அழகு?????
அழகு என்பது????
மு.கு: படத்தை பார்த்திட்டு அப்படியே சொல்லீட்டும் போங்கப்பு..
Feb 26, 2009
பாருங்கப்பு....
எழுதியது
Poornima Saravana kumar
at
5:34 PM
40
கருத்துக்கள்
பதிவானது.. வகைபடுத்தப்படாதவை
Feb 24, 2009
அம்மாக்களே...
அமிர்தவர்ஷிணி, சந்தன முல்லை, இன்னும் மற்ற வலைப்பூ அம்மாமார்களே பரிக்ஷித்திர்க்கு 6 மாதங்கள் ஆயிற்று.. அவருக்கு சாப்பிட என்ன தரலாம்னு உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.. எங்கள் மருத்துவரிடமும் கேட்டிருக்கிறேன், இருந்தாலும் அனுபவசாலிகளிடம் கேட்டுக்கலாம்னு தான்..
எழுதியது
Poornima Saravana kumar
at
1:06 PM
47
கருத்துக்கள்
பதிவானது.. Parikshith, ஆலோசனை
Feb 20, 2009
ஒரே கொண்டாட்டம் தான் போங்க :)))
படம் மேல் கிளிக்கி பெருசாக்கி பார்க்க!
எல்லாம் சென்னை வந்த பிறகு எடுத்தது தான்.. நாங்க ரொம்ம்ம்ம்ப நல்லவியலாக்க..... க்க்க்க்க்க்க்க்க்கும்!!!
எழுதியது
Poornima Saravana kumar
at
4:51 PM
66
கருத்துக்கள்
பதிவானது.. Parikshith
Feb 18, 2009
குறுஞ்செய்தி கலாட்டா-2
இது எப்படி நம்ம கைக்கு கிடைச்சுதுன்னு தெரியாதவங்க இங்க போய் பாருங்க..
1) ஒரு பொண்ணு பஸ்ல சீட் இருந்தும் உட்காரவே இல்லை ஏன்???
ஏன்னா அவ பேரு அமராவதி
:))
2) அவளை
மறக்க நினைக்கும்
போதெல்லாம்
என் இதயம்
கேட்கிறது!
வேற சூப்பர்
பிகர உஸார்
பண்ணிட்ட போல!!
3) தனுஷ் : ஐயோ எல்லோரும் என் படத்த சிடில பாக்கறாங்களே:(
விஜய் : அட போய்யா, உன் படத்தையாவது சிடில பாக்கறாங்க என் படத்த போஸ்ட்டர்ல கூட பாக்கமாட்டேங்கறாங்க !!
4) பிரின்சிபால் : ஏன்டா லேட் ??
ஸ்டுடண்ட் : பைக் பஞ்சர் சார்.
பிரின்சிபால் : பஸ்ல வரலாம் இல்ல?
ஸ்டுடண்ட் : பஸ் வாங்கற அளவுக்கு வசதி இல்ல சார்!!
5) குங்குமம் இந்த வாரம்..
'அரியர் வைக்கும்
மாணவச் செல்வங்களுக்கு
பல்சர் பைக்'!!
டாக்டர் கருணாநிதி அறிவிப்பு...
'அரியர் தாண்ட
லைப்
அது இல்லாத உனக்கு
எதுக்கு வைப்'
டி.ஆர் ஆவேசம்..
'இந்த செம்மில் அரியர் இல்லாதவர்களுக்கு
வில்லு படம் டிக்கெட் இலவசமாக தருவார்'
விஜய் கொலை மிரட்டல்..
'சிக்சர் கூட அடிக்காம இருந்திருவேன்
அரியர் இல்லாம இருக்க மாட்டேன்'
மனம் திறக்கிறார் டோனி...
இந்த இதழ் உடன் B.E. சர்டிபிகேட் இலவசம்..
வாங்கிடுவீர்களா இப்போது விற்ப்பனையில் குங்குமம்!!!
எழுதியது
Poornima Saravana kumar
at
3:12 PM
112
கருத்துக்கள்
Feb 16, 2009
பறக்கத்தான் சிறகுகள்...
இதைப் படித்த (முதல் கவிதை)கணத்தில் தோன்றியது
ஏழை என்று
இடுப்பில் துண்டு கட்டி
கையை
நெஞ்சோடு கட்டாதே!
உழைப்பை உணவாக்கி
தடையில் தளராமல்
மனதில் முடியுமென
நிமிர்ந்து நில்!!
பென்சுக்காரும்,
பொமரேனியன் நாயிக் குட்டியும்
நாளை
உன்னிடத்திலும்..
எழுதியது
Poornima Saravana kumar
at
3:49 PM
37
கருத்துக்கள்
பதிவானது.. கவிதை
Feb 12, 2009
சென்னை பட்டணம்
ஸ்ஸ்ஸ்ஸ்யப்பா ஒரு வழியா சென்னை வந்து சேர்ந்தாச்சுங்க. பொங்கலை நம்ம ஊர்ல நல்ல படியா கொண்டாடி முடிச்சிட்டு கிளம்பிட்டோம்.. வந்துகூட 20 நாள் ஆச்சு.. பாவம் சென்னைல இருப்பவங்க எல்லாம் நாம இல்லாம ரொம்ப வருத்தப்படறதா கேள்விப்பட்டேன்.. அவங்க பாசத்தை நினைச்சு புல் அரிச்சு போய் வந்திருக்கேன்.. மக்கா எங்கிருந்தாலும் நல்லா இருங்கப்பு..
எனக்கு "மக்கானு சொன்னாவே என் தோழி கோமதி கோகிலா தான் நினைவுக்கு வர்றாள். அவ தான் எப்பவும் கிளாஸ்ல மக்கா மக்கானு சொல்லி கிட்டு திரிவா.
இப்போ எங்க இருக்கானு தெரியலை.. கோமதி கோகிலாங்கிறது 2 பேர் இல்லைங்க ஒருத்தியே தான்..
சரி அதை விடுங்க நீங்க நாம வந்த விசியத்தைப் பத்தி பேசுவோம். சென்னை வந்து சேர்ந்த கதையை கேளுங்க..
அட கேளுங்கப்பா
சரி சரி டென்ஷன் ஆவாதிங்க சொல்லிடறேன்
பொங்கல் முடிந்த ஞாயிறு காலை தான் கிளம்பினோம். காலை 9.40 க்கு கிளம்ப வேண்டிய விமானம் 2 மணி நேரம் தாமதம் என்பதால். கொஞ்சம் டென்ஷன் இல்லாம மெதுவாவே கிளம்பினோம். 10.30 க்கு எல்லாம் விமான நிலையத்திற்கு போய் சேர்ந்திட்டோம். ஒரு வழியா செக்கின் எல்லாம் முடிந்து வந்து உட்கார்ந்தாச்சு.. பரிக்க்ஷித்திர்க்கு பயங்கர தூக்கம். நான் அப்படியே தோளில் போட்டு தட்டி தூங்க வைத்திட்டேன். சரியா 10 ஆவது நிமிசத்தில எழுந்திட்டு ஒரே அழுகை. நான், மாமியார், அம்மா, பரிக்க்ஷித் அப்பானு மாறி மாறி தோளில் போட்டு தட்டி பார்த்திட்டோம் ம்ஹும் ஒன்னும் வேலைக்காவலை. சரி 11.30 ஆச்சு விமானம் வந்திரும் போய்டலாம்னு பார்த்தா, இன்னும் 1 மணிநேரம் தமாதம்னு சொல்லிட்டாங்க. போச்சுடா இன்னும் 1 மணி நேரம் குட்டிய வச்சிட்டு எப்படி சமாளிக்கறதுன்னு தெரியாம புலம்பிகிட்டு கிடந்தேன்..
விமானங்கள் வருவதையும், போவதையும், செடிகள் அசைவதையும் வேடிக்கை காட்டி ஒரு அரை மணிநேரத்தை ஓட்டிட்டோம். கடைசி அரை மணிநேரத்தில் கோவை விமான நிலையத்தையே கதி கலங்க வச்சிட்டார் எங்கள் வீட்டு ராஜா. என்ன செய்தாலும் அழறார். பசிக்குமோனு பால் கொடுத்தால் பாட்டிலை வாயில் வைக்காமல் தள்ளி தள்ளி விடறார். தூக்கிக் கொண்டு நடக்கிறோம், பேசுகிறோம், விளையாடுகிறோம் ஆனால் அழுகை மட்டும் குறையவேயில்லை.
கடைசியில் எனக்கும் அழுகை வந்து விட்டது.
ஒரு வழியாக விமானம் வந்து அதில் அமர்ந்தும் விட்டோம் அப்புறம் தான் அழுகை சிறிது குறைந்தது. அதுவும் சில நிமிடம் மட்டுமே. விமானம் ரன்வேயில் ஓடி மேலே பறந்தது எதுவுமே எனக்குத் தெரியவில்லை இத்தனைக்கும் நான் ஜன்னலோர இருக்கையே. என் மடிமீது நிற்க வைத்து வெளியே காட்டவும் சடாரென அழுகையை நிறுத்தி "ஆ", "ஊ" னு பேசியபடி சிரித்துக் கொண்டு குதிக்க ஆரம்பிச்சிட்டார். அப்புறம் அப்படியே என் மடியில் படுத்து தூங்கி சென்னையில் தரையிரங்கியதும் எழுந்தும் ஆச்சு..
மதியம் 3 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். யப்பா எங்களுக்கு விமானமும் வேண்டாம், பயணமும் வேண்டாம் இனி நாங்கள் சென்னை பட்டணத்தை விட்டு எங்கேயும் போவதாய் இல்லை. இந்தக் கொடுமைக்கு ஸ்லீப்பர் பஸ்சிலேயே வந்திருக்கலாம்னு ஆயிருச்சு. பரிக்க்ஷித்தின் முதல் சென்னை பயணத்தை எங்களால் என்றும் மறக்க முடியாது..
எழுதியது
Poornima Saravana kumar
at
5:21 PM
105
கருத்துக்கள்
பதிவானது.. Parikshith, அனுபவம், பயணம்
Feb 5, 2009
தொலைக்கப்பட்டவை...
வழக்கொழிந்த தமிழ் சொற்களைப் போடுவதற்காக விஜயும் ( இவரு நம்மலை ரொம்ப நாளைக்கு முன்னரே டேக் பண்ணிட்டார்.. நேரம் இன்மையால் நம்ம தான் பதிவு போடலை), அணில் குட்டி அனிதா-கவிதாவும் நம்மளை டேக் பண்ணி இருக்காங்கப்பு..
நானும் என் மண்டைக்கு எட்டிய வரை யோசனை பண்ணி பார்த்திட்டேன்.. நம்மலுக்கு தமிழ் வர்றதே தற்குறி இதுல எங்கிட்டு போயி வழக்கொழிந்த சொற்களை தேடிப் பிடிக்கறதுன்னு எனக்கு ஒரே பீலிங்க்ஸ்...
சரின்னு ஓசில வாங்கி வைத்த தமிழ் இலக்கண புத்தகம், அவசரத்தில புத்தி மழுங்கிப் போயி பக்கத்து வீட்டு பொண்ணோட 9ம் வகுப்பு வேதியியல் புத்தகம், அவள் தம்பியோட காமிக்ஸ் புத்தகம்னு வாங்கி புரட்டு புரட்டுனு புரட்டியதில் அதில் உள்ள 2 பக்கம் சிறிது கிழிந்ததுதான் மிச்சம்( போங்க ஆன்ட்டி உங்களுக்கு போனாப் போகுதுன்னு படிக்க என் புத்தகம் கொடுத்தா இப்படியா செய்வீங்க இனிமேல் புத்தம் கித்தகம்னு என்கிட்டே வந்தீங்க அவ்ளோ தானு மிரட்ட ஆரம்பிச்சிட்டான் பக்கத்து வீட்டு வீரன் அவன்கிட்ட இருந்து ஜகா வாங்கறதுக்குள்ள நமக்கு கிர்ர்ர்ருன்னு ஆயிருச்சு.. )
இது வேலைக்காவதுனு ஒரு முடிவுக்கு வந்து கடைசியா எங்க வீட்டு ரங்கமணி கிட்ட சரண்டர் ஆனேன்.. சரி நாம இதைப் பற்றி அப்புறமா விவாதிப்போம் இப்போ எனக்கு முக்கியமான வேலை ஒன்னு இருக்குன்னு சொல்லிட்டு சன் டிவில வடிவேல் காமெடி பார்க்க ஆரம்பிச்சிட்டார் சின்னப் பிள்ள தனமா..
கடைசியாக எங்கள் வீட்டு ரங்கமணியோட உட்கார்ந்து பேசியதில் சில வார்த்தைகள் இதோ..
பரண்- அந்தக் காலத்து வீடுகளில் வேண்டாத பொருட்களை ஸ்டோர் ரூமில் வைப்பது போல், மேலே மரத்தால் ஆனா சிலேபில் வைப்பார்கள் அதைத்தான் பரண், அட்டாலினு சொல்லுவோம்.. எங்க அம்மா வழித் தாத்தா வீடு ஓட்டு வீடு. வீட்டினுல்லேயே படிக்கட்டுகள் இருக்கும் பரணிர்க்குச் செல்ல.. சின்னப் பிள்ளையா இருக்கும் போது நான் அங்கு தான் ஒளிந்து விளையாடுவேன்..
இருமருங்கு- இருபக்கம்
திரிகை- கையால் சுற்றி தானியங்கள் அரைக்கும் கல்
அரசிலவு- மளிகைச் சாமான்கள்
புடிசாதகம்- பிடிவாதம்
சிய்யம்- இனிப்பான போண்டா
ஆக்குப்பாரை- சமையலறை
பொத்தான்-- பட்டன்
நம்மலும் சிலரை பதிவை தொடர சொல்லி மாட்டி விடனும் இல்ல..
ராமலக்ஷ்மி-முத்துச்சரம்
இராகவன், நைஜிரியா
நட்புடன் ஜமால்-கற்போம் வாருங்கள்
வால் பையன்
புதியவன்-வானம் உன் வசப்படும்
எழுதியது
Poornima Saravana kumar
at
8:20 PM
46
கருத்துக்கள்
பதிவானது.. தொடர் விளையாட்டு
Feb 2, 2009
முதல் காதல்
கடந்த சென்ற
ஒரு நிகழ்வு
இன்றும்.....
அதே பேருந்து நிலையம்
நான்
அன்று வந்திறங்கிய
பேருந்தில் இன்றும்....
அன்று நின்ற
இடத்தில்
இன்றும் நான்....
நீ அன்று வரும்
பேருந்து
இன்றும் அதே நேரத்தில்
அதே இடத்தில்
வந்து நிற்க!
இறங்கி வரும் நீ
உன் பூ முகச் சிரிப்பு
இதை
ஒருநாளும்
பார்க்கத் தவறியதில்லை
நான்!!
அன்று நடந்த
அனைத்தும்
இன்றும்
ஆனால்
நீ மட்டும்??
இன்றும்
உன் நினைவில்
நான்!!!
என்றாவதேனும்
நினைப்பாயோ
என்னை???
எழுதியது
Poornima Saravana kumar
at
10:50 PM
55
கருத்துக்கள்
பதிவானது.. கவிதை