Feb 5, 2009

தொலைக்கப்பட்டவை...

வழக்கொழிந்த தமிழ் சொற்களைப் போடுவதற்காக விஜயும் ( இவரு நம்மலை ரொம்ப நாளைக்கு முன்னரே டேக் பண்ணிட்டார்.. நேரம் இன்மையால் நம்ம தான் பதிவு போடலை), அணில் குட்டி அனிதா-கவிதாவும் நம்மளை டேக் பண்ணி இருக்காங்கப்பு..

நானும் என் மண்டைக்கு எட்டிய வரை யோசனை பண்ணி பார்த்திட்டேன்.. நம்மலுக்கு தமிழ் வர்றதே தற்குறி இதுல எங்கிட்டு போயி வழக்கொழிந்த சொற்களை தேடிப் பிடிக்கறதுன்னு எனக்கு ஒரே பீலிங்க்ஸ்...

சரின்னு ஓசில வாங்கி வைத்த தமிழ் இலக்கண புத்தகம், அவசரத்தில புத்தி மழுங்கிப் போயி பக்கத்து வீட்டு பொண்ணோட 9ம் வகுப்பு வேதியியல் புத்தகம், அவள் தம்பியோட காமிக்ஸ் புத்தகம்னு வாங்கி புரட்டு புரட்டுனு புரட்டியதில் அதில் உள்ள 2 பக்கம் சிறிது கிழிந்ததுதான் மிச்சம்( போங்க ஆன்ட்டி உங்களுக்கு போனாப் போகுதுன்னு படிக்க என் புத்தகம் கொடுத்தா இப்படியா செய்வீங்க இனிமேல் புத்தம் கித்தகம்னு என்கிட்டே வந்தீங்க அவ்ளோ தானு மிரட்ட ஆரம்பிச்சிட்டான் பக்கத்து வீட்டு வீரன் அவன்கிட்ட இருந்து ஜகா வாங்கறதுக்குள்ள நமக்கு கிர்ர்ர்ருன்னு ஆயிருச்சு.. )

இது வேலைக்காவதுனு ஒரு முடிவுக்கு வந்து கடைசியா எங்க வீட்டு ரங்கமணி கிட்ட சரண்டர் ஆனேன்.. சரி நாம இதைப் பற்றி அப்புறமா விவாதிப்போம் இப்போ எனக்கு முக்கியமான வேலை ஒன்னு இருக்குன்னு சொல்லிட்டு சன் டிவில வடிவேல் காமெடி பார்க்க ஆரம்பிச்சிட்டார் சின்னப் பிள்ள தனமா..

கடைசியாக எங்கள் வீட்டு ரங்கமணியோட உட்கார்ந்து பேசியதில் சில வார்த்தைகள் இதோ..

பரண்- அந்தக் காலத்து வீடுகளில் வேண்டாத பொருட்களை ஸ்டோர் ரூமில் வைப்பது போல், மேலே மரத்தால் ஆனா சிலேபில் வைப்பார்கள் அதைத்தான் பரண், அட்டாலினு சொல்லுவோம்.. எங்க அம்மா வழித் தாத்தா வீடு ஓட்டு வீடு. வீட்டினுல்லேயே படிக்கட்டுகள் இருக்கும் பரணிர்க்குச் செல்ல.. சின்னப் பிள்ளையா இருக்கும் போது நான் அங்கு தான் ஒளிந்து விளையாடுவேன்..
இருமருங்கு- இருபக்கம்
திரிகை- கையால் சுற்றி தானியங்கள் அரைக்கும் கல்
அரசிலவு- மளிகைச் சாமான்கள்
புடிசாதகம்- பிடிவாதம்
சிய்யம்- இனிப்பான போண்டா
ஆக்குப்பாரை- சமையலறை
பொத்தான்-- பட்டன்

நம்மலும் சிலரை பதிவை தொடர சொல்லி மாட்டி விடனும் இல்ல..

ராமலக்ஷ்மி-முத்துச்சரம்

இராகவன், நைஜிரியா

நட்புடன் ஜமால்-கற்போம் வாருங்கள்

வால் பையன்

புதியவன்-வானம் உன் வசப்படும்

46 கருத்துக்கள்:

பழமைபேசி said...

Congrats &Thanks!!

இராகவன் நைஜிரியா said...

// Blogger பழமைபேசி said...

Congrats &Thanks!! //

என்னது இது கங்கிராட்ஸ்...

என்ன மாட்டிவிட்டதற்க்காகவா...

இராகவன் நைஜிரியா said...

ஏம்மா நானே சிவனே அப்படின்னு என்ன பதிவு எழுதுறதுன்னு தலை, கால் புரியாம தவிச்சுகிட்டு இருக்கச்ச..

வழக்கொழிந்த சொற்களுக்கு எங்க போவேன்..

நீங்களாவது தமிழ் நாட்ல இருக்கீங்க... எதாவது கண்டுபிடிச்சு எழுதலாம்..

ம்.. இன்னும் 15 நாளைக்கு நான் பதிவுலகத்திற்கு லீவு...

இராகவன் நைஜிரியா said...

ஏம்மா எம்மேல என்ன கோபம்...

எதுவா இருந்தாலும் நாம வெளியில பேசிக்கலாம்.

நான் உன் அன்பு அண்ணன் இல்லையா?

இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே..

இப்படி புலம்பவிட்டுவீட்டீங்களே...

நசரேயன் said...

நல்ல தகவல்

கோபிநாத் said...

பரண்,சிய்யம்,பொத்தான் இதை தவிர மீதி எல்லாம் இப்பதான் கேள்வி படுகிறேன் ;)

புதியவன் said...

புடிசாதகம், ஆக்குப்பாரை இது ரெண்டும் இது வரை கேள்விப் படாத வார்த்தைகள்...மற்றவை படித்த ஞாபகம் இருக்கு...

புதியவன் said...

//நம்மலும் சிலரை பதிவை தொடர சொல்லி மாட்டி விடனும் இல்ல..

ராமலக்ஷ்மி-முத்துச்சரம்

இராகவன், நைஜிரியா

நட்புடன் ஜமால்-கற்போம் வாருங்கள்

வால் பையன்

புதியவன்-வானம் உன் வசப்படும்//

ஆஹா...என்ன ஒரு நல்ல மனசு...டேக் பண்ணியாச்சுல முயற்சி செஞ்சுடுவோம்...

சந்தனமுல்லை said...

//புடிசாதகம்- பிடிவாதம்
ஆக்குப்பாரை- சமையலறை
//

புதிய பழைய வார்த்தைகள்.பூர்ணிமா!! :-) நல்ல பதிவு!

நட்புடன் ஜமால் said...

@சந்தனமுல்லை

அதே அதே

நானும் கூவிக்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

நானும் அறிவாளி தான்னு (அட உங்களத்தாங்க) நிருப்பிச்சிட்டீங்க.

நட்புடன் ஜமால் said...

அட நம்ம பேரும் போட்டாச்சா

நீங்க 3வது ஆளு

இதுக்கு மேலையும் நான் எழுதலைன்னாஆஆஆஆ

அ.மு.செய்யது said...

ஐ...சிய்யம் !!!!!!!!!

நட்புடன் ஜமால் said...

திரிகை - இந்த வார்த்தை பார்த்தவுடன்

ஒரு கதை ஒன்று ஞாபகம் வருகிறது.

சிறு வயதில் படித்தது.

முழுதா ஞாபகம் வரட்டும் எழுதறேன்.

அ.மு.செய்யது said...

பரண்,பொத்தான் மட்டும் பரிச்சயம்..மற்றதெல்லாம் புதுசு..

அ.மு.செய்யது said...

ஆனாலும் கடைசில மாட்டி விடப்பட்ட நம்ம கும்மி நண்பர்களுக்கு எனது
ஆழ்ந்த அனுதாபங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

\\அ.மு.செய்யது said...

ஐ...சிய்யம் !!!!!!!!!\\

வந்துட்டாரு ...

நட்புடன் ஜமால் said...

\\அ.மு.செய்யது said...

ஆனாலும் கடைசில மாட்டி விடப்பட்ட நம்ம கும்மி நண்பர்களுக்கு எனது
ஆழ்ந்த அனுதாபங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.\\

இரு கண்ணு - ஒனக்கும் உண்டு ஆப்பு

நட்புடன் ஜமால் said...

\\இராகவன் நைஜிரியா said...

ஏம்மா எம்மேல என்ன கோபம்...

எதுவா இருந்தாலும் நாம வெளியில பேசிக்கலாம்.

நான் உன் அன்பு அண்ணன் இல்லையா?\\

உங்களுக்கு ஏன் இந்த சந்தேகம்.

Muthusamy Palaniappan said...

If u would like to get to know more old Tamil words, read any of the Sangam literature books. By this way you can get countless words..!

Thank You,

வால்பையன் said...

என்னை சிக்கவிட்டதிலிருந்தே என் மேல எவ்வளவு காண்டுன்னு தெரியுது
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

வால்பையன் said...

சரி முயற்சி பண்றேன்

கார்க்கிபவா said...

// வால்பையன் said...
சரி முயற்சி பண்றே//

சகா அப்படியே நாம் மலையேறிபதுக்கப்புறம் பேசற தமிழ் வார்த்தையும் சேர்த்துப் போடுங்க

Muthusamy Palaniappan said...

you can also try to avoid words which are literally translated from english to tamil which in itself would help the existing words in tamil to be explored instead of the one that u might otherwise use., right?

thank you!

ராமலக்ஷ்மி said...

//இருமருங்கு
அரசிலவு
புடிசாதகம்
ஆக்குப்பாரை//

இவை யாவுமே எனக்குப் புதிது பூர்ணிமா. இனிப்பு போண்டாவை நாங்க ‘சுசியம்’ என்போம்.

அன்புடனே அழைத்தமைக்கு நன்றி!
எனக்குத் தெரிந்தவை யாவும் ஏறகனவே
எனை அன்புடன் அழைத்த அமுதாவின்
பதிவிலேயே பின்னூட்டமாய் பதிந்து விட்டேன்
பாருங்கள். முத்துலெட்சுமி பதிவிலும்..

ஈஸியா அங்கு போக லிங்க் எல்லாம் கொடுத்திருக்கேன், ஆமா. ஆகையால் அவசியம் பார்த்து மார்க் கொடுங்க:))!

Karthik said...

"தொலைக்கப்பட்டவை..."

apdiye unga perayum pothu irukalam.. online vandhu rombha naal aachu la..a dhaan!! :P

இராகவன் நைஜிரியா said...

// Muthusamy said...

If u would like to get to know more old Tamil words, read any of the Sangam literature books. By this way you can get countless words..!

Thank You,//

Thank you Muthusamy...

Will try

Vijay said...

பரண் எல்லாம் இன்னும் வழக்கொழியலை.

மற்ற வார்த்தைகளெல்லாம் ரொம்ப புதுசு. இந்தப் புது வார்த்தைகளைக் கண்டுபிடிப்பது பெரிய விஷயமில்லை. மறுபடியும் , இந்த வார்த்தைகளை வழக்கில் கொண்டுவருவதற்கு முயற்சிப்போம்.

சென்ஷி said...

நல்லாருக்குது தங்கச்சி...

Karthik said...

நல்ல வார்த்தைகள்..நல்ல பதிவு.
:)

Poornima Saravana kumar said...

// பழமைபேசி said...
Congrats &Thanks!!

//

இஃகிஃகி இஃகிஃகி

Poornima Saravana kumar said...

// இராகவன் நைஜிரியா said...
ஏம்மா நானே சிவனே அப்படின்னு என்ன பதிவு எழுதுறதுன்னு தலை, கால் புரியாம தவிச்சுகிட்டு இருக்கச்ச..

வழக்கொழிந்த சொற்களுக்கு எங்க போவேன்..

நீங்களாவது தமிழ் நாட்ல இருக்கீங்க... எதாவது கண்டுபிடிச்சு எழுதலாம்..

ம்.. இன்னும் 15 நாளைக்கு நான் பதிவுலகத்திற்கு லீவு...

//

தப்பில்லை லீவு முடிந்தும் கூட பதிவு போடலாம்..
நாங்க எல்லாம் !!

Poornima Saravana kumar said...

// இராகவன் நைஜிரியா said...
ஏம்மா எம்மேல என்ன கோபம்...

எதுவா இருந்தாலும் நாம வெளியில பேசிக்கலாம்.

நான் உன் அன்பு அண்ணன் இல்லையா?

இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே..

இப்படி புலம்பவிட்டுவீட்டீங்களே...

//

நோ நோ அழப்பிடாது அண்ணன் அழுதா தங்கச்சி மனசு தாங்காது :((

Poornima Saravana kumar said...

நசரேயன்

கோபிநாத்

புதியவன்

சந்தனமுல்லை

வருகைக்கும் கருத்திர்க்கும் நன்றி :))

Poornima Saravana kumar said...

// நட்புடன் ஜமால் said...
அட நம்ம பேரும் போட்டாச்சா

நீங்க 3வது ஆளு

இதுக்கு மேலையும் நான் எழுதலைன்னாஆஆஆஆ

//

ஆங் அது:))

Poornima Saravana kumar said...

// அ.மு.செய்யது said...
ஆனாலும் கடைசில மாட்டி விடப்பட்ட நம்ம கும்மி நண்பர்களுக்கு எனது
ஆழ்ந்த அனுதாபங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

//

அடுத்த முறை உண்டு ஆப்பு !!

Poornima Saravana kumar said...

// Muthusamy said...
If u would like to get to know more old Tamil words, read any of the Sangam literature books. By this way you can get countless words..!

Thank You,

//

Thank You:)

Poornima Saravana kumar said...

// வால்பையன் said...
சரி முயற்சி பண்றேன்
//

good:)

Muthusamy Palaniappan said...

ரொம்ப நாளைக்கு முன்னரே "டேக்" பண்ணிட்டார்...இதற்கு, முந்தி விட்டார், கடந்து விட்டார்...என நிறைய சொற்கள் தமிழிலேயே இருக்கிறதே... the very first thing in this title is to recollect the lost words...but it itself has a lot of other language words...do u get this contradiction?

All i say is, do not club other languages then, Tamil will take care of itself!

Thank You!

gayathri said...

ithu varai kelvi padatha varthaikal

ஹேமா said...

வணக்கம் பூர்ணி.பழைய சொற்களைத் தேடும் தொடர் உண்மையில் அருமை.நீங்கள் தேடிய சொற்களில் இருமருங்கு ,
பரண்,பொத்தான் மட்டுமே என்க்குத் தெரிந்தது.மற்றயவைகள் புதியவைகள்.அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி.வாழ்த்துக்கள்.

நட்புடன் ஜமால் said...

இப்படியெல்லாம் சீரியஸ் பதிவு போட்டா இப்படித்தான்

சாரல் அடிக்கும்.

நட்புடன் ஜமால் said...

\\gayathri said...

ithu varai kelvi padatha varthaikal\\

எல்லா வார்த்தையுமா?

நட்புடன் ஜமால் said...

\\Poornima Saravana kumar said...

// அ.மு.செய்யது said...
ஆனாலும் கடைசில மாட்டி விடப்பட்ட நம்ம கும்மி நண்பர்களுக்கு எனது
ஆழ்ந்த அனுதாபங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்.

//

அடுத்த முறை உண்டு ஆப்பு !!\\

கவலை வேண்டாம்

இந்த வார இறுதிக்குள் உண்டு அவருக்கு

Anonymous said...

நிறையப்பேர் எழுதிட்டாங்க, நானும் போடணும் மீதி ஏதாவது வார்த்தை இர்க்குமான்னு தெரியலை

அவன்யன் said...

Poornima,

Ungalaku eppadi Charal enra thalaipu ninaivuku vanthathu. see my blog

http://kathalukai.blogspot.com/