//
இதுக்குப் பெயர் தான் காதல்...
//பரிக்ஷித்தின் வாசனை//
அழகு...
//இதை தெரிஞ்ச்சுக்கிட்டு என்ன செய்வீங்கன்னு முதல்ல சொல்லுங்க அப்புறம் நான் சொல்றேன்..( யப்பா புத்திசாலி தனமா ஒரு கேள்வி கேட்டாச்சு.. இதுக்குப் போயி மூளைய இந்த அளவுக்கு யூஸ் பண்ண வச்சிட்டாங்களே:()//
ரொம்ப புத்திசாலித்தனமான பதில்...
//வாழ்வது கொஞ்ச்ச காலம், இருப்பதை வைத்து சந்தோசமாய் இரு..//
ம்...நல்ல பதில்...
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
யாரைக் கேட்கறீங்க? என்னையா இல்லை எங்க வீட்டு ரங்கமணியையா?\\
அழுதது எப்போதுன்னுதானே இருக்கு
அழ வைச்சதுன்னா இருக்கு ...
//பெருசா ஒரு காரணமும் இல்லங்க.. இது என் அத்தை வைத்த பெயர்.. ஆனால் பாருங்க விதி வலியது எனக்கு அவங்களை பிடிக்காது..
ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்:))
ஸ்கூலில் என்னை G.P.னு தான் கூப்பிடுவாங்க. இதுவும் பிடிக்கும்..
என் தம்பிக்கு போலவே எனக்கும் இன்னும் பல பெயர்கள் இருக்கு ஆனால் சொல்லமாட்டேனே :))
//
ஒரு பேருக்கு இவ்வளவு போரா ?? ஒரே அக்கப்போரல்லவா இருக்கிறது.
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நன்றாக பேசுவேன்.. அவ்ளோ சீக்கிரத்தில பிரண்ட் ஆயிடமாட்டேன்..\\
மெய்யாலுமா!
சோ எங்க தள்ளி விட்டாலும் வந்திருவேன்:)\\
அவரு ஏங்க உங்கள தள்ளி விடனும்
ஒ இந்த எக்ஸாம்ஸ் கொஸ்டீனு பேப்பர் பார்த்துதான் ஜுரம் வந்துப்போச்சா ரைட்டு :)))
சூப்பரூ !
//ராமலக்ஷ்மி said...
அருவியில் நீச்சல் அடிக்க முடியாதுங்க, பார்த்து:)!
//
ரிப்பிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!
14. பிடித்த மணம்?
பரிக்ஷித்தின் வாசனை\\
நல்லதாய் - நல்ல தாய் சொல்லியிருக்கீங்க ...
18. கண்ணாடி அணிபவரா?
இதை தெரிஞ்ச்சுக்கிட்டு என்ன செய்வீங்கன்னு முதல்ல சொல்லுங்க \\
நல்லா கேக்குறீங்கப்பா!
மேலே உள்ள 17 கேள்விகளுக்கு பதில் தெரிஞ்சி தான் என்ன செய்யப்போறோம்
பேய் படம்னா ரொம்ப பிடிக்கும்:)\\
ஹி ஹி ஹி
உங்க வீட்ல பெரிய பெரிய கண்ணாடி ...
20. கடைசியாகப் பார்த்த படம்?
கடைசியாக பார்த்ததுனா அருந்ததி
கடைசியாக பார்த்த புதுப் படம் குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்..
கடைசியாக தியேட்டரில் பார்த்தது தசாவதாரம்\\
எப்புடீங்க இப்படியெல்லாம் ...
கடைசியாகன்னா ஒன்னு தானே சொல்லனும்
நீங்க கொஞ்சம் பரவாயில்லை
மொழிக்கு ஒரு படமா சொல்லாம விட்டீங்களே
(காலைல 7 மணி வரைக்கும் பெட்ஷீட்ட இழுத்துப் போர்த்திட்டு தூங்கும் சுகமே தனி! )\\
அதுக்கு பிறகு அந்த பக்கமா திரும்பி தூங்குவீங்களோ
நல்ல வெயில் காலத்துலையே 7:30 தான் ...
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
நிறைய்ய்ய்ய இருந்துச்சு இப்போ மறந்து போச்சு):\\
மறதி கூட ...
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
புரியலையே...
\\
நல்ல தெளிவா இருக்கீக ...
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்வது கொஞ்ச்ச காலம், இருப்பதை வைத்து சந்தோசமாய் இரு..\\
அம்ணீ இது ரொம்ப டாப்புங்கோ ...
ஏழு மணி வரையா? நீ ரொம்ப ஆக்டிவோ?
//அம்மாவிடமும் , என் துணையிடமும் யோசிக்காமல் கோபப்பட்டு பேசிவிட்டு பிறகு வருந்துவது:(
//
அடப்பாவீகளா :)))))
///வாழ்வது கொஞ்ச்ச காலம், இருப்பதை வைத்து சந்தோசமாய் இரு..///
Amen! :)
கலக்கல்ஸ்!! :))
மத்தபடி நான் சொல்லவேண்டியதை எல்லாம் நிறைய பேர் சொல்லிட்டாங்களே!
me the 45!
நல்லா இருக்கு எல்லா பதிலும்!! ரொம்பதான் சேட்டை!!;;))
நட்புடன் ஜமால் said...
20. கடைசியாகப் பார்த்த படம்?
கடைசியாக பார்த்ததுனா அருந்ததி
கடைசியாக பார்த்த புதுப் படம் குங்குமப்பூவும் கொஞ்சும்புறாவும்..
கடைசியாக தியேட்டரில் பார்த்தது தசாவதாரம்\\
எப்புடீங்க இப்படியெல்லாம் ...
கடைசியாகன்னா ஒன்னு தானே சொல்லனும்
நீங்க கொஞ்சம் பரவாயில்லை
மொழிக்கு ஒரு படமா சொல்லாம விட்டீங்களே
:))))))))))))))))))))))))
mmmmm mmmmmmmmmmm nalla kelvi nalla pathilkal
vanthathuku oru 50 pottu poren
me they 520 me they 50 me they 50
//4. பிடித்த மதிய உணவு என்ன?
தயிர் சாதமும், உருளைக்கிழங்கு வறுவலும், என் அம்மாவின் கத்தரிக்காய் கறியும்..//
chips marakadeenga... Enakku nendravalli chips thaan!!
//5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நன்றாக பேசுவேன்.. அவ்ளோ சீக்கிரத்தில பிரண்ட் ஆயிடமாட்டேன்..//
appa naan illaiya??
//7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள்.. பார்வையை வைத்தே சிலரின் எண்ணத்தை புரிந்து கொள்வேன்.//
avar kannadi pothu irunda??
//அடுத்தவங்க கிட்ட அவங்க மனசு கஷ்டப்படும்படி பேசிடமாட்டேன்.//
namba mudiyavillai... villai villai..
//கண்ணத்தில் முத்தமிட்டால்-- சட்டென நனைந்தது இதயம்//
Mail me this song plz
//13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
கருப்பு//
Exam la Black pen eluda illaina ungakitha kethupeen
//14. பிடித்த மணம்?
பரிக்ஷித்தின் வாசனை//
ஜூப்பரு, டாப்பு...
17. பிடித்த விளையாட்டு?
செஸ்
ஆனா விளையாட தெரியாது... என்கிடா தோத்தட வெளிய சொல்லமாட்டேன்
//19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
பேய் படம்னா ரொம்ப பிடிக்கும்:)//
Purindu vithadu..
//21. பிடித்த பருவ காலம் எது?
குளிர்காலம்//
adhaan Saral ah?? சாரல்??
//26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
நிறைய்ய்ய்ய இருந்துச்சு இப்போ மறந்து போச்சு)://
irunda thaane veliya sonna.. epdi la samalikka vendi irukku
rounda oru 60
சின் பொண்ணு, ரொம்ப சேட்டையா பதில் சொல்லியிருக்கீங்க.
பரீக்ஷீத் அம்மா மாதிரி தெரியல, என்னவோ காலேஜ் கேர்ள் ரேஞ்சுக்கு இருக்கு ஆன்ஸர்ஸ்லாம்.
100-75 - கலக்கல் ;)
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நன்றாக பேசுவேன்.. அவ்ளோ சீக்கிரத்தில பிரண்ட் ஆயிடமாட்டேன்..
\\
good girl
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
அவரை பிடிக்கும்.. அவர் செய்யும் எல்லாமும் பிடிக்கும், என் மீது கொள்ளும் கோபமும் பிடிக்கும்
\\
அழகு
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
நிறைய்ய்ய்ய இருந்துச்சு இப்போ மறந்து போச்சு):
\\
eppady
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்வது கொஞ்ச்ச காலம், இருப்பதை வைத்து சந்தோசமாய் இரு..
\\
asaththitinga
//இது என் அத்தை வைத்த பெயர்.. ஆனால் பாருங்க விதி வலியது எனக்கு அவங்களை பிடிக்காது..
ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்:))//
அதாவது முன்பாதி பெயர் பிடிக்காது!
பின் பாதி பெயர் ரொம்ப பிடிக்கும் சரியா!
//யாரைக் கேட்கறீங்க? என்னையா இல்லை எங்க வீட்டு ரங்கமணியையா?//
அவரு உங்களோட ஒவ்வோரு கவிதையை படிக்கும் போதும் அழுவார்ன்னு எங்களுக்கு தெரியும்!
கேட்டது உங்களை!
//இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
Red with Black//
நீங்க தி.மு.க வா?
:-) 70th
அருமை... அருமை... அருமை...
சாரல் மழையில் நனைஞ்சது போல நல்லா இருந்தது.. மிகவும் சுவாரய்யமாக சொல்லியிருக்கின்றீர்கள்..
மிகவும் நிதானமாக ஒவ்வொரு வரியும் தவறாம வாசிச்சன்.. திழைச்சனான்..
நல்லா இருக்கின்றது...
சுவாரஸ்யமான பதில்கள்!
இனிமேல் வந்து அண்ணா பதிவு போட்டிருக்கேன், படின்னு சொல்லிப்பாரு.. உன் கை கால் எடுத்துடறேன். இதிலிருந்து ஒன்னு தெரியுது. நீ என் ப்ளாக் பக்கமே வரதில்லை.
பல நாள் திருடன் ஒருநாள்....... :))
ஆஹா...
அபூர்வமான கேள்விகள்
அற்புதமான பதில்கள்...
இத்துணை சிறப்பான பதிவை நான் இதுவரை கண்டதில்லை..
ஒரு தீவிர இலக்கியத்தின் முன் வாசிப்புக்குரிய தீர்க்கம் இப்பதிவினில் காணக்கிடைக்கின்றது.
மீ த 74 :)
me the 75th
சரியா 75 அடிச்சோமில்ல... நாங்கெல்லாம் யாரு...
// "நான் நானாகவே!" //
ஆமாம் நீங்க நீங்களாகத்தான் இருக்கணும்...
// என் தம்பிக்கு போலவே எனக்கும் இன்னும் பல பெயர்கள் இருக்கு ஆனால் சொல்லமாட்டேனே :)) //
ஆமாம் அதெல்லாம் வெளியில் சொல்லப்பிடாது... ரொம்ப தப்பு..
// 2. கடைசியாக அழுதது எப்பொழுது?
யாரைக் கேட்கறீங்க? என்னையா இல்லை எங்க வீட்டு ரங்கமணியையா? //
சரியாகக் கேட்டீர்கள்... பாவம் பரிக்ஷித் அப்பா...
// 3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
கையெழுத்து நல்லா இருந்தா தலை எழுத்து நல்லா இருக்காதுன்னு எங்க ஆச்சி சொல்லி இருக்காக.. //
நல்ல ஆச்சி... வாழ்க ஆச்சி...
// 6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
எனக்கு நீச்சல் நன்றாக தெரியும்.. சோ எங்க தள்ளி விட்டாலும் வந்திருவேன்:) //
அதானே... அதுக்காக யாராவது தள்ளிவிட்டுடப் போறாங்க பார்த்துகுங்க...
// 18. கண்ணாடி அணிபவரா?
இதை தெரிஞ்ச்சுக்கிட்டு என்ன செய்வீங்கன்னு முதல்ல சொல்லுங்க அப்புறம் நான் சொல்றேன்..( யப்பா புத்திசாலி தனமா ஒரு கேள்வி கேட்டாச்சு.. இதுக்குப் போயி மூளைய இந்த அளவுக்கு யூஸ் பண்ண வச்சிட்டாங்களே:() //
இருக்கு அதனாலத்தான் யூஸ் பண்றீங்க...
அதை ரொம்ப வேலைச் செய்ய வச்சுட்டாங்கன்னு நினைத்தால் ரொம்ப கஷ்டமா இருக்குங்க...
// $anjaiGandh! said...
இனிமேல் வந்து அண்ணா பதிவு போட்டிருக்கேன், படின்னு சொல்லிப்பாரு.. உன் கை கால் எடுத்துடறேன். இதிலிருந்து ஒன்னு தெரியுது. நீ என் ப்ளாக் பக்கமே வரதில்லை.
பல நாள் திருடன் ஒருநாள்....... :))//
என்னே ஒரு கொலை வெறி?
:-)
:-):-)
:-):-):-)
:-):-):-):-)
:-):-):-):-):-)
:-):-):-):-):-):-)
:-):-):-):-):-):-):-)
:-):-):-):-):-):-):-):-)
:-):-):-):-):-):-):-):-):-)
:-):-):-):-):-):-):-):-):-):-)
வாழ்த்துகள்!
உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.
உங்கள் வருகைக்கு நன்றி,
அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog
தமிழர்ஸின் சேவைகள்
இவ்வார தமிழர்
நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.
இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்
இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.
இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்
சிறந்த தமிழ் வலைப்பூக்கள்
Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.
This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.
"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்
சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.
நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்
:) எல்லா பதிலுமே short ad sweet ah நல்லா இருக்கு... :))
/*கையெழுத்து நல்லா இருந்தா தலை எழுத்து நல்லா இருக்காதுன்னு எங்க ஆச்சி சொல்லி இருக்காக.. எனக்கு தலை எழுத்து சூப்பரோ சூப்பர்......*/
LOL :)
/*அடுத்தவங்க கிட்ட அவங்க மனசு கஷ்டப்படும்படி பேசிடமாட்டேன். */
ரொம்ப நல்லதுங்க :)
/*விஜய்- காமெடியாக எழுதுவது நல்ல நண்பர்*/
அவர் எழுதி முடிச்சி ரொம்ப நாள் ஆச்சு.. இப்படி நீங்க அத படிக்காம மாட்டிகிட்டீங்களே :P
தெளிவான பதில்கள்
சுவாரஸ்யமான பதிவு
நான் ஏற்கனவே எழுதிட்டேன். நீங்க தான் பார்க்கலை :-)
hai poorni naan ungaluku en blogla oru avord koduthu iruken vanthu parunga
nalamaa poorni?
yenge poneenga?
உங்களுக்கு ஒரு விருது
வாழ்த்துக்கள்.
.http://blogravee.blogspot.com/2009/08/blog-post_26.html.
எங்கே இருக்கீங்க.
சின்ன ராஸாவுக்கு வாழ்த்துகள்.
சுவாரசியமான பதிவு.
Hai makka's,
ellarum epti irukkinga?
romba naatkalukku piragu indru thaan blog pakkame varen..
ellorodathum patika mutiyalai mannikkavum..
இனிய ஆங்கில புதுவருட வாழ்த்துக்கள்..
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
வருடக்கணக்கா காணாமல் போன எப்புடி
குட்டி ராஜா அப்டேட்ஸ் போட வேண்டியது தானே
நீங்கள் நீங்களாகவே ...
100க்கும் மேற்பட்ட பதிப்பகங்களின் அனைத்து புத்தகங்களும் நூல் உலகத்தில் வாங்க வாருங்கள்.. தற்போது 10% தள்ளுபடியில் கிடைக்கின்றன. மேலும், 500 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால் டெலிவரி முற்றிலும் இலவசம்...click me...
Post a Comment