Feb 2, 2009

முதல் காதல்



கடந்த சென்ற
ஒரு நிகழ்வு
இன்றும்.....

அதே பேருந்து நிலையம்
நான்
அன்று வந்திறங்கிய
பேருந்தில் இன்றும்....

அன்று நின்ற
இடத்தில்
இன்றும் நான்....

நீ அன்று வரும்
பேருந்து
இன்றும் அதே நேரத்தில்
அதே இடத்தில்
வந்து நிற்க!

இறங்கி வரும் நீ
உன் பூ முகச் சிரிப்பு
இதை
ஒருநாளும்
பார்க்கத் தவறியதில்லை
நான்!!

அன்று நடந்த
அனைத்தும்
இன்றும்
ஆனால்
நீ மட்டும்??

இன்றும்
உன் நினைவில்
நான்!!!

என்றாவதேனும்
நினைப்பாயோ
என்னை???